திங்கள், ஜனவரி 07, 2008

ஆச்சரிய குறி

உலகம் எங்கே போகிறதோ நியும் பயணி
மண்ணை உண்டால் நீயும் மண்ணை உன்
உணவை உண்டால் நீ வேறுபடுகிறாய்
உணவை உண்டவன் பைத்தியமா
மண்ணை உணவு என்றவன் புத்திசாலியா
உலகம் எல்லாம் ஒன்றை நாடி போக
என் இதயம் நாட்டை போற்றி பாட
உலகத்துக்கு நான் வித்தியாசமாக தெரிகிறேன்
உன் கருத்துக்கு நான் தலைஆட்டாத காரணத்தால்
உன் பேச்சுக்கு என் செவி சாய்க்காம்ல் போனது

இந்தியனாக வாழ்வேன் இந்தியனாக விழ்வேன் என்றேன்
சராசரி மனிதனின்
சராசரி சொல் இது
என் பேச்சில் கர்வம் இல்லை
என் செயலில் குற்றம் இல்லை
ஆனால்
உலகம் என்னை குற்றவாலியாய் பார்க்கிறது
என் பேச்சு கடுஞ்ச்சொல் ஆகிறது
நான் மதுவிற்கு கிறங்கி கிடந்தவேன் போல்
நான் மாதுவிருக்கு மயங்கி சென்றவன் போல்
நாளை நான் மாறுவேன் என்கிறது
தியதை தொட்டால் ...சுடும்சொல் அது
என்னை தொட்டது ஏன் ?

என் வளர்ச்சிக்கு அன்னிய ஏனிப்படி இருந்தால் தான் வளர்ச்சியா
வாழ்ந்து காட்ட முடியுமா என்று சவால் விடும் கூட்டம் தான் அதிகம் போராடி ஜெயிப்பதை விட
போட்டி இல்லா உலகில் ஜெயிக்கவே பலருக்கு அசை

பிறக்க ஒரு தேசம் பிழைக்க ஒரு தேசம் என்றால்
இங்க கவலை பட வேண்டியது
நாட்டின் நிலைமைய பார்த்த
இல்லை உன் இயலாமையை பார்த்த॥?

பாதையை நான் வகுக்கவில்லை
வகுத்த பாதையை தொடர்கிறேன் நான்
தொடங்கவில்லை நான்
தொடர்கிறேன் நான்
தொன்டனாய் பல பேர் சென்ற பாதையில்
பெரிதாய் ஒன்றும் நிகழவில்லை
நான் மார்தட்டி கொள்ள
உன்னை ஒப்பிடும் போது பெருமை தான்

பிறந்தேன் இந்தியனாக
வளர்ந்தேன் இந்தியனாக
சாதிப்பேன் இந்தியனாக
மடிவேன் இந்தியனாக
அது எப்படி முடியும் என்கிறான் ஆச்சரியமாக
கேவலமாக இருக்கிறது அவன் ஆச்சரிய குறிய கண்டு