புதன், மே 02, 2007

சித்தரை 1

தமிழ் புத்தான்டாம் இன்று
தமிழ் வளரும் இடங்களை சற்றே சிந்தித்தேன்

தமிழ் கற்ப்பிக்கும் ஆசிரியரை திட்டி தானே வளர்ந்தோம்
தவறான "ன" போட்டதற்கு மூர்க்கதனமாய்
தானே நாம் பேசிணோம்

தலைப்புகளில் தமிழில் இருப்பதால்
சினிமா என்று மட்டும் சொல்லாதே
வாலியின் வரிகளே ஆங்கிலம் வாசம் விச
கிருஷ்ன விஜயத்தில் தமிழ் விசினால் என்ன விசாமல் போனால் என்ன கிருஷ்ன்னை பற்றி படிப்பது
பால் அருந்து பாலகனா
பீர் குடிக்கும் பாதகனா
நாளை உல‌கில் தனக்கு பால் கிடைக்குமா
என்று அறியாதா வயதானவரா
நாளை அவர் இருப்பாரா என்றே அவருக்கு தெரியவில்லை
நாளை உலகில் த‌மிழ் இருக்க அவர் என்ன செய்ய போகிறார்

ஈன்று எடுத்த ஒர் கிராமத்து தாய்க்கு
தன் மகன் ஆங்கிலத்தில் பேசுவது தான் ஒர் மகிழ்ச்சி
கிராமத்து தாயே இப்படி இருக்க
நரகத்து தாய் நரகமாக மாறுகிறாள் தமிழுக்கு
வலியில் கத்தினால் கூட "MUMMY"என்ற
கத்த கற்ப்பிக்கும் தாயால் வளருதா..?
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை
என்ற வாக்கியத்தை நம்பவில்லை நான்
நம்பிணேன் இந்த விஷயத்தில்

தமிழ அழிய காரணம்
பாடங்களில் சிலப்பதிகாரம் திருக்குறள்
என்று மட்டும் சொல்லாதே
புரியவில்லை என்று மட்டும் தயவு செய்து சொல்லாதே
அவ்வாறு இருந்த மொழியை இவ்வாறு மாற்றி விட்டோம்
இவ்வாறு இருந்த மொழியை எவ்வாறு மாற்ற போகிறோம்
பயமாய் இருக்கிறது
நாளை என் கவிதை யாருக்கு புரியும் என்று
என் வரிகளில் உள்ள வார்த்தைகள் விளங்கவில்லை
என்று நாளைய சமுதாயம் சொன்னால்
குற்றியலிகரம் குற்றியலுகரம் எல்லாம் எங்கே செல்லும்
குறைந்து செல்லுமா அதன் பெயரை போல

ஒர் கனிப்பாம்
20 வருடம் பிறகு
தமிழ் அழிந்து விடுமாம்
தவறான கனிப்பு
20 வருடம் கழித்து
தமிழ் அழிக்கபடும்
தமிழ் கொல்ல பட்டு இருக்கும்
கொன்ற குற்றவாளி நாம்
ஆனால் எந்த சிறைசாலையும் நமக்கு இருக்காது
குற்றம் என தெரிந்தால் தானே குற்றம்

இன்றயே இளைஞனே
நாளைய தமிழை
நா.முத்துகுமார் எழுத போகும்
எதோ ஒர் விஜயத்தில் படியுங்கள்
நாளை நிங்கள் வயதனவராய் மாறுவதால்