சனி, டிசம்பர் 23, 2006

கண்டிப்பு

பயிலும் கல்லுரியில் தோழன் ஒருவன்
நடு ரோட்டில் தவித்த எனக்கு lifட் கொடுத்ததால்
படிப்பே வேண்டாம் என்றார் என் அப்பா

தோழயின் அண்ணண் இந்த தங்கையை நலம் விசாரித்ததால்
நட்பே உனக்கு வேண்டாம் என்றார்
தூரத்தில் நின்று தவறாக கனித்த என் அப்பா

சாலையில் ஏதோ ஒரு நாள் விலாசம் கேட்டு
ஆன்மகன் ஒருவ‌ன் அனுகியதால்
வெளி உலக அறிவே வேண்டாம் என்றார் என் அப்பா

யாரோ ஒருவ‌ன் விட்டின் முன்னால் நின்றதால்
வெளி உலகத்தை ரசித்தவள் விட்டின் முற்றத்தில்
யாரோ விட்டிற்க்கு missed call கொடுத்தால்
அப்பாவின் சுட்டு எரிக்கும் பார்வை என் மீது

மாடியில் கொடியில் துனிகளை காய வைக்கசென்ற‌ நேரம்
எதிர் விட்டு பைய‌ன் அமர்ந்ததால்
மொட்டை மாடியே எற வேன்டாம் என்றார் என் அப்பா

தோழி ஒருத்தி சுந்திரமாய் சுற்றியவள்
நான் பல நேரம் பொறாமைபட்டவள்
ஒடி போனதால்
" கண்டிச்சு வளர்க்க தெரியாதவன் ஒரு அப்பனா ? "
என ஊர் கேட்டு
தன் உயிர் மாயித்த மரனத்தில்
என் அன்பு அப்பாவின் அன்பு புரிந்தது