என்ராணி
(Queen/Think U)
அன்புள்ள முன்னால் காதலியே...
மேலே மேலே நீ பறந்து போவதால்
கீழே மெல்ல பாராமல் இருப்பதால்
என் ஒர் அறிமுகம்,
கீழே கீழ் வானம் சிவக்கும் நாளில்
கொரோனா வந்தும் சாகாமல் இன்றும்
உன் அழியா நினைவால் வாழும் கம்பிளிபூச்சி
நான் ,
சக்கரை பேச்சுக்கள் கரைந்து போனாலும்,
காதோரம் பேசிய பேச்சுக்கள் காணாமல் போனாலும்,
“குடிக்காதே” என்று நீ சொன்ன வார்த்தைக்காக, இன்றும் குடிக்காமலேயே
உன் நினைவில் போதையாகும் குடிமகன் நான்,
உன் கரம் பற்றிய என் கரம் பற்றி,
ஒரு தரம் கூட கவிதை வடிக்காமல் போன,
தமிழில் வார்த்தை தேடா முட்டாள் கவிஞன்
நான்,
டிக்க்குகள் நிறம் மாறும் முன்னர்,
உன் MSG வரும் முன்னர் வாழ்க்கை நடத்தி,
உன் MSGஆல் பசி தீர்த்தவன்
நான்,
BUBBLY CHOCOLATE இன்றும் தர முடியாமல்,
உன்னைச் செலவழிக்க வைச்ச கஞ்சன்
நான்,
Bet ஒன்று வைத்து ,அதில் தோற்று ,
கடன் பட்டு, G-PAY இருந்தும்,
அனுப்ப முடியாமல் தவிக்கும் லட்சாதிபதி நான்,
தமிழன் நான் ,நி இருப்பதால்,
இங்கேயே இருந்துவிட்ட, கன்னடக்காரன்
நான்,
தொலைதூரம் சென்று வீடு திரும்பிய நாம்,
தனிப் பாதை அமைத்து,
நெடுந்தூரமாய் பயணித்தும் விட்டோம்,
நீங்கா நினைவுகள், மனதில் நீங்க மறுப்பதால்,
கண்களுக்கு விருந்து அளிக்காமல்
கனவுலகில் உன்னை அழைத்த விருந்தாளி நான்,
உன் நான், இன்று வேர் ஒரு ஆண் ஆனேன்,
என் நீ , என்றும் என் நினைவில் என்ராணி.
----
இவன்
SP
-----
Inspired From : கண்டிப்ப்பா சொல்ல மாட்டேன் பா