வெள்ளி, ஏப்ரல் 16, 2021

காரணம் ஆயிரம்

 


கேளாத ஒரு செய்தி ஒன்றை கேட்டேன்,

விளங்காத ஒரு பாடல் பாடியே,

நம்பாத ஒரு கதையை சொன்னான்,

நம்பினால் தான் ஊரு சொந்தம் என்றான்,

பின் நம்பி, 

ஒரு நாள் விம்பி,

விரும்பி வெளி நடப்பும் செய்தேன்,

இருந்த போது என்ன நடந்ததோ,

இல்லை என்று சொன்ன போதும் அதே.


அவன் அற்புதம்  ஒன்றை நிகழ்த்தினான்,

நான் தீ குளிக்கும் நாளில்,

மழை கொட்டி தீர்க்க,

என் உயிர் அவனிடம் போய்,

மழையால் திரும்ப, என் உயிர் என்னிடத்தில் ,

மழையால் மயிரிலையில், என் உயிர் என்னிடத்தில் .

மயிரிலையில்அர்த்தமும் புரிந்தது,

இந்த மழை, லீலை மழை அல்ல,

இந்த மழை, காற்று அழுத்தத்தால் வந்த மழை,

காற்றுக்கு மன அழுத்தம் தரும் சமூகத்தில்,

எனக்கு வராமல் இருக்குமா ?

காற்று என் வசம் வாசம் வீசாமல் போனது , 

கவனமாய் , இலவசமாய், இன்னொருவனுக்கு.


அவசர உதவி செய்வான் என்பான்,

ஆபத்தில் அழைத்தேன்,

ஆயாசமா வந்தான்,

வருவதற்குள் , 

நான் ஆகிவிட்டேன், சாமியாக.


படித்து பார்த்து ,முன்ஜென்ம பாவம் என்றான்  ,

யோசித்துப் பார்த்தால், என் கர்மா என்பான்,

கருமத்திற்கு என்ன பெயர், 

என் கிரகம், என் நரகம் என்றான்,

காரணம் எதுவோ, 

என் நரகத்தால், இன்று எனக்கு சொர்க்கம், 


இருப்பவன் இருப்பான், 

இயலாதவனை இருப்பதாய் சொல்லி,

காப்பான் என்பான்.

காத்துவாக்குல காத்துவிட்டால் லீலை என்பான்,

இல்லையெனில்,

இதற்கு பெயர் திருவிளையாடல் என்பான்,

நம்பவில்லை என்றால்,

முன்னோர் செய்த குற்றம், என் பாவம் என்பான்,


என் பாவத்தில் விளைந்த வைரங்களே,

என் வரும்காலமே, 

நினைவில் வை, 

தோல்விக்கு  காரணம் ஆயிரம்,

உன் வெற்றிக்கு நான் தான் காரணம்

நம்பவில்லையா ,

உன் சாமி பட்டியலில் நானும் ஒருவன்.



-இவன்  

SP

 



கருத்துகள் இல்லை: