திங்கள், ஜூலை 09, 2007

பெண் நட்பு




தூரத்தில் பெண் ஓருத்தி
தள்ளி நின்று ஓர பார்வை பார்த்தாலே
காதல் பார்வை என்று என்னும் நான்
அருகில் ஓர் பெண் இருந்தும்
என்னுடன் என்றும் பேசுவாள் என தெரிந்தும்
என் நிழலாய் என்றும் வருவாள் என அறிந்தும்
எனக்குள் காதல் என்ற வார்த்தையை மறந்தவனாய்
நான் வாழ்கிறேன் அவள் கூட
நான் இருக்கும் தருனத்தில்
என்ன விந்தை என்று என்னும் போது
" டே மடையா"
புனிதமான நட்பை காதல் என்று பெயரிட்டு கொள்ளாதே
பெண் பழக்கம் நட்பில் தொடங்கி காதலில் முடிய வேன்டும்
என்று பழக்கிய சமுதாயத்திற்கு சொல்

என்னுள் காதல் என்ற ஆனி சொல்லை மறந்தேன்

ஒர் பெண்னுடன் நான் பழகும் போது

வியாழன், ஜூன் 21, 2007

ஏமாற்றம்



தோற்ப்பேன் என்று நினைத்தது
இல்லை ஆனால்
தோற்று தாணே போனேன்
வாழ்வேன் என்று
வாழவில்லை ஆனால்
தினம் தினம் செத்து கொன்டு தானே இருக்கிறேன்


நினைத்தது எல்லாம் நடக்கவில்லை
நடப்பவை எல்லாம்
நினைத்தது இல்லை
விழந்த போது எல்லாம் எழுவேன்
எழுந்த போது எல்லாம் விழந்தது தான் என்ன ??

வெற்றிகள் தொடாமல்

தோல்விகள் விடாமல்

என்னை தொரத்துவது தான் என்ன ??

முயற்சி செய்யாமல் வெற்றி கேட்கவில்லை
எல்லாம் செய்தேனே
தவறு நடக்க வாய்ப்பு இல்லை
செய்த தவறுக்கு பராய்சித்தம் எதுவும் இல்லை

நம்பிக்கை துரோகம் செய்த குற்றம் தான் மிச்சம்
நம்பிய அப்பா முதல் நன்பன் வரை ஏமாற்றம்
ஊரை ஏமாற்றி வாழ்ந்து
கடைசியில் என்னையும் நான் ஏமாற்றி விட்டேன்
உன்மையில் நான் வாழ்வது என்று....

புதன், மே 02, 2007

சித்தரை 1

தமிழ் புத்தான்டாம் இன்று
தமிழ் வளரும் இடங்களை சற்றே சிந்தித்தேன்

தமிழ் கற்ப்பிக்கும் ஆசிரியரை திட்டி தானே வளர்ந்தோம்
தவறான "ன" போட்டதற்கு மூர்க்கதனமாய்
தானே நாம் பேசிணோம்

தலைப்புகளில் தமிழில் இருப்பதால்
சினிமா என்று மட்டும் சொல்லாதே
வாலியின் வரிகளே ஆங்கிலம் வாசம் விச
கிருஷ்ன விஜயத்தில் தமிழ் விசினால் என்ன விசாமல் போனால் என்ன கிருஷ்ன்னை பற்றி படிப்பது
பால் அருந்து பாலகனா
பீர் குடிக்கும் பாதகனா
நாளை உல‌கில் தனக்கு பால் கிடைக்குமா
என்று அறியாதா வயதானவரா
நாளை அவர் இருப்பாரா என்றே அவருக்கு தெரியவில்லை
நாளை உலகில் த‌மிழ் இருக்க அவர் என்ன செய்ய போகிறார்

ஈன்று எடுத்த ஒர் கிராமத்து தாய்க்கு
தன் மகன் ஆங்கிலத்தில் பேசுவது தான் ஒர் மகிழ்ச்சி
கிராமத்து தாயே இப்படி இருக்க
நரகத்து தாய் நரகமாக மாறுகிறாள் தமிழுக்கு
வலியில் கத்தினால் கூட "MUMMY"என்ற
கத்த கற்ப்பிக்கும் தாயால் வளருதா..?
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை
என்ற வாக்கியத்தை நம்பவில்லை நான்
நம்பிணேன் இந்த விஷயத்தில்

தமிழ அழிய காரணம்
பாடங்களில் சிலப்பதிகாரம் திருக்குறள்
என்று மட்டும் சொல்லாதே
புரியவில்லை என்று மட்டும் தயவு செய்து சொல்லாதே
அவ்வாறு இருந்த மொழியை இவ்வாறு மாற்றி விட்டோம்
இவ்வாறு இருந்த மொழியை எவ்வாறு மாற்ற போகிறோம்
பயமாய் இருக்கிறது
நாளை என் கவிதை யாருக்கு புரியும் என்று
என் வரிகளில் உள்ள வார்த்தைகள் விளங்கவில்லை
என்று நாளைய சமுதாயம் சொன்னால்
குற்றியலிகரம் குற்றியலுகரம் எல்லாம் எங்கே செல்லும்
குறைந்து செல்லுமா அதன் பெயரை போல

ஒர் கனிப்பாம்
20 வருடம் பிறகு
தமிழ் அழிந்து விடுமாம்
தவறான கனிப்பு
20 வருடம் கழித்து
தமிழ் அழிக்கபடும்
தமிழ் கொல்ல பட்டு இருக்கும்
கொன்ற குற்றவாளி நாம்
ஆனால் எந்த சிறைசாலையும் நமக்கு இருக்காது
குற்றம் என தெரிந்தால் தானே குற்றம்

இன்றயே இளைஞனே
நாளைய தமிழை
நா.முத்துகுமார் எழுத போகும்
எதோ ஒர் விஜயத்தில் படியுங்கள்
நாளை நிங்கள் வயதனவராய் மாறுவதால்

ஞாயிறு, ஜனவரி 07, 2007

எங்கெ செல்கிறது என் தேசம்

ஜாதிக்கொரு ச௩கம் இருந்தும்
ஜாதிக்கொடுமை நடக்கிறது
கோயிலா மசுதியா என்ற பிரச்சனையே
இந்தியனுக்கு பெரும் பிரச்சனை என்று தோன்றுகிறது
அடிப்பட்டு கிடக்கும் மனிதனுக்கு உதவ அடிமனம்
ஆசைபட்டும் உதவாமல் அவசரஉலகத்தில் அவன் நுழைகிறான்
60 ஏக்கர்ல் அரசியல்வாதி லஞ்சத்தில் விடு கட்ட
6 அடியில் ஏழை விவசாயி பஞ்சத்தில் ப்டுக்க
கல்லறையில் கூட இடம் இல்லை
தா‌னியம் தரனி எங்கும் கிடைக்க உதவுபவன் விட்டில்
பழைய கஞ்சி மட்டும் கிடைக்க
உழைத்தவனுக்கு உழைப்பு மட்டும் மிச்சம்
உயிர் மட்டும் சொச்சம்

இதை பற்றி கவலையில்லாமல் பறக்கிறான்
அந்நியனாக மாற துடிக்கும் இந்தியன்
ஒரு வேலை அவன் கன்டதால்
இந்தியா பிடிக்காமல் போகிறானா...?
ஏழை ஏழையாய் தான் இருக்கிறான்
செல்வந்தன் செல்வந்தனாக இருக்கிறான்
மாற்றம் செய்யகூடிய
இளைஞன் கையில் விசா மட்டும் இருக்கிறது
அடுத்த FLIGHT ல் விடியலை நோக்கி பயனிக்கிறான்
ஆனால் என் தேசம்