புதன், அக்டோபர் 28, 2020

என் HERO

 முதலாய் பிறந்தாயே, 
 தலைக்கனம் இல்லாமல் வளர்ந்தாயே, 
 ஊரில் இருந்தும் ஹாஸ்டலில் படித்தாயே, 
 நட்பு இருந்தும் நண்பன் முன்னால் அவமானப்பட்டாயே,
 நட்பு சொந்தம் ஆனபின்பும், பின் தள்ளப்பட்டாயே,
 வாதாட படித்தும் விட்டுட்டு போனாயே, 
 வாதாட வாய்ப்பு இருந்தும் அமைதியாய் இருந்தாயே,
 பரம்பரை பணம் இருந்தும் சுயம்பாய் இருந்தாயே, 
 வேலையை குடும்பத்துக்காக காதலித்தாயே, 
 
 வேண்டாம் என்பதையும் அழகாய் சொல்லுவாயே, 
 வேண்டும் என்று எந்த தீமையும் செய்யாமல் இருந்தாயே, 
 ஒரே ஒரு CHICKEN பிஸ் தின்பாயே, 
 மகனுக்காக CIGARETTE விட்டாயே, 
 
RAJDOOT சத்தம் மூலம் என்னைக் கதி கலங்க வைத்தாயே, 
ஆசையாய் எதிர் பார்க்கவும் வைத்தாயே, 
எதிர்காலம் இல்லாத என் கையை பிடித்து கண் கலங்கினாயே, ஒட்டுற மண்ணு தான் ஒட்டும்
என்று சொல்லி பண பாடம் கற்ப்பித்தாயே, 
கொடுத்த பணத்தை ரெட்டிப்பு செய்தாயே, 
அதைக் கொடுக்கப் போன இடத்தில் அவமானப் பட்டாயே, 
ஒற்றை ரூபாய் இல்லாதவனிடம் கணக்கு சொன்னாயே, 
BLUE STAR போதும் மகனின் 
திருமணம் நடத்தி விடலாம்  என்றாயே, 
வயிற்றை ZIPஆக திறந்தாயே,  
திறக்காததால் கண்ணை மூடினாயே, 
காலம் கடந்தும் கண்ணில் நின்றாயே, 
என் பூஜை அறையில், 
எனக்குத் தெரிந்த ஒரே தெய்வம் நீ ஆனேயே.

மரணம் வரும் , மறைந்து போய் யாரோ துணை நிற்பார், 
மறந்து போவார், 
எதுவும் மறக்கவில்லை , 
எவனும் நிற்கவில்லை,  
நீயும் என் நினைவை விட்டு விலகவில்லை, 
என் HERO.

செவ்வாய், செப்டம்பர் 22, 2020

சம்பள உயர்வு

அனிதாவிற்கு அழூதோம்

திருமுருகனுக்கே திருவருளினோம் 

மெர்சல்க்கு மிரட்டபட்டோம்

மரியனாஜுலிய மண்டிஇடசெய்தோம் 

ஒவியாவின்  காதலுக்கு  ஓலம்இட்டோம் 

நிலவேம்புவிற்கு நிலத்தை நொண்டினோம்

சசியால் சிக்கலில் சிக்கினோம்

கட்சிக்குள் பேரத்தால் குதிரையாரோ?

கமலுக்காக காத்துகொண்டுஇருக்கிறோம்

தமிழனின் உணர்ச்சிய வைத்து 

விளம்பரம் தேடிகொள்ளும் சிலரால்

என்றும் பரபரப்பாய் இருக்கிறோம் 

பத்தரிக்கை தோழா...

 சம்பள உயர்வு ருமடங்கு இவ்வருடம் 


------

இவன் 

SP
--------

திங்கள், செப்டம்பர் 21, 2020

ஓம் Song

ஓம் ஓம் சொல்லுங்கோ 

ஓம் ஓம் சொல்லுங்கோ 

இந்த பாட்டை கேளுங்கோ

சாமி பாட்டு இல்லேங்கோ

புது STYLE தானுங்கோ

ஆமா ஆமா சொன்னேங்கோ 

லாஸ் EFFECT தானுங்கோ 


விஜய்  வந்து ஆடல 

சிம்பு வந்து பாடல 

தனுஷ் வந்து எழுதுல 

இந்த பாட்டை நானே எழுத 

இந்த பாட்டை நானே பாட 

இந்த பாட்டை கேட்டு நீயும் ஆடு 


VIRAL HIT ஆகாது 

VIRUS வந்து தாக்காது

வெள்ளம் வந்து பாயாது

இந்த பாட்டை கேட்கத்தான் உனக்கு நேரம் போதாது

எந்த பாட்டு  கேட்டும் எதுவும் இங்கு மாறாது 

உன்னோட வாழ்க்கை இங்க எவனுக்கும் புரியாது

புரிஞ்சாலும்  உன் கூட நிற்க போறது யாரும் இல்லை

இருந்தாலும் மேலே ஏறி வந்துறு மெல்ல மெல்ல

தங்கக்கட்டி யாரும் இல்லை

புணைக்குட்டி யாரும் இல்லை

சிங்கக்குட்டி தானே உள்ள

தோத்ததும் ஊத்திடுவான் பாலை

ஜெய்ச்சதும் போட்டுடுவான் மாலை

புத்திமதி சொல்ல நானும் வரல

இந்த பாட்டு உனக்கு இல்ல


உனக்காக அடுத்த பாட்டுப் பாட போறேன் கேட்கிறியா

வேனாம் வேனாம் இல்லை இல்லை 

நாக்கை வெட்ட சொல்லிறியா

பாடு பாடு

 WAIT ன்னுரோம் 

WAIT  பன்னுரோம் ரசிகனா மாறி நிக்கிறியா

கழுவி கழுவி ஊத்த போறியா

நல்லா இருக்குன்னு சொல்ல போறியா

STATUSல போட போறியா

WHATSAPPல அனுப்பிறியா

FACEBOOK share பன்னுறியா

FANஆக நிக்க போறியா

ARMYஒன்னு CREATEபண்ண போறியா

இல்ல  இல்ல  தூங்க போறியா

எதுவா இருந்தாலும் சொல்லிட்டு பண்ணு

வாங்கி தா டா ஒத்த பண்ணு

ஒத்த பாட்டு HITஆச்சு 

FANS கொஞ்சம் நூறாச்சு


AGREEMENT SIGN போடட்டா

வீட்டே ஒண்ணு கட்டட்டா

FOREIGN தான் போகட்டா

என் பெயரத்தான் உன் நெஞ்சுல பச்ச குத்தட்டா

கனவு தான் கண்டுட்டேன்

ஜெயிக்கும் முன்னே உலறிட்டேன்

இந்த பாட்டை முடிச்சுட்டேன்

அடுத்த பாட்டுல MEET பண்ணுவோம்

ஓம் ஓம் 

ஆமா ஆமா 

ஓம் ஓம் 

ஆமா ஆமா 


----

இவன் 

SP

---


Note:  For the Audio File, If Really interested, Please Contact piramusss@gmail.com



செவ்வாய், செப்டம்பர் 15, 2020

என்ராணி

                என்ராணி

                                 (Queen/Think U)


அன்புள்ள முன்னால் காதலியே...

மேலே மேலே நீ பறந்து போவதால் 

கீழே மெல்ல பாராமல் இருப்பதால் 

என் ஒர் அறிமுகம்,


கீழே கீழ் வானம் சிவக்கும் நாளில்

கொரோனா வந்தும் சாகாமல் இன்றும் 

உன் அழியா நினைவால் வாழும் கம்பிளிபூச்சி 

நான் ,


சக்கரை பேச்சுக்கள் கரைந்து போனாலும்,

காதோரம் பேசிய பேச்சுக்கள் காணாமல் போனாலும்,

“குடிக்காதே” என்று நீ சொன்ன வார்த்தைக்காக, இன்றும் குடிக்காமலேயே 

உன் நினைவில் போதையாகும் குடிமகன் நான்,                

 

உன் கரம் பற்றிய என் கரம் பற்றி,

ஒரு தரம் கூட கவிதை வடிக்காமல் போன,

தமிழில் வார்த்தை தேடா முட்டாள் கவிஞன் 

நான்,


டிக்க்குகள் நிறம் மாறும் முன்னர்,

உன் MSG வரும் முன்னர் வாழ்க்கை நடத்தி,

உன் MSGஆல் பசி தீர்த்தவன் 

நான்,


BUBBLY CHOCOLATE இன்றும் தர முடியாமல்,

உன்னைச் செலவழிக்க வைச்ச கஞ்சன் 

நான்,


Bet ஒன்று வைத்து ,அதில் தோற்று ,

கடன் பட்டு, G-PAY இருந்தும்,

அனுப்ப முடியாமல் தவிக்கும் லட்சாதிபதி நான்,            


தமிழன் நான் ,நி இருப்பதால்,

இங்கேயே இருந்துவிட்ட, கன்னடக்காரன்

நான்,


தொலைதூரம் சென்று வீடு திரும்பிய நாம்,

தனிப் பாதை அமைத்து,

நெடுந்தூரமாய் பயணித்தும் விட்டோம்,

நீங்கா நினைவுகள், மனதில் நீங்க மறுப்பதால்,

கண்களுக்கு விருந்து அளிக்காமல்

கனவுலகில் உன்னை அழைத்த விருந்தாளி நான், 


உன் நான், இன்று வேர் ஒரு ஆண் ஆனேன்,

என் நீ , என்றும் என் நினைவில் என்ராணி. 


----

இவன்

SP

-----

Inspired From : கண்டிப்ப்பா  சொல்ல மாட்டேன் பா 

நெடிலாண்

 


நெடிலாண்

                  

ஆண் நெடில்,ஏன் தெரியுமா??

 எதிர்பாலை நம்பி ஏங்கிக் கிடப்போம்.

எதிர் பால் வந்த பின்னால்,

எதிர்பாராமல் ஏதோ ஓர் எதிர்ப்பால்

எல்லாம் எதிர்த் திசையில் செல்ல...

எகிறிப் போக வேண்டுமென்று,

எட்டாம் அறிவு கேவலமாக கணக்குப் போட்டு

கடலுக்கு நடுவில் கனவு கோட்டை கட்டி,

அவள் இல்லாத விட்டிற்க்கு போக

ஓடாத வண்டியில் எறி சேர்ந்தேன்...

கதவைத் தட்டினேன்..


                

எட்டுத் திசை எங்கும் அவள் முகம் வந்து வந்து

என் எட்டாம் அறிவை கொஞ்சம் கொஞ்சமாய் —கொன்று

ஏழாம் அறிவாய் ஆன பின்பு...

அலை வந்து மோதி 

என் கோட்டை இடிந்து போய்

என் தூக்கம் கலைந்து முழித்து பார்த்தால்...

அருகில் அவள், அருகாமையில் அவள்

போட்ட சண்டையாவும் நினைவில் இல்லை

அவள் இல்லாமல் கதவைத் தட்டிய வீடு தான் ஞாபகம் வருது...

குறில் செயல்கள் செய்து ...

திருந்தி நெடில் ஆவதால் 

நெடில் ஆண் , குறிப்பு  அறிந்தேன் 


-------------

இவன்

SP

-----------


Inspired From : Iravi Climax

https://www.youtube.com/watch?v=tNJeRv6uNY8


படித்தவுடன் மறந்து விடவும்

ஓர் அனா இர் அனா வந்துச்சு கொரோனா 
 வந்ததாலா வீட்டுக்குள்ளே இருக்கென் நான் 
 வாங்கன்னா வணக்கம்னா சொல்லத் தான் முடியலனா
 எல்லாரும் வீட்டுக்குள் இருக்க வைச்சான் இந்த பாவி கொரோனா

 முகமூடி போட வைச்சான் 
 போடலனா போலிஸ் பிடிக்க வைச்சான் 
 சும்மா சும்மா கைய கழுவ வைச்சான் 
 இல்லானா ரத்தம் கக்கிச் சாக வைப்பான் 
 பீதியைத்தான் கிளப்பிவிட்டான் WHATSAPP DR ஒருத்தன்

 தங்கம் விலை இறங்கி போச்சு 
 SHARE MARKET படுத்து போச்சு 
 DEATH COUNTINGகூடி போச்சு  
பதக்க பட்டியல் எங்கோ இருக்கிற இந்தியா 
 கொரோனா RANK பட்டியலே முன்னேறியாச்சு 
 கலாம், உன் கணவு உன்மையாச்சு 

 ZOOMஐ INSTALL பன்னியாச்சு 
முன்னால் காதலியைப் பார்த்துச் சிரிச்சாச்சு 
 WFH பண்ணியே TIREDம் ஆச்சு 
 மொட்டை மாடியும் எறியாச்சு 
விளக்கும் தான் எத்தியாச்சு 
 டாக்டரைஐ வாழ்த்தியாச்சு 
 இதை செஞ்சே காலம் ஒடியாச்சு

 மாசம் மாசம் ஒருவன் வருவான் 
LOCKDOWN EXTENDணும் சொல்லுவான் 
 முக்கியமா கையை தட்டச் சொல்லுவான் 
 தப்பா பேசினா ANTI-INDIANம் சொல்லுவான் 

 GYMக்கு போக முடியல 
 நாக்க தான் அடக்க முடியல 
 தியேட்டரும் போக முடியல  
தல பிறந்தநாள் கொண்டாட முடியல  
மருந்து கண்டுபிடிக்க முடியல 
 இது எப்போ முடியும்னு தெரியல??  
இது எப்போ விடியும்னு தெரியல??

---------
 இவன் 
 ******** SP ********
---------

Inspired From : kaavitta kaavitta song
https://www.youtube.com/watch?v=5_sNpM6HluE