ஞாயிறு, டிசம்பர் 12, 2010

SPயுடன் நான்

வீடு ஆபீஸ் அவ்வபோது நண்பணிடம் பேச்சு எப்பொழுதும் தாயிடம் ஒரு உரையாடல் தம்பிக்கு சின்னதாய் அறிவுரை அப்பாவின் SB account ல் பணம் சேமிப்பு
இது தான் எனக்கு தெரிந்த வாழ்க்கை .எனக்கு பிடித்த நடிகர் ரஜினி அவர் படத்தை தவிர வேர் எந்த சுள்ளான் படத்தையும் திருட்டு டிவிடியில் கூட பார்ப்பது இல்லை. காலை அலாரம் வைக்காமலே எழுந்து, சொல்லி வைத்தார் போல அறை மணிநேரம் ஜாகிங் பின்னர், அறை மணிநேரம் சிகை அலங்காரம் , அறை மணிநேரம் பாபா மெஸ்ஸில் நம்ம ஊரு இட்லி, ஒரு வடை, அறை மணிநேரம் பயணம் ஆபீஸ்க்கு அங்கே ஏதோ அறை மனதாக வேலை, அறை வயிறு சாப்பாடு , 6 மணிக்கு என் பயணம் ஆரம்பம் வீட்டுக்கு ...எல்லா செயல்களும் எதிர்மாறாக ..ஆனால் அதே அறை மணிநேர பயணம் ..ஒரு சின்ன மாற்றம் 10 நிமிட நடை .. One Day வழிகளால் இந்த பயணம் கூடுதல் இலவசம் ..மொத்த மும்பையும் இடமே இல்லாமல் தத்தளிக்க என் தெரு வழி மட்டும் நிசப்பதம் ஆக காணபடும் ..எதோ காரணம் 7 மணிக்கே அந்த தெரு வேறுசோடி காணப்படும்.

எந்திரன் படம் வெளியானது ..அனைவரும் ரஜினி படத்தை பார்க்க முடியும் ஆனால் எல்லாரும் ரஜினிஆக முடியாது என்று நிருபித்தார் தலைவர் 200கோடியில்...முதல் நாள்
பார்க்கும் வெறியன் அல்ல ..பார்க்காமல் சேமிக்கும் கஞ்சன் அல்ல ...So 10வது நாள் நான் இரவு காட்சி முடித்துவிட்டு வந்துகொண்டு இருந்தேன் என் தெரு வழியாக.. மணி 1:00 am monday காலை என்னை வழிமறித்தார் ஒரு போலீஸ் ...நான் மர்ம மனிதன்.. இல்லை Psycho.. இல்லை திருடன் என்று கூட நினைத்து இருப்பர் போல ...பட டிக்கெட்டை தியேட்டர் வாசலிலேயே கிழித்து விட்டேன் ... கேள்வி ஒன்றும் கேட்காமல் .."aaj rath sath baje daravi station avo " (இன்று இரவு 7 மணிக்கு தாராவி ஸ்டேஷன்க்கு வந்துரு) என்றார் “Why’ என்றேன் ... எனக்கு ஹிந்தி புரியும் பேச அவ்வளவாக தெரியாது ..."Sab kal batayaga" (எல்லாம் நாளை சொல்வாங்க) என்றார் ...எதற்காக இருக்கும் என்று எனக்குள் மணகுழப்பம்

தனியாக நடந்தது ... அதுவும் இரவு 1 மணிக்கு நடந்தது குற்றமா ... இல்லை போன வாரம் சண்டை ஒன்றை சமதானம் செய்து வைத்த நண்பன் மீண்டும் சண்டை இட்டு
பிரச்சனை ஆனதா ...இல்லை காதல் புறாக்களை போன மாசம் என் சொந்த செலவில் அனுப்பி விட்டதை பற்றியா என்ற பல கேள்விகள் என்னுள் ...சராசரி மனிதனை மட்டும் இந்த உலகம் பாடாய்படுத்து ஏன் என்று தெரியவில்லை ...
இதை யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும் ..தலையும் புரியாமல் காலும் தெரியாமல் என்ன சொல்லி ஆறுதல் பெற என்று யோசித்தே அந்த இரவு முடிந்தது ...Monday
காலை அதே அரை நாள் வாழ்க்கை என்னை ஒவ்வாரு நொடியும் என் சிறு வயது முதல் நேற்றுவரை நான் செய்த ஒவ்வாரு தவறுகளை ஞாபகபடுத்த என் இன்றைய
வேலையும் தவறாய் போனது ...

மணி 7 ...நான் தாராவி போலீஸ் ஸ்டேஷன் முன்னால் ..உள்ளே சென்றேன் இது வரை எங்கள் பரம்பரையில் போலீஸ் வாசல்படி மித்ததே இல்லை ...பரம்பரை மரபுகளை உடைத்து எறிந்தவன் ஆனேன் ..சினிமாவில் வரும் ஸ்டேஷன்க்கும் நிஜத்துக்கும் நிறைய வித்தயசங்கள் ..இன்னும் கேவலமாக காட்சி அளிக்க ..யாரை பார்க்க எதை பற்றி பேச என்று தெரியவில்லை ... கொஞ்சநேரம் திருடன்
போலவே முழித்தேன் ..நல்லவன் இப்படி தான் கெட்டவன் ஆக மாறுகிறேன் போல ... அங்கே ஒருத்தர் என்னை அழைத்தார் ...நான் சென்றேன் நின்றேன் ..."Tu Bandra railways station ka pass rahethe na?"(நி பந்திரா ஸ்டேஷன் பக்கத்தில் இருப்பவன் தானே?)..."yes ji" என்றேன் ...என் பதிலை பார்த்துவிட்டு ..."tumara desi kya hai?"(உன் சொந்த ஊரு என்ன?)..."my father and mother at chenai" என்றேன் .."tu madarasi?" (நீ மதராசியா?)என்றார் "nahi சென்னை "(இல்லை சென்னை)என்றேன் .... "Madras Chennai ka difference kya hai"(மெட்ராஸ்க்கும் சென்னைக்கும் என்ன வித்தாயசம்) என்று கிண்டல் அடித்து கொண்டே சொன்னார் ..."Why called me sir" என்றேன் "Sab saBB bolega wait karo"(எல்லாம் உயர் அதிகாரி சொல்வார்) என்றார் ..அங்கே காத்துகொண்டே இருந்தேன் ..பல போலீஸ் உள்ளேயும் வெளியவும் போக ..யார் அந்த உயர்அதிகாரி என்று தெரியாமல் முழிக்க ...மணி 10

SP உள்ளே நுழைந்தார் களைப்பாக ...வந்தவுடன் அழைத்தார் காண்ஸ்டேபில் ஒருத்தரை ..அவர் வெளியே உடனே வந்தார் ...10 நிமிடத்தில் டி சென்றது உள்ளே ...பின்னர்
மீண்டும் காண்ஸ்டேபில் அழைக்க ...10 நிமிடத்தில் என்னை பற்றி பேசி இருப்பர் போல "bulo vo madarasi"(கூப்பிடு அந்த மதராசி) ... என்னை மதராசி என்றே அழைத்தனர் ..உள்ளே சென்றேன் ..அதே கேள்வி .."tumara desi kya hai"(உன் சொந்த ஊரு என்ன?)
இம்முறை SPயிடம் இருந்து.. "my father and mother at chenai"..என்றேன் "Madarasi bolona chahiya na phir kya bolanga hum sab.."(மதராசி என்று சொல்லாமல் வேற எப்படி
கூப்டுவாங்க) என்றார் SP எனக்கு சட்டு என்று கோபம் "Sir apka nam".."Mera nam Rajesh hai quoon koi problem hai?"(என் பெயர் ராஜேஷ் உனக்கு எதாவது பிரச்னையா)..."me apko ramesh nahi bolna chahiya na "(நான் உங்களை ரமேஷ் என்று சொல்ல கூடாது தானே ?) .."haan"(ஆமா) .."aisa me chennai hoon madarasi nahi"(அப்படி தான் நான் சென்னை ,, மதராசி இல்லை )என்றேன் ...அவர் சட்டு என்று "ஹோ நல்ல விளக்கம் டா இரூ உன்னை கவனிக்கிற விதத்துல கவனிக்குறேன் " என்றார் ..அப்பொழது தான் புரிந்தது அவரும் தமிழ் என்று ..."சார் தமிழா ? எதுக்கு சார் கூப்பிட்டு இருக்கீங்க ஒண்ணுமே புரியல " என்றேன் சட்டு என்று தோழனை
சந்தித்ததை போல அவர் அதை பொற்படத்தாமல் "ஹிந்தி தெரியுமா " என்றார் .."தெரியாது" என்றேன் .."எத்தனை   வருஷம் ஆச்சு  நி  இங்கு  வந்து "..."சார் 2 வருஷம் ஆச்சு ..என்  first போஸ்டிங்கே மும்பை தான் ".."2 வருசமா  இருக்க  ...ஹிந்தி  கத்துக்கமா  ஏன்  டா ..?." " இங்கிலீஷ்  போதும்  சார்  எங்க  வேணும்னா  வாழலாம்"..."நான் VIT Passout ...but வந்த  ரெண்டே மாசத்துல கத்துகிட்டேன் ."Be a roman in rome" என்றார் நான்  சந்தித்தது  "பல(ழ)  மொழி  கற்ற  வித்தகன் " என்று நினைத்தேன் ...

மீண்டும் என் மனசுக்குள் இருக்கும் அதை கேள்வியை தான் தொடுத்தேன் .."எதுக்கு சார் கூப்பிட்டிங்க " என்ற போது ...இப்பொழுது பொற்படத்தாமல் .."உன் வீடு எங்கே...உன் ஆபீஸ் எங்கே என்றார் "....பக்கத்தில் writer உட்கார்ந்து எழுதி கொண்டு இருந்தார் நான் சொல்வதை அனைத்தும் ...அவருக்கும் தமிழும் தெரிந்து இருக்கிறது ..ஒரு போலீஸ்க்கு எத்தனை மொழிகள் தெரிந்து இருக்கறது ...என்று நினைத்து கொண்டே " என் வீடு இங்க பந்திரா ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கு, வாடகை வீடுல தனியா தான் இருக்கேன் என் ஆபீஸ் "THANE" ..bus la than போறேன் வரேன் ..9 மணிக்கு போனா 7 மணிக்கு வீட்டுக்கு வந்த்ருவேன்" " எங்க புவா " என்றார் " வீட்டுக்கு போற வழியில பந்திரா ஸ்டேஷன் பக்கத்தில் பாபா மெஸ்ஸில் தான் சாப்பாடு” என்றேன் ..."சரி போனவாரம் புதன்கிழமை ஆபீஸ்க்கு போனியா".."போனேன் சார் "...என்றேன் .எதை பற்றி பேசுகிறேன் என்று புரியாமல் .."சரி அன்னிக்கி Night என்ன நடந்துச்சு” என்றார் .."அன்னிக்கி ஒண்ணுமே நடக்கல" என்றேன் ...."உண்மைய மட்டும் சொல்லு ..தெரிஞ்சத சொல்லு" ..."சார் எனக்கு ஒண்ணுமே புரியல சார் " என்ற போது சட்டு என்று என் செல்துடித்தது.."அவர் எடு ஆனா Attend பண்னாதே” என்றார் எடுத்தேன் "அம்மா cel" என்றது .. சரி இங்கயே பேசு என்றார் ..."டேய் எப்படி இருக்க போன் பண்ணுவேலா என்ன ஆச்சு என்றால்"...இன்று திங்ககிழமை என்றே மறந்துவிட்டேன் "இல்லை மா மறந்துட்டேன்.அம்மா நான் அப்பறம் பேசுறேன் ."என்றேன் ..."அப்படி எங்கடா இருக்க.".."இல்லை மா ஆபீஸ் மீட்டிங்ல இருக்கேன் வீட்டுக்கு போனவுடன் கூப்பிடறேன். “என்னது மீட்டிங்கா? ராத்திரி 11 மணிக்கு மீட்டிங்கா?.."ஆமா மா"..." டேய் ஒரூ முக்கியமான விஷயம் பேசணும் ...நீ நாளைக்கு evening கால் பண்ணு” என்றால். "சரி சரி " என்று cut செய்தேன்

"டேய் போலீஸ் ஸ்டேஷன்லே வச்சே ...அதுவும் ஒரு SP முன்னாடியே பொய் பேசுறா ..நீ எவ்வளவு கேடியா இருப்ப".."சார் நன் என்ன பண்ணுவேன் சார் .."3000 km தள்ளி இருக்குற அம்மா கிட்ட போலீஸ் ஸ்டேஷன் இருக்கேன் நான் சொன்னா என்ன நினைபாங்க சார் ..எதுக்கு போனா டா ?அவங்க கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன் சார் ..இங்க இருக்குற எனக்கே காரணம் தெரியல ...அதான் சார் வேறவழி இல்லாமல் சொல்லிட்டேன்"..."இப்போ உனக்கு காரணம் தான தெரியனும் .."உங்க பந்திரா ஏரியலா ராஜாஜி தெருலா ஒரு வீட்டுல 300 பவுன் திருட்டு போய்இருச்சு.. அது தான் கேஸ் ..இப்போ புரிஞ்சதா சரி இப்போ சொல்லு " ..."சார் யாரோ ஒரு வீட்டுல 300 பவுன் திருட்டு போச்சு என்னை பிடிச்சு கேட்ட எனக்கு என்ன சார் தெரியும் "...."அப்போ நாங்க விசாரிக்க வேண்டம்னு சொல்றியா”.."சார் உங்க கடமை நீங்க பண்ணனும் சார்.. என்ன கேட்டா ? நான் ஒரு அப்பாவி சார் ..நீங்க சொல்றே அந்த ஏரியா பக்கம் போவேன் ஆனா நீங்க சொல்றே அந்த தெருக்கெல்லாம் நான் போறது இல்லை சார் " என்றேன் ...சட்டு என்று அவர் டென்ஷன் ஆனவர் .."பொய், திரும்ப திரும்ப பொய் சொல்றே ..வீனா என்னை ஏன்டா உன்னை சந்தேக பட வைக்கிற ." "சார் சத்தியமா சொல்றேன்” என்றபோது ...அவர் "hamara admiko bulovo"(நம்ம ஆள கூப்பிடு)...என்றவுடன் வந்தார் எனக்கு தெரிந்த முகம் .. அவர் தான் என் சாப்ட்டு செலவு போக மிச்சத்தை தினமும் வாங்கி கொள்ளும் பிச்சைக்காரர் ...இவரிடம் தர்மம் செய்ய தொடங்கி ஒரு வாரம் தான் ஆனது ..."தர்மம் செஞ்சால் புண்ணியம்” என்பார்கள் ..இவருக்கு கொடுத்த குற்றம் தான் என்னை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் அழைத்து வர. அவரிடம் SP "Is admi ko voh rat deka na"(இவனை அந்த இரவு பார்த்தாயா?) என்றார் ..அந்த பிச்சைக்காரர் தலை மட்டும் ஆட்ட ...நான் சட்டு என்று "அப்போ அந்த பிச்சைக்காரரே விசாரிக்கலாம்லா "என்று பதட்டத்தில் மனதில் இருந்ததை சொன்ன போது ...டெலிபோன் ரிங் அடிக்க அவர் எடுத்தார் பேசினார் வைத்தார் "Baj gaya sala "(தப்பித்தான்டா) என்றவாறு ..அனைவரையும் அழைத்து போனார் ...என்னை மட்டும் இருக்க சொல்லி விட்டு...மணி 11:30....

மணி 1:00 AM என்னை போலீஸ் வர சொல்லி கரெக்ட்டா ஆக 24 ஆவது மணி நேரம் ..துக்கம் கண்ணை கட்டியது எங்க துங்கனாலும் துங்கலாம் ..போலீஸ் ஸ்டேஷன்ல் ஒரு நாள் கூட துங்க கூடாது என்ற வைராக்கியம் என் துக்கத்தை தள்ளி போட்டது
உள்ளே வந்தார் SP.."isse andar dalo endrar"(இவனை உள்ளே போடு)... ஒரு திருடன் மாட்டிகிட்டான் ...இன்னும் எத்தனை திருடன் வெளியில் உலவி கொண்டு இருக்கிறாக்கள் என்னையும் சேர்த்து என்று நினைத்து கொண்டு இருந்தேன் .."bulo vo madarasi ko "(மதராசி கூப்பிடு) என்றார்.. இந்த டென்ஷன்லீயும் என்னை ஞாபகம் வைத்து இருந்தார் ...இந்த டென்ஷன்லீயும் அதே பெயரில் தான் அழைத்தார் என்ற கோபம் கூட ....உள்ளே சென்றவுடன் .."நி போகலாம் என்றார் ".."சார் " என்றேன் ஆச்சரியத்துடன் "அந்த திருடன பிடிச்சுடோம் என்றார் சாரி உன்னை தேவை இல்லாமல்...but என்ன செய்ய எங்க கடமையை நாங்க செய்ய வேண்டியது இருக்குல .." என்றார் "அது எல்லாம் ஒரு பிரெச்சனை இல்லை சார் சராசரி மனிதனனுக்கு தான் சார் பல பிரெச்சனை என்றேன் "..." என்ன? என்ன புரியல" என்றார் .."தப்பா நினைக்கல நா..ஒன்னு சொல்லட்டா சார் " என்றேன் ... "சும்மா சொல்லு ..போலீஸ் எப்பொழுதும் எதிரி இல்லை பொதுமக்களுக்கு" "இவன் 300 pown திருடிட்டான் arrest பண்ணிருக்கிங்களே.."300" pown அவர் நேர்மையா தான் சேர்த்து இருப்பர்னு நீங்க சொல்லுறிங்களா "..."90% இருக்காது "..."அப்போ அவரை ஏன் சார் விசாரிக்கல"...என்றவுடன் அவர் சிரித்து விட்டு .."matharasi jyada sach math bolna" (மதராசி உண்மை அதிகம் பேசாதே) என்றார் ...

காலை 7 மணிக்கு அழைத்தேன் என் தாயிடம் .."டேய் இப்பவா நேரம் ...இப்போ தான் தண்ணி வரும்னு தெரியாதா..சரி டேய் நி கனவுல ...எங்கயோ போய் வெட்டியா மாட்டிக்கிற மாதிரி கணவு கண்டேன் ...பார்த்து பத்திரமா இரு " என்றால் என் தாய்...

இப்பொழுதும்  என்  பெயரை "மதராசி " என்றே  வைத்து  இருக்கிறார்  அவர் செல்பேசியின்  contacts லிஸ்டில் ...ரஜினி  படம்  மட்டும்  அல்ல  எல்லா  படத்துக்கும்  முதல்  நாள்  டிக்கெட்  எனக்கு  கிடைத்து  விடுகிறது ஓசியில்  :) சில  நாள்  அவருடனே  பார்த்து  இருக்கிறேன் ...அவர்  எனக்கு  ஒரு  நல்ல "நண்பன் டா "

MORAL:
பொறுப்பான இந்தியன் என்றால் போலீஸ் ஸ்டேஷன்க்கு செல்ல வேண்டும்
ஸ்டேஷன்க்குள் சென்றவன் எல்லாம் கெட்டவன் அல்ல..
போலீஸ்(SP) உங்கள் நண்பன் என்று தெரிந்து கொள்ள வேண்டும்
போலீஸ் மதிக்க பட வேண்டியவர்கள் ..கதைகளில் சினிமாவில் கேலி பொருள் அல்ல...





-SP

சனி, அக்டோபர் 02, 2010

சுய மரியாதை

வீட்டின் கதவை தட்டிய நேரம் மணி 9.15..எப்பொழுதும் ஒரு மணி நேரம் முன்னவே வீட்டிற்கு வருபவன் எதோ வேலை பளுவினால் வர முடியாமல் போனது கதவை திறந்த என் மனைவி,என் கைபையை வாங்காமல் "பேசியாச்சா ? " என்றால் ..."என்ன ?" என்றேன் கோபத்துடன் ..."இல்லைங்க அதான் நம்ம பொண்ணு படிப்பு விஷயமா பேசியாச்சா என் அக்கா கிட்ட "என்றால் ...நான் சோபாவில் உட்கார்ந்து சூவை கலட்டிகிட்டு இருந்தேன் ..வந்த பயண களைப்பு @ கடுப்பு ..என் மனைவி சொன்ன அக்கா விஷயம் எல்லாம் என் கோப உணர்வுகளை சீண்டி விட்டது .."உங்க அக்கா கிட்ட எல்லாம் என்னால பேச முடியாது .. நி அவ தங்கச்சியா இருக்கலாம் ... உன்னை மதிக்காம கூட இருக்கலாம் ..நான் உங்க குடும்பத்தில் ஒரு மாப்பிள்ளை ..அந்த மரியாதை தெரியாதவங்ககிட்ட எல்லாம் என்னால எதை பத்தியும் ..நம்ம பொண்ணு வாழ்கையாக இருந்தாலும் என்னால பேச முடியாது " என்றேன் ...அவள் சட்டு என்று வாய் முடியவள் ... மீண்டும் முனுமுணுக்க ஆரம்பித்தால் .."எது பேசினாலும் சத்தம்மா பேசு "என்றேன் ...அவள் "உங்களை மதிக்கல அதனாலே தானே நான் கல்யாணத்துக்கு போகலன்னு சொன்னேன் ...உங்களை மதிக்காத அந்த இடத்துல நான் இருப்பேனா, எங்க அம்மா போன் பண்ணி உங்ககிட்ட பேசி தானே நீங்களே அனுப்பிநிங்க "..."நான் உன்னை அனுப்பனதுநாளா அவங்க செஞ்சாத நியாம்னு சொல்லல உங்க அம்மாவை மதிச்சதுநாளா தான் நான் உன்னை போக சொன்னேன் ..எதுக்கு தேவை இல்லாமல் பேசிக்கிட்டு இருக்க "..."நம்ம பொண்ணுக்காக தான் நான் பேசிக்கிட்டு இருக்கேன் "..".நம்ம பொண்ணு படிப்பு தான் முக்கியம்ங்கறது எனக்கு தெரியாதா....இரு அதுக்கு ஒரு வழி பண்றேன் ...உன் தம்பி கிட்ட நான் பேசுறேன் ..அவன் ஊரேயை வித்துருவான் அவன் கிட்ட சொல்லலாம் "சரி என்னமோ பண்ணுங்க ...இப்பவே போன் பண்ணுங்க அவன் இப்போ வீட்டுல தான் இருப்பான் துங்கி இருக்க மாட்டான் .."செல்லமே " சீரியல் தான் பார்ப்பான்".

"இரு பேசுறேன் " ...என்றவாறு ..என் செல்லில் இருந்து அவனுக்கு ஒரு கால் செய்தேன் ..."மாமா எப்படி இருக்கீங்க " என்றான் எடுத்தவுடன் ..."என்ன மாமா எவ்வளவு நாள் ஆச்சு நாம பேசி ...வேலை ஜாஸ்த்தியா என்றான் ... " ஆமா பா "..என்றேன் மேலும் பேச எனக்கு பிடிக்கவில்லை ..காரணம் அவர்கள் குடும்பத்தில் இருந்து எனக்கு நடந்த அவபெயர் ...இருந்தாலும் வேற வழி இல்லை ...,,,"அக்கா எப்படி இருக்கா? ..அவகிட்ட பேசியும் ரொம்ப நாள் ஆச்சு " என்றான் ... "அவ நல்லா தான் இருக்கா ..அவளுக்கு என்ன " என்றேன்.என் சுய மரியாதை பற்றி கவலைப்படாதவள் என்ற வார்த்தையும் அதில் அடங்கும் ,இது எனக்கு மட்டும் புரியும் ."என்ன மாமா வேலை வேலைன்னு இருகாத்திங்க உடம்ப
பாத்துகோங்க என்றவாறு .."ஆமா நம்ம வினோத் கல்யாணத்துக்கு ஏன்வரல மாமா என்றான் ?..." ..."டே அப்போ நான் மும்பை போயிட்டான் டா ... திடிற்னு அனுப்பிட்டாங்க என்றேன் .." உண்மையேல அந்த நாளில் வீட்டில் தான் இருந்தேன் ... வினோத் தான் நிர்மலாவின் மகன் ...நிர்மலா என் மனைவியின் அக்கா ...அவர்கள் தான் என்னை மதிக்காமல்
போனது ...என் சுயமரியாதை நான் இழக்க முடியாததால் போகவில்லை ..."சத்தியமா சொல்லுங்க மாமா ..நான் உங்க தம்பி மாதிரி தான் ..அக்கா ஒரு நாள் சொன்னா ... நிர்மலா ஒரு முட்டாள் மாமா அவ செஞ்சது தப்பு தான் .." என்றவாறு தொடர்ந்தான் ... "டே அது எல்லாம் ஒன்னும் இல்லடா அப்படியே இருந்தாலும் அத மறந்துட்டேன் டா .." என்றேன் ... "நம்ம பிரியா விஷயமா தான் கூப்பிட்டேன் "..."பிரியா எப்படி இருக்கா? இருக்கால கொடுங்களே" என்றான் " அவ எங்க டா இருக்கா ...எப்பவும் FRIEND கூட தான் சுத்திக்கிட்டு இருக்கா..லீவ் தான் இப்போ அதான் ஒன்னும் சொல்லவில்லை ": ... "அப்போ அவள இங்க அனுப்புறது ..."இல்லை பா ..அவ friendsa விட்டுட்டு வர மாட்டேங்கறா ...வீட்டுக்கே சாப்பிட தான் வரா .friends ஆல கெட்டு போற ...அது நாளா தான் உன்கிட்ட பேசுறேன் .."அவ admission விஷயமா தான் பேச போறேன் ..."..அப்டியா மாமா ...நீங்க நிர்மலா அக்காகிட்ட கேட்கலாமே ...அவ hyderabad la தான் இருக்கா .." நீங்க வேற அவளை hyderabad la தான் சேர்க்கணும் சொல்றிங்க ...so கேட்கலாம் லா ".. "இல்லை டா நிர்மலாகிட்ட கேட்கலாம் ஆனா அவளே ஏன் வீனா தொந்தரவு செய்யணும் தான் கேட்கலா ... “ஆமா மாமா அவ Husband ஊரையே கலக்குவார் ... வினோத்ஓட கல்யாணத்துக்கு, hyderabad நம்ம திருச்சிக்கு வந்தது மாமா ”...நான் வேணும்நா என் friend கிட்ட சொல்றேன் அவன் friend secundarabadla தான் வேலை பார்க்குறான் ...அவன் உங்களுக்கு உதவி பண்ணுவேனா தெரியலா... இருந்தாலும் கேட்குறேன் ".."சரி டா ...வேர் ஒன்னும் இல்லை ...சரி நி தூங்க போ டா நாளைக்கு வேளைக்கு போனும்லா " ...என்றவாறு வைத்துவிட்டேன் ... நான் பேசுவதை மட்டும் கேட்ட என் மனைவி என் தம்பி என்ன சொன்னான் ? என்றால் ஆர்வமாக ... அவ உங்க அக்காகிட்ட கேட்க சொன்னேன் .. “அதான் சொன்னேன்லா நிர்மலா husband கையில தான் hyderabade இருக்கு ...”....”அதான் வேண்டாம் சொல்லிட்டேன்லா ..திரும்ப திரும்ப அதே பேசிக்கிட்டு ”...என்றேன்.. மௌனம் ஆக இருந்தால் ...நான் தொடர்ந்தேன் .. அவன் friend ஓட friend யாரோ secunderabad la இருக்கான் போல அவனகிட்ட சொல்றேன் என்று சொல்லி இருக்கான் ...”இப்படி யாரையோ நம்பறத விட நிர்மலாவை நம்பலாம் ” என்று நினைத்திருப்பாள் என் மனைவி ...எனக்கும் அது தான் தோன்றியது ..but சுயமரியாதை தான் எனக்கு முக்கியம் ...பின்னர் அந்த இரவு முடிந்தது ...இனிதை அல்ல ... ப்ரியாவின் வாழ்க்கை கேள்வி கூறியாக மாறிவிட கூடதே என்ற கதகதப்பில் ...

மறுநாள் காலை ..heater சுவிட்ச் போட்டு விட்டு பேப்பர் உடன் டி குடித்து விட்டு இருந்த நேரம் ...என் செல்பேசி துடித்தது ..எதோ ஒரு நம்பரில் ...எடுக்கவா என்றவாறு எடுத்தேன் ..."சார் .. நான் உங்க cobrother ஓட friend ஓட friend...secundarabad la இருக்கேன் என்றார் ... "...ஹான் சொல்லுங்க உங்க பெயர் என்ன சார்" என்றேன் .."சார் என் பெயர் "மாறன்" என்றார் ....சார் உங்க பொண்ணு admission விஷயமா பேசினார்" ..."ஆமா பா ...என் பொண்ணு பெயர் ப்ரியா என்றவாறு விவரத்தை சொன்னான் ....சார் secundarabad na ஒரு பிரச்சனை இல்லை ...சார் hderabad தான் கொஞ்சம் கஷ்டம் ... நான் try பண்ணி பார்க்குறேன் நீங்களும் உங்க side மூலமா எதாவது இருந்தா try பண்ணுங்க சார் ...” என்று வைத்து விட்டார் அவர் பட்டும்படாமலே ...இதை என் மனைவியிடம் சொல்லவில்லை ...சொன்னால் மீண்டும் தொடங்கும் அக்கா மேட்டர் ... கொஞ்ச நேரத்தில் ...என் வேளைக்கு சென்றேன்.. வேலை பளு என்னை வேலைய தவிர வேர் எதவும் சிந்தனையில் இருக்க விடவில்லை ..

வீட்டின் கதவை தட்டிய நேரம் மணி 8.15..சரியான நேரம் ..கதவை திறந்த என் மனைவி ..என் கைபையை வாங்காமல் ..."பேசியாச்சா ? என்றால் ... இன்றைக்கு என்ன மா .." என்றேன் கடுப்புடன் ...இல்லைங்க அதான் நம்ம பொண்ணு படிப்பு விஷயமா பேசியாச்சா ..அந்த ஆந்திரகாரர் கிட்ட ...நான் சோபாவில் உட்கார்ந்து சூவை கலட்டிகிட்டு இருந்தேன் .."அவர் தான் கூபிட்றேன் என்று சொன்னார் ."."இல்லைங்க ...நமக்கு ஒரு காரியம் ஆகனும்ன நாம தான் பேசணும் என்றால் "..சொன்னதில் உண்மை இருந்ததால் ..பேசாமல் அவரை கூப்பிட்டேன் ..அவர் கிட்ட பேசினேன் .."அவர் சார் மறந்துட்டேன் மதியமே என் friend கிட்ட பேசுனேன் சார் அவர் ஒரு நம்பர் கொடுத்து இருக்கார் அவர் கிட்ட பேசுனா ... உங்களுக்கு வேலை உடனே நடந்த்ரும் சார் என்றார் ",அப்டியா ok சார் அவர் நம்பர் என்ன" ..என்றவுடன் ..." 0932772872. எழுதி விட்டேன் இன்று வந்த ஹிந்துவின் முதல் பக்கத்தில் .." மீண்டும் நடந்த இரு பேச்சுக்களை மனைவி இடம் வழக்கம் போல விவரித்து ... அந்த நம்பருக்கு அழைத்தேன் ...என் செல்பேசி முலம் ..முதலில் நம்பரை தெரிவித்த என் செல் ...ரிங் அடிக்கும் போது பெயராய் மாறி போனது ..அந்த பெயர் "நிர்மலா home 1"...ரிங் சென்றது ...ரிங் அடித்தவுடன் நிர்மலாவின் கணவர் சட்டு என்று எடுத்து விட்டார் ...நான் என்ன செய்ய என்று முழித்துவிட்டு இருந்த நேரம் "Hello" என்றேன் ..குரலை சட்டு என்று கண்டு பிடித்து விட்டார் .."சொல்லுங்க எப்படி இருக்கீங்க ..நல்லா இருக்கீங்களா" என்றார் ...யாரிடமோ பேச போகிறேன் என்று நினைத்து அழைத்தால் ....யாரிடம் பேச வேண்டாம் என்று இருந்தேனோ அவருக்கே கால் சென்றது ... தன் மகன் கல்யாணத்துக்கு சொந்த தங்கை புருஷன் வரவில்லை என்றால் எவ்வளவு கோபமாக இருக்கும் அது எல்லாம் மறந்து "எப்படி இருக்கீங்க" ...என்றார் மீண்டும் . ..நான் மீண்டும் நினைவில் வந்து ...நல்லா இருக்கேன் ..நீங்க எப்படி
இருக்கீங்க என்றேன் ...பேச்சு சுகமாக முடிந்தது ..ப்ரியாவை பற்றி பேசி விட்டு வைத்த பிறகு ... என் மனைவியிடம் சொல்ல முடியாமல் சொன்னேன் ...அவள் சிரிப்பை அடக்கி கொண்டு கேட்டு கொண்டால்.
கடைசியில் ப்ரியா படிப்பு பற்றிய கவலை இனி வேண்டாம் ...இனி மேலாவது ஒழுங்கா அவளை படிக்க சொல்லு ..இப்படி சிபாரிசு பண்றதே எனக்கு பிடிக்காது ..என்ன செய்ய ".. என்றவாறு எழுந்து போனேன். என் மனைவி என்ன தான் இருந்தாலும் கடைசியிலா நிர்மலா தான் உதவுறா என்றால் ... இப்போ கோபமும் இல்லை ...சுயமரியாதையும் இல்லை .....கேட்டும் கேட்காதவாறு போனேன் ... சரி அவளை ஹைதராபாத் hostel தான் இருக்க போற ...பாசத்தை கொஞ்சம் அடக்கி வை என்றவாறு ...

முதல் நாள் அவளை அனுப்பி வைக்க நாங்க அனைவரும் சென்றோம் ... நிர்மலா வீட்டில் இருந்து காரில் சென்று இறக்கி விட்டு வந்தோம் ... "அவள் அப்பா டாட்டா " என்றவாறு உள்ளே சென்றால் பள்ளி வகுப்புக்கு ...அவள் 1அம் வகுப்பு படிக்கிறாள் ...இன்னும் எத்தனை முறை என் சுய மரியாதை ஏறி எறங்க போகிறதோ என்ற கதகதப்பில் டாட்டா சொன்னேன் என் சுயமரியாதைக்கும் சேர்த்து ..

Moral or INSPIRED FROM :
BE like "Piramusss@gmail.com Signature"...
யாருடன் பகையும் இல்லை
If wanted
யாருடன் உறவும் இல்லை
OR
Remember your enemy details fully... dont miss even the cell phone number :)"


--->SP

ஆதி முதல் அந்தம் வரை

சரக்கு அடிக்கும் நல்லவர்கள்க்கும்
சரக்கு அடிப்பவன் கெட்டவன் என நினைக்கும் அனைத்து கெட்ட உள்ளங்களுக்கும் இந்த கிறுக்கலை சமர்ப்பிக்கிறேன்

ஆதி முதல் அந்தம் வரை

"டேய் கவிக்கு சரக்கு அடி ..இன்னும் நல்லா எழுதுவ டா ...தப்பு இல்லா டா " என சொன்ன நண்பனுக்கு பதில் அளிக்கும் முன் நான் நடந்தவைகளும் நடக்கபோவதையும் யூகித்தேன் ..

இறந்த காலம் (நினைவில் நின்ற காலம் )
மருத்துவமனையில்
பிறந்த அன்றே இறந்த என்னை காப்ற்ற 78% alcohal கலந்த மருந்தை வாயில் உற்றியபோது
சொன்னது இல்லை "வேண்டாம் என்று "

பீர்ஐ cooldrinks ஆக மாத்திட்டாங்க என்று சொன்ன தலையின் வாக்கை நான் மறந்த போதும்
ஒல்லிகுச்சி என்று சொன்ன என் குண்டு தம்பிக்காக
குண்டாக மாற வெறியோடு பீர் குடிக்கும் போதும்
சொன்னது இல்லை "வேண்டாம் என்று "

வேகமாக சென்று தலைகீழாக விழுந்த என்னை காப்பாற்றிய டாக்டர்கள்
வலி தெரியாமல் இருக்க தினமும் "முனு ounce alcohal" உற்றி கொடுக்கும் போதும் சொன்னது இல்லை "வேண்டாம் என்று "

கருப்பாக இருக்கும் என்னை கேவலமாக பார்த்த figureகல்
மலைப்பாக பார்க்க காதல் உணர்வுடன் wine குடிக்கும் போதும்
சொன்னது இல்லை "வேண்டாம் என்று "

"மாப்பிள்ளை நான் fail டா " என்று சொன்ன தோற்ற நண்பனின் ஆறுதலுக்காக டாஸ்மாக்கில் நான்
சொன்னது இல்லை "வேண்டாம் என்று "

"மாப்பிள்ளை நான் first... அந்த பீட்டர் பிரேமா 2nd டா " என்று
ஆண் இனத்தின் வெற்றியை கொண்டாட அதே டாஸ்மாக்கிற்கு போகும் போதும் சொன்னது இல்லை "வேண்டாம் என்று "

வரும்காலம் (வராதவைகளையும் யூகிக்கும் காலம் )

bachelors பார்ட்டியில்
பெண்கள் எல்லாம் 10 மணிக்கு கிளம்ப
நீயும் கிளம்பு டா என்று என்னை...
கேவலமாக பேசாமல் இருக்க ....
நான் ஆண்மகனாக வாழ ....

saturday nightsil pubக்கு செல்ல பிகர் இருந்தும்
one mug or two என்று கேட்கும் போது
no thanks என்று சொன்னவுடன்
என் collarஅய் பிடித்து வெளியில் தள்ளாமல் இருக்க ...

பெண் பார்க்கும் படலத்தில்
நான் ஒரே ஒரு தடவை "vodka " குடிச்சு இருக்கேன் என்று சொல்ல போகும் என் வருங்கால மனைவி முன் ..
அப்படியா என்று ஆச்சரியத்துடன் "அவளை வேண்டாம் " என்று சொல்லாமல் இருக்க ...
"எந்த brand" என்று கேட்க ..
"நானும் அதே brand " என்று சொல்ல ...
எங்கள் ஜோடி பொருத்தத்தை நிரூபிக்க ...

Office club meetingil
10-5 தான் நான் உன் பாஸ் ..இப்போ இல்லா
சும்மா ஒரு sip .. என்று சொல்லும் போது
எனக்கும் பாஸ்க்கும் வேறு வேறு வித்தியாசங்கள் இருக்க ...
எனக்கும் பாஸ்க்கும் ஒரே ஒரே ஒற்றுமை இருக்க ...

Neighbours childrens பார்ட்டியில்
குழந்தைகள் கேக் சாப்பிட
அம்மாக்கள் grape juice குடிக்க
அப்பாக்கள் எல்லாம் whisky அருந்த...
நான் மட்டும் அமைதியாய் இருக்கையில் உட்காராமல் இருக்க ...

பச்ச குழந்தைக்கு wine ஆ? என்று சர்ச்சில் கூச்சல்போடாமல்
எங்கள் குடும்பத்தை சபையில் கேவலப்படுத்தாமல் இருக்க ..

மனைவியுடன் காலையில் நடந்த சப்ப மேட்டர் :) சண்டையை
பேசாமல் இருக்கும் என் &அவள் கர்வத்தை ...
friday nite ஒரு பாட்டில் தீர்க்கும் ..
என்று தெரிந்து கொண்டு இருக்க ...

மகனுடன் ஒரு பீர் அருந்த ...
மகனின் காதல் தோல்வியால்..
சாவில் இருந்து அவனை காப்பாற்ற ..
காதலும் கடவளும் ஒன்னும் இல்லை என்று அவனுக்கு
கற்று கொடுக்க ...

"நி நல்லவன் நான் கெட்டவன் " என நி சொல்ல
யாரும் நல்லவனும் இல்லை..
யாரும் கெட்டவனும் இல்லை ...
என்ற உண்மையை உலகம் மறந்தாலும்
நான் மறக்காமல் இருக்க ....

தண்ணி அடித்தால் உடம்புக்கு கெடுதல் என டாக்டர்கள் சொன்னாலும் ..
என்னை காப்பாற்றும் வேலையை நான் அவர்களுக்கு கொடுக்க ...

நிழல்கலம் (உண்மையான காலம் )
நான் என் நண்பனுக்கு சொன்னது
" ....தப்பா? எந்த மாங்கா மண்டையன் சொன்னது ..ஊத்து டா ...பாரு பட்டையை
கிளப்புறேன் டா இனிமேல் "

--->SP

வெள்ளி, ஜூலை 30, 2010

விப்ரோ பஸ்சில் நான்

பழமொழி ஒன்று.."காலையில் பள்ளிக்கு போகும் போது சோகம் மாலையில் சந்தோசம் "அந்த பழமொழி எங்களுக்கும் பொருந்தும் காலையில் சோகம் என்று இல்லை இந்த வேலையே இந்த மனிதுழிக்குள் முடிக்க வேண்டிய கட்டயம்..அந்த எண்ணம் காலை முதல் வேலையே செய்து முடிக்கும் வரை தொடரும்...மாலை நேரம் சந்தோஷ பயணம் தான்.ஆனால் இன்று என் விப்ரோ பஸ்சில் பயணிக்கும் இந்த மாழை நேரம் எனக்கு மட்டும் சோகத்தை தந்தது ..சந்தோசதத்துடன் பயணிக்க வேண்டிய என் பயணம் சோகத்துடன் பயணிக்க காரணம் ..வேலை பளு அல்ல தனிமை அனுபவம் .. என் விப்ரோவில் சேர்ந்து 2 வருடம் ஆனது ..என் அடுத்த கம்பனிக்கு resume அனுப்பி கொண்டே இருப்பவன் நான் .இந்த இரண்டு வருட காலம்...எனக்கு அனுபவத்தை தரவில்லை ஆனால்.நல்ல நண்பர்களை எனக்கு தந்தது .

எப்பொழுதும் எங்கள் குழுவில் 2 ஆண்கள் இரு பெண்கள்.இந்த நால்வரும் எதோ எதோ காரணம் சொல்லி கொண்டு இன்று கோவா சென்றனர்.இன்று friday அவர்களுக்கு விடுமுறை நாளை கம்பெனி விடுமுறை.sunday உலகுக்கே விடுமுறை .இந்த காரணத்துக்கு தான் அவர்கள் கோவா சென்றனர்.நான் வரும் புதன் கிழமை ஆவணி 3 ஆம் நாள்.. என் ஒன்னு விட்ட அக்காவோட சித்தியோட பேரனுக்கு காது குத்தும் விழாவிற்கு செல்கிறேன்..இந்த நெருங்கிய சொந்தத்தின் விழாவை சிற்பிக்க வேண்டும்மாம் :)நான் போகவில்லை என்றால் அங்கே எந்த நிகழ்ச்சியும் நின்று விடாது ,,நான் சென்றதால் எந்த புது நிகழ்ச்சியும் நடக்க போவது இல்லை ..கும்பலில் கோவிந்தா போடவே போகிறேன்.. பந்தம் விட்டு விட கூடதே என்ற ஒரே நல் எண்ணத்தில் தான் நான் என் கோவா பயணத்துக்கு பலமுறை என் நண்பர்கள் மன்றாடி கேட்ட பின்பும் வேண்டாம் என்றேன் ..சொந்தங்கள் ஒரு காரணம் சொன்னால் அதில் இருக்கும் நொட்டைகளை கண்டு பிடிப்பவர்கள்,நண்பர்கள் நம் வார்த்தையை மட்டும் நம்புவர்கள்.

இந்த மாழை பொழது நண்பர்கள் சூழ இல்லாத பயணம் நான் முதல் முதலாக விப்ரோவிற்கு சென்று விட்டு வந்த நேரம் போல இருந்தது அந்த நொடியில் கூட என் செல் பேசியில் முதல் அனுபவம் பற்றியும் விப்ரோவில் உள்ள பெண்கள் பற்றியும்.. நுனி நாக்கில் தப்பு தப்பாய் ஸ்டைல் என்ற போர்வையில்
பேசிகொண்ட மதுரை பெண்ணை பற்றியும்..கொஞ்சம் கிண்டலாக பேசி கொண்டு இருந்தேன்..அந்த நண்பனை இன்று அழைக்க.. என் செல் அவன் நம்பரை தாங்கி கொண்டே தான் இன்றும் இருக்கிறது...அவனிடம் பேச இது உகந்த நேரம் அல்ல என்று நானே முடிவு செய்து அமைதி ஆனேன்...என் விப்ரோவில் எனது முச்சு காற்று சுற்ற விட்ட அன்று முதல் என் நட்பு வட்டம் விப்ரோவில் ஒன்று முன்று ஆனது முன்று 5 ஆனது ...ஆனால் வெளி நண்பர்கள் பழைய கம்பெனி நண்பர்கள் ஐந்து 3 ஆனது ..முன்று ஒன்று ஆனது ... அந்த ஒன்றுக்கும் பிறந்தநாள் என்றால் நான் அழைப்பேன்
அக்காவிற்கு கல்யணம் என்றால் அவன் அழைப்பான் ..so அந்த ஒன்று ..கல்யான விருந்தில் உப்பு புளி எல்லாம் சரியாக இருந்த பின்பும் .. முதலில் உப்பு வைப்பார்களே அது போல ...பெயருக்கு இருக்கிறான் அந்த ஒற்றை நண்பன்.என் கல்லுரி நண்பர்களை பற்றி கிசு கிசு பேசி கொள்ள அவன் இருக்கிறான் "அவனை நம்பி அவ்வளவு காசு போட்டு அவனா எப்படி டா அமெரிக்க அழைத்து போனாங்க ...On site போறவன கொஞ்சம் கூட எடை போட மாட்டங்களா" என்று முதல் "அவனுக்கு கல்யாணமா ? பாவம் டா அவன் பொண்டாட்டி ..இந்த கஞ்ச பிசுநாரி கட்டிகிட்டு அவ எப்படி வாழ போற " வரை பேசி கொள்ள ஒருவன்.எல்லாருக்கும் இது போல ஒருவன் இருப்பான்...இவனுக்கு இந்த வாழ்கையா என்ற பொறாமையும் ...நமக்கு ஏன் இந்த வாழ்க்கை என்ற எண்ணமும் நம் பேச்சில் கலந்தே வெளி படும்.இன்று என்னுடைய இந்த மாழை பயணம் மிகவும் கடுப்பை ஏற்றி கொண்டு இருந்தது. என் கல்லுரி ஒற்றை நண்பனுக்கு அழைக்கலாம் என்றால் அவனுக்கு பிறந்த நாள் இல்லையே என்ற போது தான் ...என் ஞாபகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் காணமல் போகும் இன்னொரு கல்லூரி நண்பனின் பிறந்த நாள் ரெண்டு நாள் முன்னால் வந்து சென்றது ...அவன் பிறந்த நாளை 10 நாள் முன்பே orkut enaku அறிவித்தாலும் .. பிறந்த நாள் அன்று நான் அழைக்கவில்லை ...அவனிடம் வாழ்த்துகளை தெரிவிக்கலாம் என்று அழைத்தேன் பேசினேன் ... அவன் எல்லோர் பிறந்த நாள் அன்றும் தொலைபேசியில் அழைப்பது உண்டு எந்த ஒரு reminderம் இன்றி .. ஆனால் அவன் பிறந்த நாள் வாழ்த்துக்காக சிநிங்கிய அவன் செல் இரு முறை தான் என்ற கோபத்தில் "நி wish பண்ண கூட நேரம் இல்லையோ?? என்ற கேள்வி தான் வைத்தானே தவிர "வைடா phoneai" என்று சொல்லவில்லை .அவனிடம் பல முறை அடங்கியும் .. சில முறை அடக்கியும் பேசி விட்டு வைத்தேன்.

பின்னர் என் cellil வந்த forward மெசேஜ் கல்...icici bank il இருந்து வந்த "your bank acccount balance is less than the limit.Please avoid this type of transaction in future" போன்ற மெசேஜ் கல்... Advertisement மெசேஜகளை delete செய்து கொண்டு இருந்தேன் .நேரத்தை வீண் அடிக்கவே இந்த வேலை நான் செய்கிறேன் ஆனால் என்ன செய்ய இன்னும் பயணம் அரை மணி நேரம் செல்லும் போல ,நேரம் இல்லாமல் இருக்கும் மக்களில் நானும் ஒருவன் ,ஆனால் எப்பொழுதும் நேரம் இல்லை என்ற வாக்கியம் இல்லை ,நேரம் அவ்வபோது எப்படி செல்ல என்று தெரியாமல் தான் முழித்து கொண்டு இருக்கிறது என்னிடம் இந்த தருணத்தை போல.எங்கள் பஸ்சில் காதல் புறாக்கள் தனியாக உட்கார ..இன்னும் சிலர் வருங்கலத்தில் தான் அந்த காதல் புறா போல வாழ பேசி கொண்டு இருக்க ..
இன்னும் சிலர் timepass காதலியிடம் பேசி கொண்டு இருக்க ...இன்னும் சிலர் நண்பர்கள் என்ற போர்வையில் பேசி கொள்ள ..இன்னும் சிலர் எங்கள் குழு போல பேசிக்கொள்ள ...இன்னும் சிலர் எதோ எதோ போர்வையில் வாழ்ந்து கொண்டு இருக்க .. எனக்கு எந்த குழுவிடமும் ..எந்த போர்வைகுள்ளும்
செல்ல ஆசை இல்லை .என் குழுவிற்கு missedcal கொடுத்தால் போதும் ..உடனே confrenece கால் போட்டு பேசி கொள்ளலாம் ...அவர்கள் அந்த நொடியில் ரசிப்பதை என் பேச்சு அவர்களக்கு என் பிரிவின் ஏக்கத்தை தந்து விட கூடதே என்ற எண்ணத்தில் என்ன செய்யலாம் என்று இருந்தேன் ...என்ன பண்ணலாம் என்று யோசித்தே அரை மணி நேரம் முடிந்து விட்டது .என் காதலியை அழைக்கலாமா என்ற போது.

ஒரு புதுமொழி உண்டு ..."ஒரு heroisim கூட செய்யாமல் ஆணுக்கு பென்னும் இல்லை.. ஒரு hero இல்லாமல் பென்னும் இல்லை" 10 மாதத்திற்குள் பிறந்து .. படிப்பு என்னும் போட்டி உலகில் முன்னணியில் இருக்க துடித்து ...கடைசியில் இல்லாமல் முடித்து விட்டு...வேலை ஒன்று சேர்ந்த பின்பு ...என்ன வாழ்க்கை வாழ்ந்தாய் என்று நினைக்கும் போது...ஒரு பெண் என்னை கடந்து சென்றால் ..அவள் tabelக்கு.அவள் Cabinக்குள் நுழைய நான் முன்னேறிய போது என் பொறுப்பும் கூடி விட்டது .என் பொறுப்பினால் தான், " அவள், என்னிடம் நண்பன் ஆனாள்" .அவள் Cabinக்குள் நான் செல்லாமல் இருந்தால் " எனக்கு, அவள் தோழி ஆகி இருப்பாள்". சென்றதால் , இன்று அவளுக்கு நான் நண்பன் ,எனக்கு அதற்கும் மேல் . அவளை எனக்கு பிடித்து இருக்க காரணம் ... hmmm... காரணம் இல்லாமல் கூட இருக்கலாம் ..அவளை எனக்கு பிடித்து இருக்கிறது அது போதும் .அவளுக்கு நான் பிடித்து போக ஒரே காரணம் ..hmmm நான் பொறுப்பான இடத்தில இருக்கிறேன்.நான் பண்பு ஆனவனா? நல்லவனா? என்பது எல்லாம் அவளுக்கு தேவை இல்லை. அவள் விரும்புவது என் வேலையே இந்த நம்பிக்கை இல்லா காதலியிடம் என்ன பேச .Balance சேமித்து வைத்தால் எனக்கு நல்லது ..கால் செய்தால் airtelku மட்டுமே நல்லது .என் சுயநல நல்லதை மனதில் வைத்து .நேரம் வீணாக போனால் கூட போகட்டும் அவளுக்கு கால் செய்ய மனம் இல்லை என்று அவள் மீது எனக்கு நம்பிக்கை வருகிறதோ அன்று நேரம் என்ன.. வாழ்க்கை வீணாக போனால் கூட பரவா இல்லை. அது வரை நான் கல் நெஞ்சக்காரன் தான்.என் காதலை மட்டும் எண்ணினால் போதும் நேரம் சென்றதே தெரியவில்லை,என் நிறுத்தம் வந்தது... என் விப்ரோ பஸ் டிரைவரை கண்டு "குட் நைட் " என்றேன் ...அவர் "குட நைட் சாப்" என்பார் எங்களுக்குள் இது தினமும் உண்டு ... அதிகமாய் அவரும் பேசியது இல்லை.. நானும் அதற்கு அடுத்த வார்த்தையை பேசியது இல்லை.

என் பஸ் பயணம் முடிந்தது,இறங்கி நடந்து சென்று கொண்டு இருந்தேன் என் விட்டிற்கு காதல் என்றால் என்ன ...நம்மை நமக்கே தெரியாமல் இருக்க செய்வது அதை மொத்தம் உணர்தேன். என் ஒரு மணி நேர பயணத்தின்,முதல் பாதி கடக்க முடியாமல் திணறியது ..மறு பாதி காதல் என்ற பெயராலே கடந்து சென்றது .நாளை விடுமறை என்ற மாபெரும் சந்தோசத்தை என் பஸ் பயணம் என் தனிமை பயணத்தால் நாளையும் கடுப்பாக மாற கூடும் என்ற என்னத்தை துவியுது . பைக்கில் சென்ற என் போல ஒரு இளைஞர் சட்டு என்று எதோ ஒரு காரணத்தால் என் கண் முன்னே கிழே விழுந்தார் பெரிதாக அடி ஏதும் இல்லை. என் போன்ற நட பயணிகள் ஓடி சென்று எழுப்பி விட்டு ...அவன் துடிப்பது தமிழில் என்றவுடன் .."தம்பி பார்த்து வர கூடாது ...அப்படி என்ன அவசரம் " என்று சொல்லி அவனை அனுப்பினர்" இந்த it கம்பெனில வேலை பார்க்குற பசங்க வண்டி வாங்குறாங்க ஆனா எந்த பொறுப்பும் இல்லாம இருகாங்க "....ஒரு நொடியில் தவறி விழுந்த அவனை பற்றி சொல்லி கொண்டே போனார்கள்,ஆனால் அவர்கள் சொன்ன ஒரு வார்த்தை தான் என்னை நிம்மதி பெரு முச்சு விட செய்தது ..."ஒரு நொடி கூட கவனம் சிதறாமல் வண்டி ஒட்ட வேண்டும் " என்று ஒருவன் சொன்னவுடன்..சட்டு என்று எனக்கு என் ஞாபகம் தான் வந்தது .நான் பயணித்து கடந்து சென்ற 3600 நொடியில் எத்தனை ஞாபகங்கள் ,Silk board முதல் banasawadi வரை. என் பள்ளி நண்பன் முதல் காதலி வரை பயணித்த நொடிகள்..சோகம் ஆனதா சந்தோசம் ஆனதா என்பது எனக்கு தெரியாது ...ஆனால் பத்திரமானது..ஆனால் பைக்கில் செல்வதே தினமும் புது அனுபவம் தான் ..ஒவ்வொரு நொடியும் இனிமை தான் ..லிப்ட் கொடுப்பது...பெட்ரோல் இல்லாமல் வண்டிய தள்ளி கொண்டே போவது .. மழையில் நனைந்து கொண்டே வண்டி ஒட்டுவது...பஸ் Stopil நிற்கும் பெண் முன்னால் முன் wheelai தூக்குவது...போலீசில் மாட்டிகொள்ளாமல் ஒட்டி செல்வது ...பைக் பயணம் அழகானது தான் ஆனால் தவறினால்.எல்லா செயலுக்கு negative உண்டு ... ஆனால் எல்லா செயலுக்கும் posiitive உண்டு ...so Be safe with positive

Moral: பைக் ஓட்டுங்க ஒட்டாமல் இருங்க... I am not going to say wat to choose but ஞாபகத்தை அலைய விடும் என் போன்ற நல்லவர்களக்கு மட்டும் பைக் மோகம் வேண்டாம் :) :)

நன்றி Sorry .. சொல்லாதே நண்பனிடம் காதலியிடம் உறவுகளிடம்.
அமெரிக்க கலாச்சாரம் என்னை ஆட்கொண்டதால் சொல்கிறேன்...

நன்றி :

என்னை பல முறை தான் பைக்கில் ஓசியில் பயணிக்க வைத்த முருகேஷ்க்கு
முருகேஷ் பைக்கில் இருந்து கீழ ஒரு நொடியில் தனக்கே தெரியாமல் தவறி விழுந்த சீமோனுக்கு
விப்ரோவை ஞாபகப்படுதியா naukri.comக்கு
எங்கே அழைத்தாலும் வராமல் போன என்னை மிதிக்காமல் மதிக்கும் அணைத்து கல்லுரி நண்பர்களுக்கு
சிவாஜி நகர் to kr puram 300 E பஸ்க்கு
VTV பாடல் ஆசரியர் தாமரைக்கு
Pulsar 180 DTSi advertisementக்கு
Wen is my next story going to release என்று கேட்ட டெல்லிக்கு ..

சாரி..

மேற்கூறிய பெயர்களை @ செயல்களை @ சொல்லை அனுமதி இன்றி onlineil வெளியிட்டதற்கு

மன்னித்து விடுங்கள் :

தப்பு தப்பாய் spelling mistake உடன் எழுதிய என்னை ...
துய தமிழை ஆங்கிலத்துடன் இணைத்ததற்கு..
இந்த கதையை படித்த உங்கள் நேரத்துக்கு நான் சொல்ல்வது ...

மீண்டும் சந்திப்போமா...

---->SP

வியாழன், ஏப்ரல் 29, 2010

சப்ப மேட்டர்

S.பிரமு (18/01/2010)

எங்கள் குடும்பம் விகரம்மன் படத்தை போல தான் ....ஆனால் அவர் படத்தின் முடிவில் சுகமாய் முடியும் .. என் முடிவு சுகமாய் முடியலாம் இல்லை சுகம் இல்லாமல் முடியலாம் எவர் கண்டா ஆனால் இன்று சுகம் இல்லாமல் தான் போகிறது என்னால் பல பேருக்கு...கதையின் தொடக்கமே சோகத்தில் முழ்கி sentiment என்ற உங்கள் weakness ஆல் பெயர் வாங்கும் வெறியன் நான் அல்ல ..ஆதலால் முதலில் சுகம் ஆனவர்களை சொல்கிறேன்.. என் அண்ணன் அண்ணாuniversity இல் ஒரு arrear கூட இல்லாமல் degree  முடிப்பவன் முட்டாள்என்றால் அவன் முட்டாள் தான்..eee  இல் படித்து IT  இல் வேலை பார்ப்பவன் பாக்கியசாலி என்றால் அவன் பாக்கியசாலி தான் . .  என்னுடன் compare பண்ணும் போது அவன் புத்திசாலி ஆகிறான் ...முதல் இடத்தை அவன் தக்க வைத்து கொள்ள பல முறை நான் தோற்று இருக்கிறேன் ..என் தோல்விக்கு
காரணம் கேட்பவனுக்கு நான் சொல்லும் சாக்கு போக்கில் இதுவும் ஒன்று ,,,என் தாய்..கடவளும் தாயும் ஒன்று ...எல்லா புகழும் ஒருவனக்கே ..என்று பாடிய AR RAHMAN  ..கூறிய ஒருவன் தாய் ஆக கூட இருக்கலாம் ...எல்லா அம்மாவை போல தான் பாசத்தை தவிர வேர் ஒன்றும் அறியாதவள் ...என் தாய் என் மீது பாசம் வைப்பதாலே .சிலருக்கு பிடிக்காது ..சிலர் யார் என்று உகிக்க முடியாத நண்பர்களே.. இந்த கதையின் நாயகன்.. என் தந்தை தான்...தவமாய் தவமிருந்து தந்தை போல..வாரணம் ஆயிரம் தந்தை போல..நண்பனாக இருந்திருக்க கூடும் ...நான் சேரனை போல...சூர்யாவை போல இருந்திருதால்...நான் போக்கிரி விஜய் போல தானே சுற்றி திரிந்தேன் அதனால் தான் ..என் தந்தை சூர்யா வம்சம் தந்தை போல என்னை சுட்டு கொண்டு இருப்பார் ஒரே வார்த்தையில்... லாயக்கு இல்லாதவன் என்று...

நங்கள் வசிக்கும் நகரத்தின் பெயரை கூறாமல் இருப்பேனா ..சென்னை யில் ... 6.13th street annna nagar west ... கதவை யார் தட்டினாலும் நான்  தான் திறப்பேன் ..அப்படி பிஸி ஆனவன் நான் ... என் குடும்பத்தில் நான் சிறிதேனும் சாதிப்பேன் என்ற நம்பிக்கை என்று எல்லாம் வைத்தால் என் குடும்பம் தான் உலகின் மிக பேராசை பிடித்தவர்கள் ஆக மாறலாம் ...சிறுதேனும் நிலைப்பேனா இந்த வேகமாக சுழலும் மனதர்கிளின் நடுவில் என்ற பயம் தான் அவர்களுக்கு .. நான் தையிரமானவன் ..நான் துடிக்கும் இளைஞன் ..நான் பாயும் புலி என்று punch dialogue சொல்லவில்லை .. நான் சாதாரணம் ஆனவன் தான்.

இன்று என் தந்தை என்னை பார்த்த நொடியில் மணி 7.43 am என்று காட்டியது ..தந்தை walking  சென்று வந்த நேரம் ..நான் முழித்து கொண்டு பேப்பரில்
விரைவில் வெளியாக போகும் என் தலையின் படமான அசல் advertisment கூர்மையாக
பார்த்து கொண்டு இருந்தேன் ..வந்த என் தந்தை பேசாமல் குளிக்க சென்றார் ... என்  அண்ணனுக்கு nite shift முடிந்து வீட்டின் caling பெல் ஐ அடித்தான் ..நான் சென்று  திறந்தேன்..வந்தான் சென்றான்.. அவன் படுக்கை அறைக்கு ...என் அண்ணன் 26 வயது ...எங்கள் பூர்விகம் .. விருதுநகர் என் அண்ணன் ராசி துலாம் ..சம்பளம் 20000 இந்த  விவரம் எல்லாம் எனக்கும் தெரியாது அவனுக்கு வீட்டு ல் பெண் பார்க்கும் படலம் நடக்கும்   வரை ...அவனுக்கு முடிந்தவுடன் எனக்கும் விரைவில் திருமண பேச்சு தொடங்கிவிடும் .. என் காதலி பெயர் "அஞ்சலி " வை எப்படி வீட்டுல் தெரிவிப்பேன் என்று மன குழப்பம் தொடங்கி நாள் இன்று முதல் '123' வதுநாள் ...என் அண்ணன் அறிவு வளர்தனே தவிர  காதலை துளி கூட வளர்க்கவில்லை .. நல்லவன் ஆக வளர்ந்தான் ..நல்லவனை போல  இருக்கிறான்.. அதான் எனக்கு Problem... முத்தவன் அழகாக வழி காட்டினால் தான்  எனக்கு உதவியாய் இருக்கும் ...என்ன செய்ய எல்லா problem என்னால் ஆரம்பிக்க படுவதால் என்னை "ஆரம்ப நாயகன் " என்று கூட அழைக்கலாம் .. நான் தான் தொடங்கி  வைக்க கட்டாயம் ... அப்பா குளித்து விட்டு பக்தியில் நீராடி விட்டு ...வந்தார் Morning at 8il times now channel பார்க்க .....நானும் பார்பேன் ..பொம்ம படம் மட்டும்
அல்ல ..அந்த news reader என் anjali போல தான் இருப்பாள் ..காதலிக்கும் போது
கல் கூட காதலியின் முகமாக மாறிட கூடும் ..உண்மை தான்.. காலையிலே காதல்
மயகத்தில் நான் முள்கிட... உள்ளூர் செய்திகள் முடிந்தவுடன் ...உலக செய்தி தொடங்கும்  முன் இடையில் உள்ள இடைவெளியில் என்னை அழைத்த என் தந்தை 'டேய் நீ நுங்கம்பாக்கம் railway station பக்கத்தில் உள்ள SBI bankku போய் rs 1000 deposit பன்னிரு என்றார் ...acc name:கிருஷ்ணன், என் அண்ணன் கல்யாணத்துக்காக செலவு இது ...என் அண்ணனின் பெயரை அந்த பட்டியல் இட்டு பின் பெண் இருப்பவர் எங்கள் கதவை தட்ட வாய்ப் புகள் ஏற்றி வைக்கும் இடம் ... bank comiision கிடையாது என் என்றால் அவர் Account um sbithan...11 இலக்க என்னை ஞாபகத்தில் வைத்தால் போதும் அந்த acc name ...என் அஞ்சலியின் தந்தை பெயர் .பேசிகிட்டே இருக்கும் போது current cutஆனது .. chargeil  இருந்த செல்லை உருகி 11 இலக்க என்னை டயல் செய்தேன் ...அமெரிக்க call போல...பின்னர் cut செய்தேன் ... ஞாபகத்தில் நான் வைக்கும் வேலை மிச்சம்... தந்தை எனக்கு comission என்று இல்லை பயண செலவு 10 ரூபாய் தந்தார்...

என் வேலை தொடங்கியது ... annnagar west  bus stop சிற் பல 
குமரிகள் குவியும் இடம் .. இங்கே தான் முதலில் அஞ்சலி யை சந்திதேன் ...அந்த  நினைவுகளோடு அவளுக்கு cal செய்தேன் ...அவள் செல்பேசி switchedoff..சந்தோஷமான விஷயம் ..இனி அவள் தான் எனக்கு  call செய்வாள் ..missedcall alerts வைத்து இருக்கிறாள் ... cut செய்த போது "battery low " என்று காட்டியது ... நான் பேருந்துக்கு காத்து  கொண்டு இருந்த நேரம் "9:45"...பல பெண்கள் காலேசுக்கு சென்றனர் ..சிற் பலர் போக விருப்பம் இல்லாதது போல BUSSTOP ஐ நோக்கி வந்தனர்... என் பேருந்து வர வில்லை காத்து கொண்டு இருந்தேன் ... என் பேருந்து என்றால் ...சென்னையில் வசிக்கும் சகலமான நண்பர்களுக்கு தெரியும் அண்ணாநகர் to நுங்கம்பாக்கம் rly ஸ்டேஷன் பக்கம் தான் ...சில பஸ் தான் route வேற ...பல பஸ்க்கு இது தான் ரூட் .. எனக்கு 
மட்டும் பேருந்து வர வில்லை என்றது எல்லாம் பொய் ...நான் எதிர்பார்த்தது என் மன நிற பேருந்து அது தான் வெள்ளை நிற பேருந்து ...AC பஸ் ,deluxe பஸ்.. என பல வண்ணங்களும் ரகத்திலும் இருந்தாலும் ...என் வருமானத்துக்கு ஏற்ற தரமான soap போல...என் தந்தை தந்த ரூபாய்க்கு ஏற்ற பஸ் வெள்ளை board... 27h ஆவடி to அண்ணா சதுக்கம் என்ற பஸ் வர அதில் ஏறி கொண்டேன் ... பல பேர்களில் ஒருவனாய்.. பயணிக்க கூட்டம் அதிகம் தான் ..எல்லாம் officeku செல்லும் கூட்டம் .. வந்தார் நாளைய superstar @ conductor 10 ரூபாய் நீட்ட..."5 ருபாய் " கேட்டார் பதிலுக்கு "ticket 3 ருபாய் தானே"  என்றேன் .. அவர் "5 ரூவாய் தான்" ... என்றார் ..வேர் வழி இல்லை ..சில்லறை இல்லை என்றேன் .ticket பின்னல் 5 ரூவாய் என்று எழுதி ticket கிழித்து தந்தார் .. தம் போச்சே என்ற வருத்ததில் இருந்தேன் ... போக 3 ருபாய் வர 3 ருபாய் மீதி இருக்கும் 4 ரூபாயில் தான் என் புகை செலவு செய்ய கணக்கு போட்டேன் ...வரும் போது நடந்து வந்தால் தான் என்னால் தம் போட முடியும் ...நடந்தே வந்து விட மன துணிச்சல் ஜாஸ்தி தான் எனக்கு ...சென்னை ஊட்டியை போல இருந்தால் நடக்கலாம் ..சென்னை தன் வெப்பத்தின் காட்டத்தை அல்லவா காட்டுது.. future plan ஐ பயனத்தாலே போட்டேன் ..Cigarate smoking is bad when u walk in sun...என் நிறுத்தம் வரும் போது கண்டக்டர் இடம் ஒரு இளைஞர் ...அவர் டிக்கெட் காட்டி கொண்டு ..சில்லறை என்றார் .. நானும் 
காமிக்க ...அவர் எல்லாரையும் திட்டி தீர்த்தார்.".சில்லறை எடுத்து வர
தெரியாதா" .. அவர் டிக்கெட் ஐ வாங்கி கொண்டார் ..சட்டை பையில் கையை விட்டு
..தன் எழுதுகோலை எடுத்தார் இருந்த 5 ரூவாய் அடித்து விட்டு .என் கையில் 10 ரூவாய் தந்தார் ..

அந்த சக இளைஞன் இடம் கண்டக்டர் சொன்னது "இவனிடம் வாங்கி கொள்"  என்றார் ...ஒற்றனாக ஏறினேன் . .ரெட்டையன் போல இறங்கினோம் ...என்னுடன் நடப்பவன் என் காதலி என்றால் சென்னை வெயிலும் ஊட்டி குளிரும் ஒன்று தான் ... நடப்பவன் யாரோ ஒருவன் ... கூடவே வந்தான் .. கடையில் பொருள் வாங்கி காசு
குடுத்தாலே சில்லறை சரியாக கூடு என்பான் ..ஓசியில் சில்லறை யார் கூடுப்பான் ... பார்க்க அந்த மனிதர் decent என்றாலும் ...5 ரூபைக்காக பின்னாலே வருகிறானே என்றதால் .. எனக்குள் ஒரு சந்தோசம் என்னை போல் நாட்டில் பல பேர்கள் பண புழக்கம் இல்லாமல் இருகாங்க போல ..என்று எண்ணத்தில் ..என்ன செய்வது என்று முழித்தேன் ...எனக்கு நேரம் கடத்துவதில் இன்பம் என்ற போதும் ..மணி 10.05...அவர் ஆபீஸ்க்கு நேரம் ஆனது போல ..சற்று என்று என் கையில் இருந்த பத்து ரூபாயை என் அனுமதி இன்றி பிடுங்கி ஒரு சூடாக வடை businees செய்யும் முதலாளி இடம் கொடுத்தான் சில்லறை பெற்றான் ..சிலருக்கு சில விஷயங்கள் நடக்காது ...பெண்களுக்கு மட்டும் அல்ல ..அதிர்ஷ்டம்
உள்ளவனுக்கும் உதவ ஆள் வண்டி கட்டி கொண்டு வர தான் செய்கிறார்கள் ..என்னிடம் 5 ருபாய் கொடுத்து..."வரேன் boss" என்றான் ...நான் தலை ஆட்டி கொண்டேன் ... என்ன என்னால் செய்ய முடியாத "சப்ப மேட்டர் ஐ "அவன் செப்புடன் செய்துவிட்டான் என்ற வருத்தம்@EGo தான் ...

நுங்கம்பாக்கம் SBI சற்று கூட்டமாக தான் இருந்தது ...நான் பணம் போடும்
நாள் தான் இப்படி இருக்கும் என்று நினைத்தேன் .."கூட்டம் இவ்வளவு இருக்குதுன்னு தெரியுது ல ..இன்னொரு branch ஆரம்பிக்க வேண்டியது தானே ..நாட்டில் வேலை திண்டாட்டம் கொஞ்சம் குறைய chance இருக்குல "என்று ,..பேசி கொண்டு சென்றான் finance minister பா.சிதம்பரம் போலஒருவன் ..சரி என்று உள்ளே சென்றேன் ...Centralised ac தான் ...18degree என்றது பல மக்களின் முச்சு காற்று சூடாக இருந்தது ..உழைத்த காசை பத்திரமாக சேமிக்க வேண்டும் என்ற பயத்தில் ...so temprature 28 pola
இருந்தது .. உள்ளே சென்ற நேரம் ...அஞ்சலி missed call alert a பார்த்து விட்டு எனக்கு cal செய்தால் ..அவளுக்கு அது tea time..9 ku சென்றால் 10.30 tea...12..ku சாப்பாடு ...3 ku tea..4 or 5 அவள் packup time...கொடுத்து வைத்தவள் .. நான் கேட்டால் கூட கொடுப்பது இல்லை இரு வேலை tea..."" சாரி da...இன்னிக்கி 8 மணிக்கே office வர சொல்லிட்டாங்க..எதோ general bodymeeting...ஆமா நீ எங்க இருக்க ..ஒரே சத்தமாக இருக்கு ...பொறுப்பு வந்து interview பக்கம் போய்ட்டிய.... நான் சொல்லி கேட்கமாட்ட ..இப்போ யாரு சொல்லி போன ..யாருடா அவ ..எனக்கு போட்டியா? "" ..என்று நிறுத்தாமல் பொழிந்தால் ...அவள் பேச்சில் அன்பு இருக்கிறது என்று நான் சொல்வேன் ..அவள் பேச்சில் நக்கல்  இருக்கிறது என்று நீ சொல்லுகிறாய் ..அவள் பேச்சில் சந்தேகம் இருக்கிறது என்று அவன் சொல்கிறான் ...பார்வைகள் பலவிதம் ..நான் sbiku வந்தேன் என்றேன்.. "helo bankla கால் பேச கூடாது என்று தெரியாதா" .... என்றான் ஒரு நல்லவன் என் அண்ணன் அல்ல .....so AC ilஅவள் பேசி கொள்வது போல நான் பேசி கொண்டு இருந்த சுகம் ...cut ஆனது ..காதலிடம் பேச ac எதற்கு ..மொட்டைமாடி வெயில் கூட சுகம் தான் ...என்றதால் வெளியில் இருந்து தொடர்ந்தேன் ... "" என்ன விஷயம் sbila
அங்க ...any loan ? சும்மா கூடு க்கரங்கலா ..?.."" இது நக்கலாகத்தான் ஊருக்கும் படும் எனக்கும் பட்டதால்..நக்கலா என்றேன் ..இது கோபத்தில் வரும் நக்கலா இல்லை ...அன்பில் வரும் நக்கலா என்ற டயலாக் ..அவள் சொல்வதற்குள் என் cell in வாழ்வு கடைசி நொடியில் இருந்தால் information beep ஒழிக்க ...சரி அப்புறம் பேசுறேன் ..என்றேன் ...அவளும் புரிந்து கொண்டு .."ok da..charge போட்டுடு கூப் படு"  என்றால் ... காதலி என்று நான் சொல்லி கொள்ள இந்த புரிதல் தான் காரணம்...

மீண்டும் ac...cell switch off ஆகும் முன் ac number ஐ chellan இல் எழுதி விட ஓடி சென்று chellan எடுத்தேன் ...dialled நம்பர் இல் அனிதா விற்கு முன் அந்த அமெரிக்க i mean 11 digit நம்பர் ஐ எடுத்தேன் ...ipod recharge செய்ய மறந்தவர்கள் உண்டு என்றால் ..phone batery current இருந்தும் charge செய்ய மறந்தவர்கள் உண்டு என்றால் ..பாங்கில் பேனா கொண்டு போகதவனும் இருப்பான் ...என்னை போல பல பேரை sbi கண்டதால் தான் என்னவோ ...பேனா ஒன்றை கயறில் கட்டி வைத்து இருக்கிறது SBI ... அதுக்கு என் போன்ற பல பேர் சண்டை இட்டு கொண்டு இருக்க ,,, நான் ஒரு நடுத்தர வயதுடைய பெண்ணிடம் ..."பேனா என்றேன் "..கொடுத்து விட்டால் ..சிக்கல் இல்லாமல் ...phone இல் இருந்து நம்பர் ஐ chelanil புகுத்தி விட்டு எல்லா detailsum எழுதி கொண்டேன் ...திரும்ப கொடுக்கும் போது ...அவள் சொன்னால் "பேனாவை கொண்டு வர மறகாத்திங்க அடுத்த தடவ " என்றால் ...சரி என்று தலை ஆட்டி விட்டு வரிசையில் நின்றேன் .. என்னால் வேற என்ன செய்யா முடியும் ..Queue இல் நின்று கொண்டு இருந்தேன் ...10 per queue...  ஒரு கையில் chellan... மறு கையில் பணம் ..மனதில் எப்ப தான் முன்னாடி இருக்கிற ஆள் சிக்கிரம் விலகி அந்த இடத்தில நிற்கலாம் என்று .... அந்த 8 பேருக்கும் இருந்தது ... எல்லாரும் சென்று இருக்க ..என் பின்னால் 10 பேர் ... counter இல் கொடுத்தேன் .."sb account deposit இந்த color chellan இல்லை...அது yellow color என்றான் ..போய் அதில் fill பண்ணிட்டு வாங்க என்றான்" ...படித்தவர்களுக்கும் இதை எல்லாம் சொல்ல வேண்டிய கட்டாயத்தால் வருத்தம் கொண்டான் உழியர் ...மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் மணி 11.. நான் 10.30 வந்த நேரம் முதல் 11 வரை வீண் தான்..

மீண்டும் பேனா ...அந்த பெண் சென்று விட்டால் ..இம் முறை யாரிடம் வினவலாம் என்ற போது ... அந்த public usage பேனா நான் யாரிடமும் உதவி கேட்க வேண்டாம் என்றது போல தனியாக இருந்தது ..நான் அதை நெருங்குவதற்குள் ..4 நண்பர்களில் ஒருவன் எடுத்து விட்டு ..fil செய்து கொண்டு இருந்தான் dd யை ...நான் அவர்கள் பின்னால்
நின்று கொண்டு இருந்தேன் அது navy application போல ..  4 நண்பர்களில் ஒருவன் fill  செய்ய...இன்னொருவன் கையில் இன்று வந்த hindu paper..நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் கொஞ்சம் துக்கள் தான் என்பது நிருபணம் ஆனது ..அந்த dd அனுப்ப ending date 28 feb 2010 என்ற போதும் ... இன்றே வந்து விட்டார்கள் ..முதலில் வந்தவனுக்கு முன் உரிமை கொடுக்க அது என்ன கோவில் திருவிழாவா அல்ல சரவணா பவன் அ ...என்று நினைத்து கொண்டேன் ...இப்படி டிடிகல் பல எடுத்து தோற்று விட்டு தான் உதவாக்கரை ஆகி இருக்கிறேன் ...அவர்கள் முடித்து 5 chelan ஐ என்னிடம் காண்பித்து இது ok தானே என்றனர் ..நான் எதோ inspection officer போல .."fine superb " என்றவாறு
பேனாவை வாங்கி கொண்டேன் ...4 பேருக்கு எதுக்கு 5 டி டி என்ற சந்தேகத்துடன் .. இம் முறை yelow color chellanil fil செய்து கொண்டு வரிசையில் நின்றேன் ..இம் முறை போன தடவை விட கூட்டம் கம்மி தான் மணி 11.30 ...5 பேர்.. 2nd position இல் நின்று கொண்டவனுடம் அந்த நால்வர்கள் சேர்ந்து கொள்ள ..இப்பொழது புரிந்தது எதற்காக 5 dd...ஒருவன் வரிசயில் நிற்க ..மற்ற நால்வரும் .வேலையே பங்கு போட... time consumption அவர்களுக்கு ....எனக்கு ..? ,,, அவர்கள் வேலை முடிந்தவுடன் ..வரிசை சற்று வேகமாய் சென்றது .. நான் counter il கொடுத்த போது ... savings account நம்பர் ஐ எனக்காக வாசித்து காமித்தான் for checking purpose.. computer il search கொடுத்தால் chelanil இருக்கும் பெயரும் computer சொல்லும் பெயரும் ஒன்னு என்றால் பணம் போட போகிறான் ,...அவனுக்கு checking time கம்மியாக இருக்க ..நம்பர் ஐ என்னிடம் வாசித்து காமித்தான் ... நான் celfone a எடுத்து ..பார்த்து கொண்டும் கேட்டு கொண்டும் இருந்தேன் .. சில நம்பர் ஐ repeat செய்ய சொன்னேன் .. "sir அடுத்த முறை நம்பர்ஐ paperil கொண்டு வாங்க "என்றான் .. ok sir..என்றேன் ... அவன் என்னிடம் இருந்த 1000 ரூவாய் வாங்கி விட்டு அந்த broker accountil போட்டு விட்டான்.. thank you sir என்றேன் ..
அவன் அடுத்த chelanai வாங்கவே மும்ரமாய் இருந்தான் ... இது போன்ற வீண்
செலவை நான் வைக்க மாட்டேன் என் வீ ட்டுக்கு ...நான் யோசித்து கொண்டு இருந்தேன் அடுத்து என்ன செய்ய என்று ,,,தம் அடிக்க எது சிறந்த இடம் என்று நீயா நானா போல யோசித்து கொண்டு இருந்தேன் ,,, வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டீ கடையில் அடித்தால் mentofresh போட வேண்டும் ..இங்கயே அடித்தால் mentofresh வாங்கும் காசு மிச்சம் ...
என்று அருகில் இருந்த டீ கடையில் தம் அடித்தேன் ..sir டீ வேணுமா என்றான் அந்த கடையில் வேலை பார்க்கும் பையன்..வேண்டாம் என்றவாறு ...தம் அடித்து கொண்டே bigfm இல் ..."காற்றை நிறுத்தி கேள் " என்ற அசல் பாடல் கேட்க .. பிச்சைக்கார பெண்மணி என்னிடம் "அய்யா"  என்றால் ..நானும் நீயும் ஓர் நிலைமை தான் ...என்ற உண்மையா சொல்ல நினைத்தாலும்..முடியவில்லை ..நான் அவளை கண்டு கொள்ளாததை போல 8 திசையிலும் சுற்றினேன் ..சற்று என்று செல் எடுத்து காதில் வைக்க ..switch off tone ஒழிக்க ..." அசிங்க பட்டான் ஆட்டோ காரன்."..என்ற dialogue என்ன காதுகளில் கேட்டது ..அயோயோ அப்பாக்கு fone போட்டு பேசவில்லை என்ற ஞாபகம் . .நொடிக்கு 1 பைசா என்ற schemai அநியாயமாய் தூங்கி கொண்டு இருக்க ...அருகாமையில் இருந்த boothil ஒரு ரூவாய் முலம் அப்பாவின் செல்லுக்கு அழைத்தேன் ..."ஹரிவராசனம் விஸ்வருபனம் " என்ற hello tune ஒழிக்க ... பக்தி அப்பாக்கு கால் செய்தேன் ..அந்த full பாட்டு இரு முறை ஓடி "நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தற்சமயம் பிஸி ஆக
இருக்கிறார் "என்ற வாசகம் வந்தது ..மீண்டும் கால் செய்தேன் இம்முறை எடுத்து ஹலோ யாரு ..என்றார் .."பா நான் தான்" என்றேன் .."நீயா "என்றார் ..வேற யாராயோய் எதிர் பார்த்திருக்க கூடும்..சரி என்ன விஷயம்?பணத்தை போட்டுட்டிய? என்றார் .. ஆம்மாம் பா ..போட்டுடேன் ... சரி செல்போன் எங்கே ..வீட்டுல வச்சுட்டு வந்திட்டிய என்றார் ...இல்லை பா charge இல்லை என்றேன்.." அதானே பார்த்தேன் நீ அது இல்லாம இருக்க மாட்டிய.. "அப்பா எனக்கு lecture கொடுப்பது நான் use பண்ற foneku பிடிக்கவில்லை போல ..கட் செய்ய போகிறது என்ற பீப் soundai எழுப்ப ..சரி பா நான்
வைக்கிறேன் என்றேன் ....சரி அப்படியே கையோட அந்த brokerku  போன் போட்டு பணம் போட்டுடேன் சொல்லிருடா...நம்பர் ஞாபகம் இருக்குல என்றார்ஆம்மாம் பா ...next ஒரு ரூவாய் சேமிக்க cut செய்தேன் ..இனி என் சிறு சேமிப்பு ருவை ...கால் செய்தேன் .....இம் முறை நார்மல் tone தான் ..என் அண்ணன் கல்யணம் முடிவதற்குள் அவர் helo tune வைக்கும் அளவற்கு பணம் புரளும் என்ற யுகம் எனக்கு இருக்கறது இன்னும் எத்தன முறை அவருக்கு 1000 ரூவாய் போட போகிறேன் தெரியவில்லை ..கால் கட் ஆகும் முன் எடுத்து யாரு என்றார் ..."சார் நான் தா சென்னை அண்ணாநகர் ல இருக்குற உங்க frnd ராஜா சேகர் ஓட பையன் பேசுறேன்" ... oh ரெண்டாவது பையனா..எப்படி இருக்கீங்க என்றான் ...நான் அறிமுகம் செய்யவில்லை நான் இளையவன் என்று ...ஆனால் அவர் புரிந்து கொண்டார் பிஸி ஆனவன் நான் இல்லை என்று ...என்ன பணம் போட்டாச்சா ...ஆமா சார் ...என்றேன் ..ok பா ..beep சவுண்ட் கேட்க அவர் மேலும் தொடர்ந்தார் "போன தடவை நீங்க icici bankஅண்ணாநகர் branchil இருந்து போட்டது" ..என்றார் ,,,ஆமா என்று சொல்லியவாறு பையில் இருந்த அடுத்த ஒரு ரூவாய் போட்டு விட்டேன் ...இது தான் என்னிடம் இருந்த கடைசி ஒரு ரூவாய் ...அது இல்லை தம்பி processing charge nu சொல்லி 30 எடுத்துட்டான் என்றார் .. நானும் அப்படியா என்றேன் ... இந்த தடவ எந்த problem வராது நினக்கிறேன்...என்ன நுங்கம்பாக்கம் sbi to விருதுநகர் sbi தான் என்றேன் ...ஆம்மாம் பா ..சரி பா ...நான் check பண்ணிட்டு கால் பண்றேன் என்றார் ,.. ok என்று வைத்து விட்டேன் ... அவர் அந்த 30 ரூவாய் நங்கள் தர வேண்டும் என்பதற்காக சொல்கிறார் என்பது புரிந்து கொண்டேன் ... இம்முறை நடந்தே வீட்டுக்கு வந்தேன் மணி 1 ... வந்த களைப்பில் charge போட மறந்து விட்டேன் ... அப்படியே சாப்பட்டு படுத்து விட்டேன் .வீட்டில் evening வந்த தந்தை திட்டி கொண்டார் ...உதவ கரை என்று ..அவருக்கு காலையில் நடந்தது சப்ப மேட்டர்...நான் எதோ செய்து விட்டேன் என்று பெருமையாக சொன்னால் .."சப்ப mater டா ..இதை "தினேஷ் "கூட பன்னுவன்டா" ...தினேஷ் என்பவர் என் பெரியம்மா வின் பேரன் ... அவன் இப்பொழது தான் 4 படிக்கிறான் ... so சொல்வதை எல்லாம் வாங்கி கொள்பவன் நான் ...