புதன், அக்டோபர் 28, 2020

என் HERO

 முதலாய் பிறந்தாயே, 
 தலைக்கனம் இல்லாமல் வளர்ந்தாயே, 
 ஊரில் இருந்தும் ஹாஸ்டலில் படித்தாயே, 
 நட்பு இருந்தும் நண்பன் முன்னால் அவமானப்பட்டாயே,
 நட்பு சொந்தம் ஆனபின்பும், பின் தள்ளப்பட்டாயே,
 வாதாட படித்தும் விட்டுட்டு போனாயே, 
 வாதாட வாய்ப்பு இருந்தும் அமைதியாய் இருந்தாயே,
 பரம்பரை பணம் இருந்தும் சுயம்பாய் இருந்தாயே, 
 வேலையை குடும்பத்துக்காக காதலித்தாயே, 
 
 வேண்டாம் என்பதையும் அழகாய் சொல்லுவாயே, 
 வேண்டும் என்று எந்த தீமையும் செய்யாமல் இருந்தாயே, 
 ஒரே ஒரு CHICKEN பிஸ் தின்பாயே, 
 மகனுக்காக CIGARETTE விட்டாயே, 
 
RAJDOOT சத்தம் மூலம் என்னைக் கதி கலங்க வைத்தாயே, 
ஆசையாய் எதிர் பார்க்கவும் வைத்தாயே, 
எதிர்காலம் இல்லாத என் கையை பிடித்து கண் கலங்கினாயே, ஒட்டுற மண்ணு தான் ஒட்டும்
என்று சொல்லி பண பாடம் கற்ப்பித்தாயே, 
கொடுத்த பணத்தை ரெட்டிப்பு செய்தாயே, 
அதைக் கொடுக்கப் போன இடத்தில் அவமானப் பட்டாயே, 
ஒற்றை ரூபாய் இல்லாதவனிடம் கணக்கு சொன்னாயே, 
BLUE STAR போதும் மகனின் 
திருமணம் நடத்தி விடலாம்  என்றாயே, 
வயிற்றை ZIPஆக திறந்தாயே,  
திறக்காததால் கண்ணை மூடினாயே, 
காலம் கடந்தும் கண்ணில் நின்றாயே, 
என் பூஜை அறையில், 
எனக்குத் தெரிந்த ஒரே தெய்வம் நீ ஆனேயே.

மரணம் வரும் , மறைந்து போய் யாரோ துணை நிற்பார், 
மறந்து போவார், 
எதுவும் மறக்கவில்லை , 
எவனும் நிற்கவில்லை,  
நீயும் என் நினைவை விட்டு விலகவில்லை, 
என் HERO.