வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

கோவில்

                              Monday காலையில்  உதயம்  ஆனது  டிக்கெட்  போட்டு  ஊருக்கு  போகணும்  என்று..ட்ரெயின்  டிக்கெட்  எனக்கு  சாதகமாக  2 டிக்கெட்  availability காட்ட ...எனக்கும்  என்  மனைவிக்கும்   போட்டு  விட்டேன்  .... அவளிடம்  கேட்காமலேயே  ...மாலையில் சீக்கிரமாக வீட்டுக்கு சென்றேன்  மனைவி  வரும்  முன்  சமைத்தும்  வைத்தேன் ....ஆச்சிரியமாக பார்த்தால்  ....இரவு  தூங்கும்  முன்  சொன்னேன் ....சொன்னதும்  பதறினால்    .."முடியவே  முடியாது  ...ரேவதியோட குழந்தைக்கு பர்த்டே  பார்ட்டி  இருக்கு ...கொன்னே  போட்டுருவா" என்றால்   ...மேலும்  பேசாமல்  தூங்கி விட்டோம்  ....Friday morning நி  வரணும்னு நினைக்குறேன் அப்புறம் உன் இஷ்டம் ...நான்  கிளம்பறேன் " என்றேன்  .. "சான்சே  இல்லை ....நீங்க  போங்க ...நான்  பார்த்துக்குறேன் "..."ok fine ...freea இருந்தா கால்  பண்ணு  .enjoy."...என்று  சொல்லி  விட்டு ....கடைசி  நிமிடம்  மணம்  மாறக்கூடும்  என்பதால்  அவள்  டிக்கெட் cancel செய்யாமலே இருந்தேன்  but வரல  . தனியாக  கிளம்பினேன்  return டிக்கெட் போடாமலேயே

திருநெல்வேலியில் இறங்கி  ...ஆட்டோகார்கள் ..."அண்ணே வெயில் மண்டைய பிளக்குது பேசாம ஆட்டோல வாங்க " "HighGround 120"..."அண்ணே சொந்த ஊருகாரன் 100   ஓகே " என்று பேரம் பேசி... ஆட்டோ  பிடித்து  சென்றேன் ....ஆட்டோவில்  போகும்  போது .."RMKV shift ஆயிருச்சு"  ... "பார்வதி  தியேட்டர்  மூடிட்டாங்க"  என்று  என்  ஊருக்கே  எனக்கே  அறிமுகம்  படுத்த கூணியே போனேன்  ...நடந்து  போகவே  விரும்பி  2km துரத்தில்  இறங்கி  நடந்தேன்  ...போகும்  வழியில்  பல  முகங்கள்  புதிதாய்  இருந்தாலும்  வெகு  சிலர்  என்னை  மறக்காமல்  இருக்க  ...அதில்  சிலரை   நான்  மறக்காமல்  இருந்தேன்  ....  "உன்  கல்யாணத்துல  பார்த்தது  அவங்க  எப்படி  இருக்காங்க?   ..அவங்க  வரலையா?"  ... என்று  அன்பாக  விசாரிக்க   ..."இல்லை  இல்லை   நான்  ஒரு  சின்ன  வேலையா  வந்தேன்"  என்றேன் ..."என்ன   தம்பி  இங்க  நம்ம  ஊருல  இருக்குறத  விட்டுட்டு  கன்னடகாரங்க  நடுவுல   இங்கிலீஷ்  பேசிட்டு  வாழனுமா?? ..சரி  தம்பி  நாளைக்கு  கடை பக்கம் வாங்க" என்று வரவேற்க... "கடை எங்க ?".. "நமக்கு என்ன தம்பி அதே இடம் தான் .." என்று விடைபெற்றார்  ...பள்ளி  பருவத்தில் மூடி  வெட்டி  என்னை  அழகு  ஆக்கியவர் ....அவர் தான் எனக்கு என் மீசை வளராத போதே வளர ஆசை ஏற்படுத்தியவர் ....

என்  தெரு  வழக்கம்  போல  அமைதியாய்   இருக்க  ....பூட்டை  திறந்து   உள்ளே  சென்றேன் ..எப்பொழதும்   நான்  வரும்  நேரத்தில்  கதவு  திறந்தே  இருக்கும்  ...செருப்பு  இடும்   இடத்தில  கூட . தூங்கி  இருக்கிறேன் .... இப்பொழுது   வீடு  முழுதும்  குப்பை ....வீட்டை  துய்மை   படுத்தினேன் . .... பக்கத்து  வீட்டுகார அண்ணன் நான்  வர  வேண்டும்  என்று  எதிர்பார்த்து  இருக்கிறார்  போல ....

"தம்பி  நல்லா   இருக்கீங்களா .....என்ன   தம்பி  பேசாம  இங்க  வந்துரங்க " என்றார்  " இல்லேன்னா  நான்  படிச்ச   படிப்புக்கு  இங்க  இருந்தா  ஒத்து  வராது " என்றேன்  ..."உங்க அப்பா  அம்மா  இருக்கும்  போது  வீடு  நல்லா  இருந்துச்சு   இப்படி  பாழடைய  போடாதிங்க உங்களுக்கு  ஆகாதுன்னு சொல்லுவாங்க ..பேசாம  வீடு  நல்லவிலை  சொன்னேங்கான நானே  வாங்கிக்கிறேன் " என்றார்  ....

தூக்கி  வாறி   போட்டது  ..."நீங்க  சொன்னத நான்  எங்க  அண்ணன்கிட்ட  போன  மாசம்  பேசினேன் '..".அப்பிடியா  oh விக்க  தான்  ஊருக்கு  வந்திங்களா  ...எவ்வளவுக்கு பேசி  இருக்கீங்க ? நான்  வேணும்னா  இப்போதைய  விலையோட  ஒரு  லட்சம்  அதிகம்  தரேன்  ...தெரிஞ்சவங்ககிட்ட  கூடுங்க ...தெரியாதவன்  கிட்ட  கொடுத்து  அவன்  apartment கெட்டி இருக்குற தண்ணி  எல்லாம் உறுஞ்சுருவங்க " என்று  சொல்லிக்கொண்டே  போனார் .  இடையில்  மறித்து   ...."இல்லை  எங்க  அண்ணன்  கொடுக்கவே   கூடாதுன்னு  சொல்லிட்டான்" என்றேன் ..... " அவருக்கு  இங்க  இருக்குற  நிலைமை  புரியல ....நானே  அவர்  கிட்ட  பேசுறேன் " என்றவாறு  நம்பர்  வாங்கிவிட்டார்  ...

எதிரே  இருந்த  வீடுகள்  apartment ஆகி  விட்டதை  உணர்ந்தேன்  ....சுற்றி  புதுமுகங்கள் .. Team பிரித்து  கிரிக்கெட்  கூட  ஆடி  இருக்கிறோம்  என்  வயது  கூட்டம்   இன்று  யாருமே  இல்லை  ...அவர்கள்  குடும்பமும்  வெளி ஏறி  விட்டதை  உணர்ந்தேன்   சிலர்  உலகத்தை  விட்டே  வெளி  ஏறி  விட்டார்கள்    வெகுசிலர்  கோவில்  நாடி  செல்லும்  வயதில்  இருந்தனர்  ...சில  பழைய  முகமோ  கழுகு  பார்வை  கொண்ட  முகங்கள் ... நாம்  என்று  மனம் மாறுவோம்  என்று எதிர் பார்க்கும் வியாபாரிகள் .... இன்னும்  சிலர்  எந்த  எதிர்பார்ப்பும்  இல்லா  முகங்கள்

சுத்தம்  செஞ்சு   ... பல  முகங்களுக்கு   தன்  முகத்தை  காட்டி  பொய்யாக  சிரித்து ... எத்தனை  முறை  சொன்னாலும்  என்னை  அழகு  ஆக்கிய  சிகை  அலங்கார  அண்ணனை ஞாபகத்தில் வைக்க   துளிகூட  அவசியமில்லா   மனித முகங்கள்  ..இது போன்ற  காரணத்தால்  தான்  என்னமோ  பிடிக்காமல்  ஊருலயே  இருந்துவிட்டால் என் மனைவி   ... ரேவதியை சில நேரம் திட்டி இருக்கிறாள் இருந்தும் அவள் குழந்தைக்கு பிறந்த தின பார்ட்டி முக்கியம் என்றால் ...

புருஷன்க்காரனக்கு  கால்செய்ய   மணம்  தோன்றிவிட்டது  போல .... என்  செல்  பேசி  துடித்த போது   ....எடுத்தேன்  ..." என்ன  உங்க  லவ்வர் பார்க்க  போகலயா ?"... "என்ன ?".."ஆமா  அவளை  பார்க்க  தானே  என்னை  விட்டுட்டு  போனிங்க ....for your information அவளுக்கு  நம்ம  பொன்னைவிட  4 வயசு  மூப்புலை  ஒரு  பொண்ணு  இருக்கா   so stop ur dreams ".... உன்னை  நான்  விட்டுட்டு  வந்தேனா  இல்லை  நான்  எக்கேடு  போன என்ன  ரேவதியின் குழந்தை bday  பார்ட்டி தான்  முக்கியம்  சொன்னேல  எப்படி  போகுது  bday "....
"fyi bday Sunday ...இப்போ  sat தான்  ஊருக்கு  போன நேரம்  காலம்  தெரியாதா ???...அங்க  Tim என்ன  morning 8 தானே ... Us la குளிரா ???".... "எங்க  ஊரு  Us  இல்லை  சுற்றி  பார்க்க  ஒன்னும்  இல்லை  ஆனா   நான்  சந்தோசமா  இருக்க  நிறைய  இருக்கு .. காலேஜ்  lecturer  ku   எத்தனை   தடவ  lecture எடுத்தாலும்  புரியாதே  .."செண்டிமெண்ட்  ராமானுஜம் சரி  காலையில  ரேவதிக்கிட்ட  பேசினேன்  வரும்  போது  உங்க  ஊருல  ஒரே  famous அல்வா  ஒரேஒரு   கிலோ  வாங்கிட்டு  வா "...."   சரவணன்  மீனாட்சி  பார்த்துட்டு  படுத்து   தூங்கு   எனக்கு  தோணுச்சுனா  வாங்குறேன் "...."இப்போ   என்ன  night show வா ...continue continue "...."இல்லை இல்லை டைம் இருக்குலே "

"அப்போ ...என்ன  குடும்ப  மலர்  கவிதை  படிச்சாச்சா  ..இல்லை இனிமேல் தானா?? ...ஒரு தடவையாவது  இங்க  கொண்டு  வந்தா  என்ன ...நான் படிச்சு நல்லா இருந்தா பேசாம ஒரு கவிதை புக்  போட்ட என்ன ??  ....அதுல  என்ன  இருக்கு  பொண்டடிகிட்ட உங்க  முன்னால்  so called காதலி  &காதல்  பத்தியே  சொல்லியாச்சு   but அந்த  குடும்ப  மலர்  diary காட்டமட்டேன்னு y telling ??.... பேசாம  காதலிச்ச உங்க  lover  கிட்ட  சத்யம்  பண்ணுநீங்களா  யாரு  கிட்டையும்  காட்டமட்டேன்னு ?    .....அதுக்கு  வாயுப்பே  இல்லையே ....பேசாதவ  கிட்ட  சத்தியம் எல்லாம் chance இல்லை ........ " இப்போ  உனக்கு  போர்  அடிச்சா  i can't help".... "நினைச்சேன் Sirக்கு  கோபம் வந்த்ருக்கும்னு ,,,ஓகே ஓகே  கூல் ,,,சிதம்பர ரகசியம் என்றும் ரகசியம் தான் "  ..."இப்போ என்ன பரோட்டா வா?? "....."ofcourse ok leaving bye"

கை ஏந்தி பவன் பரோட்டா, Night show Bombay தியேட்டரில் 10ருவை  டிக்கெட்டில் மேனேஜர்  குடும்பஸ்த்தன்   அப்பன்  என்றது  எல்லாம்   மறந்து  விசில்  அடித்து  பார்த்தேன்  மொக்க படம்  என்று  தெரிந்தும் ....    

ஞாயிற்றுக்கிழமை  வேப்பிலை  கொழுந்து  சாப்பிட்டு   எண்ணெய்  தேய்த்து  தொட்டியில்  குளியல் மொட்டை  மாடியில்  படிக்கிறேன்  என்ற  போர்வையில்  சைட்  முதல்  காதலி  நினைத்து  கவிதை  முதல்  dance வரை  ஆடியது  ஞாபகம் வர... நான் அழகன் என்று என்னையே நம்பவைத்த ஒரே இடத்துக்கு சென்றேன் ...முடிவெட்டும் கடைக்கு சென்றேன்.. இந்த நேரம் கூட்டமாய் இருக்கும் என தெரிந்து அந்த நேரமே போனேன். மக்கள் மாறவில்லை என கணக்கும் தவறாய் போனது இல்லை...கூட்டமாய் தான் இருந்தது ...  ஊர் நடப்பை ஒரு நாள் சண்டே முடிவெட்டி கொள்ளும் இடத்தில தெரிந்து விடலாம்...தெரிந்து கொண்டேன் சிலவற்றை ..மதியம்  உண்ணாமல்  தூங்க  ஆரம்பித்தேன்  கட்டில்  இல்லை தலையணை  இல்லை  தூக்கம்  நடுவில்  current சென்றது  இருந்தும்  தூக்கம் ....எழுந்த  நொடி  நிம்மதியாய்  இருந்தேன்  ... 5 நிமிடம்  எதும்  பண்ணாமல்   அமைதியா  இருந்தேன் ...சாயங்காலம்  அல்வா  வாங்கி  கொண்டு  ஊரை விட்டு கிளம்ப தயாரானேன்...கண்கள் எதையோ தேடியது ...யாரையோ எதிர்பார்த்தது ....அன்று கண்கள் சுற்றி அடித்து தேடியது போல....பேருந்துக்குள் கடைசி ஆளாய் ஏறினேன்.

 காலை  6 மணி  பரபரப்பாய்   மக்கள் பெங்களூர்'ல்   ... அதில்  நானும்  ஒன்றாய்  சேர்ந்து  ...வீட்டுக்கு  சென்றேன்  யாரும்  இல்லை  ...மனைவி ஆபீஸ்  சென்றால்  குழந்தை  play ஸ்கூலில்  ....சாவி  இருந்தால்  குளித்துவிட்டு  ஆபீஸ்  சென்றேன்  ...  monday காலையிலேயே   எல்லாரும்  வேலை  பார்க்காமல்  Vila  cheap ஆக  இருக்க  அதை  வாங்க  ஆலோசனை செய்ய  ..."பொண்ண  பெத்தவனே  என்ன   Vila ஒகேவா  1.1 தான் மேனேஜர் நீயா வாங்கலேனா  நாங்க எல்லாம் எங்க போவோம் "... "சொல்லிட்ட்டேல கண்டிப்பா வாங்கலாம் " என்றேன்  ....

மாலையில்  மனைவி  வந்தால்  விவரம்  கேட்டாள்...அதே புராணம் மீண்டும் சொன்னேன்  அவள் புதிதாய் கேட்பது போல கேட்டாள் ,,,,
அல்வா  மட்டும்  ஆபீஸ்க்கு    இவ்வளவு வீட்டுக்கு இவ்வளவு  என்று  பிரித்தால்  ....  இரவில்  Villa மேட்டர்  பற்றி  சொன்னேன்  ..."Ho  superb  Villa will b fantastic ...apartment போர் ... கண்டிப்பா  வாங்கலாம் "  என்று .... கேட்டு  கொண்டு  இருந்த  குழந்தை  கேட்டால்  "புது  வீடா !! .... அங்க   போயிருவோமா  ??".... "இல்லை   இது  தான்  உனக்கும் ஸ்கூல்  பக்கம்  ஆபீசும்  எங்களுக்கும்  பக்கம் ....அது  லீவ்  டைம்லே..." என்று விளக்கம் அளித்து  தூங்கினோம்.

எனக்கு மட்டும், இன்றைய  நிலவரபடி பெங்களூர்இல்   மட்டும்  1 வீடு  ...இப்போ ஒரூ  Villa சேர்த்தாச்சு  .... சத்தியமா  நாளை என்  ஒரே  குழந்தைக்கு  தெரியாது  தெய்வம் வாழ்வது எந்த கோவிலில் என்று ...

====
By
SP
===




Moral and Inspired From :


'அப்படி எல்லாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசாதீங்க ... ஊரு எல்லாம் இந்த மாதிரி நிறைய சாமி இருக்கு "  - கமலஹாசன்

"நிறைய கோவிலும் இருக்கு "  -SP

செவ்வாய், மே 01, 2012

துணையெழுத்து




எழுத்தாளன் என் தந்தை அல்ல என் தாயும் அல்ல. எங்கள் குடும்பத்தில் 
எழுத்தாளர்கள் யாரும் இல்லை அவர்கள் எழுதியது எல்லாம் வீட்டு பாடமும், வரவு செலவு கணக்கும் தான். என்னுள் எழுத்து வந்தநாள் சரஸ்வதி பூஜை அன்று மஞ்சள்நிற ஓலையை வைத்து முதன் முதலாக படித்த அ ஆ தான் , எழுதியது ஏதோ ஒரு மந்திரத்தை அறிவை அளிக்க இறைவனிடம் வேண்டி. இறைவன் திருவிளையாடலில் சிவாஜிக்கு அளித்தது போல எனக்கும் அதிசயமாய் தந்தார் என்று அம்மா இன்றும் சொல்லிக்கொண்டு இருப்பாள்.

இன்று சரஸ்வதி பூஜை ,

நான் கௌரி பதிப்பகம் முலமாக வெளியிட்ட "SPயுடன் நான்", "சப்பமேட்டர்", "தெருநாயகன்" "நான் ஒரு சாடிஸ்ட்டா ?" என்ற புத்தங்களை என் மனைவி அடிக்கிவைத்த போது தான் , சிறு வயதில் Maths புத்தகத்தை கடைசியில் வைத்து தமிழ் "புக்" ஐ முதலில் வைத்தது ஞாபகம் வர…”எதுக்கும்மா சரஸ்வதி பூஜையில் ஸ்கூல் "புக்" ஐ வைக்கிறோம் ? ” என்று வினவினேன் “டேய் எங்க அம்மா சொன்னா நாங்க கேட்போம் இப்படி கிறுக்குத்தனமா கேள்வியெல்லாம் கேட்கமாட்டோம் ” . .கேட்டுகொண்டே இருந்த என் அப்பா சொன்னார் “உனக்கு வேலை தலைக்கு மேல இருந்தா அவன் கேட்கிறதுக்கு பதில் தெரிஞ்சுக்கிட்டேதெரியாத மாதிரி பேசாத ” . .”இங்க பாருங்க இவன் கேட்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது அம்புட்டு கேட்குறான் ” “நி சொல்லாட்டி என்ன அப்பா நீ சொல்லுபா ” “டேய் சாமி வந்து உன் "புக்"கை இன்னிக்கி படிக்கும் நாளைக்கு நீ படிச்சத மறந்தாலும் சாமி help பன்னும்டா ” “அப்பா அப்போ நாம படிக்க வேண்டாமா பா ?” “லூசு பயலே ஒழுங்கா சாமி கும்பிடு ஒழுங்கா படி ” என்றால் அம்மா ,,," இரு மா ஒரு நிமிஷம்" என்றவாறு Maths புத்தகத்தை முதலில் வைத்து ..தமிழை கடைசியாய் வைத்தேன் …என்னமோ தெரியவில்லை சரஸ்வதி தேவி Maths படித்து குழம்பிவிட்டால் போல…எனக்கு எந்த பரிட்சைக்கும் உதவவில்லை என் முன்னே அமர்ந்த மேரி தான் உதவினால் …இப்படி தான் சாமி help பண்ணுமோ ?…தமிழை கடைசியாய் வைத்தால் அதுதான் என் வாழ்க்கை ஆனது. வேண்டாம் என்று சொல்வது தான் வாழ்க்கை ஆகிவிடும் போல.

இன்று என் சப்பமேட்டர் முதலாய் வைத்தேன் , சரஸ்வதி தேவி படித்து விட்டு நாளை எனக்கு உதவட்டும் என்று வைத்த போது ,அன்று Maths படித்து குழம்பிய சரஸ்வதி தேவி இன்றும் அவளை குழப்ப முதல் வெளியுடு சப்ப மேட்டர் வைத்தேன் என்று தவறாக சாமி எண்ணி என்னை விரைவில் பழிக்கு பழி வாங்க கண்ணை குத்த கூடும் . சப்பமேட்டர் படித்து அன்றுமுதல் எந்த படைப்பையும் தந்தை படிப்பது இல்லை அவருக்கு சாமி help பண்ண இதுவே என் கடைசி கதை
 யாய் இருக்கட்டும் என்று எழுத ஆரம்பித்தேன் என் சுயசரிதையை 

தமிழ் என் மூச்சு ...சொல்லும் செயலும் தமிழ் ...கண்ணதாசன் எழுத்தை கண்டு மயங்கி வந்தவன் என்று எல்லாம் இல்லை. தமிழ் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் பேச மட்டும். ஆங்கில வழி கல்வி முலமாக தமிழை பயின்று. கெட்ட வார்த்தை கூட கற்றவன் தமிழில் இருக்கும் எதுகையும் மோனையும் சேக்கிழாரியும் திருவள்ளுவரையும் மனப்பாடபகுதிக்காக மட்டுமே படித்தேன் .தமிழ் எழுத்து எழுதி விட அழகு தான் என் கைஎழுத்தினாலும் எழுதியதால் அர்த்தமற்று போனதாலும் தமிழ் அறவே வேண்டாம் என்று தீர்மானித்தேன் . பதினொன்றாம் வகுப்பில் "French” எடுத்து படித்தேன் . சொல்லி வைத்தார் போல “Bonjour” என்று எழுதி “200/200” எடுத்தேன் .

கல்ல்லுரி காலம் வசந்த காலமே ….காதல் வரும் அதற்காக முன்னமே தயார் படுத்தி கொள்ள முன்னேற்பாடு செய்தேன் . பெண்கள் விசயத்தில் மனம்தன் அல்ல . ஆதலால் சீனியர்கள் தாங்கள் காதலை தெரிவிக்கவே தபு சங்கர் எழுதிய " கெஞ்சல் வழி கல்வி " புத்தகத்தை படித்து ரூம்க்கு ஒரு கவிஞர் இருந்தனர் .நானும் விதிவிலக்கு அல்ல . கவிதை எழுதினால் காதலுக்கு உதுவுமே என்ற நல்நோக்குடன் எங்கள் அறையில் ஒரே கவிஞன் நான் ஆனேன். முதல் கவிதையை எழுதி முடித்தவுடன் முடிவு செய்தேன் கவிதை எழுதுவதுல்லாம் குதிரை கொம்பு அல்ல.. கதைகள் எழுதுவதுல்லாம் யானை சவாரி அல்ல எல்லாரும் வைரமுத்து தான் என்று. அன்று முதல் தோன்றுவது எல்லாம் எழுதினேன் பார்ப்பது எல்லாம் கவிதை கிறுக்கலாய் ஆனது . பிடித்திருக்கா பிடிக்கலையா தெரியவில்லை எனக்கு மட்டும் எதோ காப்பியம் ஒன்றை எழுதிவிட்டது போல மிதந்தேன். எழுதியதை நானே ரசித்தேன். கருத்து கேட்டால் என்னை "மன்மதன்" என்று அழைத்து விட்டு என் கவிதைகளால் அவர்கள் காதலுக்கு உதவி நான் "மாமா" ஆகி விட கூடதே என்றே மறைத்து வைத்தேன் என் நண்பர்கள் முன்னால்.

ரகசியமான கடிதம் படிக்க ஆசை எல்லார்க்கும்.திருட்டு தம் அடிப்பதை போல..ஒளித்து ஒளித்து வச்சு நான் மட்டும் ரசிச்சதை அவர்களில் சிலர் ரசித்தனர் ,,,சிலர் பெரிய ஆளுடா என்று போற போக்கில் சொன்னார்கள் …ஆண்கள் சிலதை ரசிக்க மாட்டார்கள் ..”பூக்கள் பூப்பதை … புறா பறப்பதை ..கதை கவிதைகள் உட்பட்டு எல்லாவற்றையும் …ஆண்களே ரசித்த போது பெண்களுக்கு பிடிக்காமலா போகும் என்றே என் காலர் ஐ எனக்கே அறியாமல் ஏற்றி கொண்டேன் .சில கவிதைகளை இரவல் கொடுக்கவே செய்தேன் நான் .நான் அன்று முதல் “மாமா ”வும் “மன்மதனும் ”ஆனேன் .

எனக்கு நானே விளம்பரம் பண்ண ஆரம்பித்தேன் …ஆங் ஆங்கே என்னால் முடிந்த அளவு ஹைகூ கிறுக்கலை பரப்பி வைத்தேன் ….எல்லாரும் பார்க்கும் படி எழுதுவது போல எழுதி யாரும் பார்க்காமல் எழுதியது போல நடித்து மேஜையில் வைத்து சென்றேன் என் கிறுக்கலை &கதையை … அதை உணவு வேலையில் படித்து விட்டு பாராட்டினார்கள் ஒருவரை தவிர .

கண்ணதாசன் பேத்தி அல்ல அவள் …அவளை impress பண்ண முன்னமே நிறைய try செய்தேன் எதுவும் நடக்கல …அது போல தான் கதையும் ஆனது …ஆனால் என்னிடம் நேரடியாக “நீங்க எழுதுறேங்க ஆனா பெருசா ஒன்னும் impact பண்ணலை …எழுத்துனா நச்சுனு இருக்கனும் ” என்று சொல்லிவிட்டு போனால் ...அதுவரை தமிழ் என்னை கௌரவ படுத்தும் காதலை தரும் என்றே இருந்தேன் …என்னை கேவல படுத்தியது …பிடித்த பெண் முன்னால் அவமானபட்டதை என்னால் ஜீரனக்கவே முடியவில்லை ஆதலால் இழந்த மானத்தை அவளுக்காகவே தமிழ் மூலமாகவே என்னை காப்பற்றிவிடவே “சப்ப மேட்டர் ” உன்னிப்பாய் எழுதினேன் ஒவ்வொரு வார்த்தையும் . எழுதி இம்முறை கர்வத்துடன் நேரம் இருந்தால் படின்னு சொல்லிவிட்டு சென்றேன். இம்முறை வந்தால் கருத்து எதுவும் சொல்லாமலே கொடுத்துவிட்டு போனால், சவாலில் தோற்றவர்கள் ஊமையாக செல்வார்கள் உண்மை ஆனது போல சென்றால், ஆனால் தோற்றால் என்று அவள் வாயாலே சொல்ல பேச்சு கொடுத்தேன் ”என்ன ஆச்சு ? ” என்றேன் ” இங்க பாரு ….நான் கருத்து சொல்லலை” ….”ஏன் ? ..பிடிக்கலைனா பிடிக்கலன்னு சொல்ற ..பிடிச்சா ஏன் பிடிச்சு இருக்குனு சொல்ல தயக்கம் ” என்றேன் …”plz கேட்காத ”…”இல்லை சொல்லு ” …”actually நீ வேற டைப்லே எழுதிருக்க …but இது கூட புரியல …என்ன சொல்ல வரன்னு கடைசி வரதெரியல ”….”என்ன சொல்றே ”…”seriously write a story which have a start and an end and a impact too…நேரம் கொடுத்து படிக்கிறேன் ..but ஒண்ணுமே இல்லை just வார்த்தைகள் ”…”நல்லது எது கெட்டதுன்னு தெரியாத குழந்தைக்கு கதை எழுதல நான் …அதுக்கு தான் 1000 நீதி கதை இருக்கே …நான் எழுதறது ஒருத்தனோட வாழ்க்கை ஒருத்தனோட feelings…நீயே சொலிட்ட இது வேற டைப்ன்னு ...actually இப்போ நி அட்வைஸ் பண்றது கூட எனக்கு என்னமோ borE அடிக்குது, நீ பேசுற அதுக்காக கேட்டுட்டு இருக்கேன் …வேற யாராவது இருந்தா போயிருப்பேன் "…” என்னது bore அடிக்கேறன்னா ? உனக்கே தெரியும் இந்த மாதிரி எழுதுறதுக்கு classலா 100 பேர் இருகாங்க ..உன்கிட்ட மட்டும் தான் சொல்ல தொனச்சு அதான் சொல்றேன் ”…”ரைட் மா …ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் இந்த கதை கண்டிப்பா ஊரே படிக்கிற மாதிரி நான் ரிலீஸ் பண்றேன் …நம்ம லவ் ஆரம்பம் ஆனதுக்கு இது தானே காரணம் ”…” wait a sec…நி ஏற்கனவே எழுதுன கதை ”… எங்கள் பேச்சு வேறாக தொடர்ந்தது என் காதலுக்கு அவள் மறுப்பே தெரிவிக்கவில்லை

என் குறைகளை சொன்னால் ..என் ஒவ்வாரு வரிக்கும் விளக்கம் கேட்டால் …"பிடிக்கல" "கரெக்ட் இல்லை" "superb" என்று வெறும் வார்த்தைக்காக கருத்து கேட்பது இல்லை ..உள்ளாரே புகந்து அலசி ஆராய்யானும் …எல்லா எழுத்துக்கு பின்னாலும் ஒரு எழுத்தாளனின் செய்தி இருக்கும் ஒவ்வாரு வரிக்கும் பின்னாலும் தனி கதை ஒளிந்துரிக்கும் அதை முன்னிப்பாய் கேட்டால்…

கருமாந்தர காதலை விட ஒன்னும் எழுதமாட்டியா என்றால் …எனக்கு தூக்கி வாரி போட்டது …”காதலைபத்தி எழுதாதவன் எவன் இருக்கான் ? சொல்லு " .. "காதல் தேவை தான் but அதுக்காக முதல் வரி முதல் கடைசி வரி வரை காதல்னா என்ன ? உனக்கு வேற தோணவே தோனாதா ?”….”என்ன ? என்னை பார்த்த 50 வயசு வைரமுத்துன்னு நினைப்பா “கருவாச்சி காவியம் ” எழுத ..”டேய் அடி வாங்குவே வைரமுத்து என்ன அது மட்டுமா எழுதுறாரு காதலும் தானே …..சரி விடு விடு ...உனக்கு வராதுன்னு எனக்கு நல்லா தெரியும் …சும்மா நான் கேட்டதுனால எழுதுவியோனு நினச்சேன் ,…கருமாந்தர காதலை மட்டுமே எழுது ...காதல் வாழ்க” என்று சொல்லி என்னை வேறாக சிந்திக்க வைத்தால் என் எழுத்தை மாற்றினால். காதலை என்னில் இருந்து பிரிக்க முடியாமல் காதலிக்காக காதல் இல்லாமல் கருத்துகளுடன் எழுதினேன் “தெரு நாயகன் ”… நான் இத்துடன் எத்தனையோ எழுதிவிட்டேன் ஒவ்வொன்றும் படித்தவள் …”தெரு நாயகன் ” ஐ தான் முதல் முறையாய் பாராட்டினால் … ஊரு பாராட்டிய போதும் அண்ணனோ அம்மாவோ எதிர்ப்பால் நட்போ காதலியோ பாராட்டும் போது தான் பறக்க தோன்றும் …பறந்தேன் முதல் முறையாக

சரி கதை தமிழ்னு இருக்காதா வாழ்க்கையை பாரு என்று எனக்கு full stop அப்போதைக்கு வைக்கவும் கற்று கொடுத்தால். வாழ்க்கை பயணத்தில் இங்கே அங்கே ஓடி வேலை சேர்ந்த மறுநொடி ஆரம்பித்தேன் எழுத்தை . எப்போ எனக்கு note pad கிடைக்கும் எப்பொழுது எல்லாம் நேரம் கிடைக்கும் அப்போதுல்லாம் கிறுக்க ஆரம்பித்தேன் .

“டேய் சப்ப மேட்டர் ஐ இன்னும் better ஆ எழுதி எனக்கு அனுப்பு என்று ” ஒரு நாள் mail அனுப்பினால்.…நானும் அதற்கு அழகாய் ஒரு ஆரம்பமும் அழகாய் ஒரு முடிவும் முன்னறே அவள் சொன்னது போல எழுதி முடித்து அனுப்பினேன் …அதை ஆனந்த விகடனின் கடைசி ஒரு பக்கத்துக்கு வரும் படி செய்தாள் …எனக்கு என்னமோ மாதிரி இருந்தது ,

இது தான் வாழ்க்கை என்று இருந்த என் நாட்கள் அன்று முதல் எழுத்துக்குள் சென்றது ,என் எழுத்து அவள் வரும் முன்னறே இருந்தது …ஆனால் அவள் வந்த பின்னே வேறாக சென்றது …அவள் என் வார்த்தைக்களும் வந்தால் என் வாழ்க்கைகுளும் வந்தால் .

ஒரு மாலை பொழுதில் …”என்னை பத்தி நினைச்சா எனக்கே சிரிப்பு வருது …” …”என்னை ஆச்சு ?”…”எனக்கு தமிழே பிடிக்காது …ஆனா இன்னிக்கி நான் ஒரு எழுத்துளான் நினைச்சா சிரிப்பா வரலா?? ….நம்ம பசங்களுக்கும் எது பிடிக்காதோ அதையே சொல்லி கொடுப்போம் ஓகே வா ?reverse technology கண்டிப்பா workout ஆகுது பாரு …அன்னிக்கி படிக்காத செய்கிழரா இன்று படிக்கிறேன் ...ஆமா உனக்கும் தமிழ் பிடிக்காதா ”….”பிடிக்காது ”…”wow sema combo…அப்போ எப்படி திடிருன்னு தமிழ் பிடிச்சது ?”…”என்ன விளையாடுறியா…என்கிட்ட எப்போ கேட்ட தமிழ் பிடிக்குமா இல்லை பிடிக்காதுன்னு ? ”…”என்ன சொல்றே …உனக்கு தமிழ் பிடிக்காதுனு சொன்னா அவன் லூஸ் தான் ” …”correct நான் லூஸ் தான் ….லூஸ் தனமா ஒரு விஷயம் சொல்லட்டா ”…”என்ன ஒரே suspense ?? ”…”எனக்கு தமிழ் பிடிக்காது ... எப்படி எழுதனாலும் பிடிக்காது ….நி எழுதுற ஸ்டைலும் பிடிக்கல ….எதுகை மோனையும் பிடிக்கல…”…”என்ன விளைய்டுற ”..”seriously உண்மை தான் சொல்றேன் …எனக்கு சுத்தமா தமிழ் பிடிக்காது ..தெரிய
 schoola ஓவரா அளவுக்கு மீறி படிக்க வச்சிட்டாங்க ..12th க்காக தமிழ் படிச்சேன் .அதுக்கு அப்புறம் தமிழா மட்டும் பார்த்தா கடுப்பா வரும்...…ஒரு சின்ன தப்புக்கு அப்படி அடி வாங்கிருக்கேன் ..அப்பா என்னை அடிச்சதே இல்லை ...இந்த தமிழ்னால எங்க அப்பாகிட்ட இருந்தே வாங்கிருக்கேன் .... அப்புறம் ஒரு கதை ஒரு கவிதை பார்த்தா கூட கடுப்பாவரும்....கிறுக்கு தனமாய் இல்லை ஒரு மொழி அதுவும் தாய் மொழி பிடிக்கலன்னு சொன்னா எல்லாரும் திட்டுவாங்க உண்மைய சொன்னா நம்ப மாட்டாங்க எனக்கே தோனுச்சு அப்படி இருக்க கூடாதுன்னு தான் சப்ப மேட்டர் கஷ்டுபட்டு படிச்சேன் " ,,,"Strange ...அப்படி எதுக்கு அதை படிக்கணும் ..பிடிக்காத விசயத்த எதுக்கு பண்ண?”….”ஆனா உன்னை எனக்கு பிடிச்சுருந்துச்சு …அதுக்காக தான் படிச்சேன் but ஒத்து வரல... so I applied reverse technology there?”…”wat?”…”ஆமா எனக்கு பிடிக்கலன்னு வந்து சொன்னப்ப உன் முகத்துல கோபம் வந்துச்சு …கோபம் தான் காதலை வளர்க்கும்னு நம்பிக்கை …so நி எழுதன எல்லாத்தையும் கஷ்ட பட்டு படிச்சேன் …ஆனா seriously எனக்கு interest இல்லை+பிடிக்கல.. எதுவுமே பிடிக்கல ”…”ஆனா உன்கிட்ட பேச அந்த topic விட்டா வேற இல்லை so ஒவ்வொரு வரி பத்தியும் கேட்டேன் ”….”தெரு நாயகன் ”…”எப்ப பார்த்தாலும் பிடிக்கல பிடிக்கலன்னு உன்னை சொன்னா ..வேற எவளாவது ரசிகைன்னு சொல்லிட்டு அவ பின்னாடி போயிருவனு பயம் வந்துச்சு so பொய் தப்பில்லை ”

“அடி பாவி ...என் எழுத்துல நி வந்தேன்னு நினச்சேன் இப்போ தான் ரொம்ப சந்தோசமா இருக்கு ஆனா என் துணைக்கு என் எழுத்து பிடிக்கலேன்னா …இப்பவும் சின்ன கோபத்துல சொல்றேன் …உனக்கு உண்மையலையே என்னை பிடிக்கமா போகணும் …ஆனா என் கதை பிடிக்கனும் …அந்த நாளுக்கு தான் wait பண்றேன் ”…”எனக்கு உன் கதை பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன …உன்னை பிடிச்சுருக்கு we are happy tats enough…y asking abt liking of ur hobby or profession or watever u name it?”.

By

SP

Inspired From

-> "மயக்கம் என்ன" By selvaraghavan

Moral

அழகான மொழியை வன்முறையாய் கற்று கொடுக்காதே