வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

போய் வருகிறேன்

USA இரவு 2AM

" ரகு நான் குடிச்சுட்டு  பேசுறானே  மட்டும்  தப்பா நினைக்காத டா  ...நீ எல்லாம் BILLGATES மாதிரி வருவ  டா  இப்போ எடுத்து இருக்குற முடிவு  வேண்டாம் டா ..."..."மேனேஜர் TALKடா  நம்பி நாசமா போகாத ரகு இவங்க  கொடுக்கற  20%HIKEக்கு இங்க இருக்கணுமா? ..இந்தியாலே இந்த சம்பளம்  கொடுக்கறாங்க ..நீ முடிவு எடுத்துட்டாஅப்புறம் என்ன ..நீ போ டா " என்றான் சேட்டன் ..."சேட்டா போன மாசம் போனன்ல கண்ணாடிக்காரன்  அவன் கிட்ட இப்படியா சொன்னேன்??..ரகு ரொம்ப நல்லவன் டா ....இங்க பாரு ..BARBER GYM BOY BUS MATE வரைக்கும் இன்னிக்கி TREAT கொடுக்குறான் .." "சார் நீங்க நல்லா குடிச்சுட்டு போதையிலே பேசுறேங்கனு நல்லா தெரியுது ..ஒசி குடின்னு சொன்னவுடன் மேனேஜர் இருந்து BARBER இருந்து நான் வரைக்கும் வந்துட்டோம்  கொஞ்சம் கூட வருத்தமே இல்லாம "..என்றான் சேட்டன் .. "RAGHU WE WILL REALLY MISS YOU".. "IF POSSIBLE COME BACK MAN" என்றவாறு வந்த நண்பர்கள் செல்ல .."I AM GIVING YOUR LETTER TO HR BUT திரும்ப வந்தா AGAIN WE WILL TAKE YOU WITH NO FORMALITY" என்று மேனேஜர்ம் சொல்லி விடை பெற ...பில் கட்டி சேட்டனும் நானும் விடை பெற்றோம்  ... 

பகல் 15:50க்கு JFK->FRANCE->BANGALORE ...இன்னும் ரெண்டு நாளுல இந்தியா போயிருவேன் ...இங்க வந்து நாலு வருஷம் ஆச்சு ..ஒரு தடைவ கூட இந்தியாக்கு போகல ...அக்கா கல்யாணத்துக்கு கூட போக முடியல இப்போ அக்கா பொன்னுக்கு 3 வயசு இனிமேல் எனக்கு இந்தியா தான் எல்லாம் என்ன ஆனா கூட ..... AIRPORT விட்டு இறங்குரப்பா சத்தியமா திரும்பா போக கூடாதுன்னு தோனுச்சு ..இட்லி சாப்பிட மனசு ஏங்குது ....BANGALORE இறங்கிட்டேன் இன்னும் ஒரு இரவு பயணம் என் ஊருக்கு போக ...ரொம்ப நிம்மதியா இருந்துச்சு ...

காலையலே என் ஊருல 

நான் யார்கிட்டயும் சொல்லல வரேன்னு ...திரும்ப போகலன்னு மட்டும் எப்படி சொல்லி இருப்பேன் ...அவங்களோட REACTION நேர்ல பார்க்கணும் ரொம்ப ஆசையா இருக்கு..எல்லோரும் ரொம்ப சந்தோச படுவாங்க...போன்லா பேசும் போது வந்துரு வந்துருன்னு சொல்லுவா அம்மா........ எல்லாரும் கிளம்பிட்டு இருப்பாங்க...அப்பா  POSTOFFICEக்கு அம்மா  SCHOOLக்கு  ...அக்கா பக்கதுல இருக்குற GARMENTகம்பனிக்கு ...அத்தான் பேங்க்க்கு...  அக்கா குழந்தை ரோஹிணிகூட போயிருவா அக்கா கூட.... நேரத்துக்கு வீட்டுக்கு போகலான ரோட்டுல தான் நிக்கணும் ... நல்ல வேலை எல்லாரும் இருந்தார்கள் ..அம்மா மட்டும் ஸ்கூல்க்கு போயிட்டாங்க ...

அப்பாதான் முதல்லா பார்த்தேன்.."டேய் ரகு ..சொல்லவே இல்லே...லீவ்லா வந்திருக்கியா ...சரி நேரமாச்சு நைட் பேசலாம் ..உள்ளே போ அக்கா              இருக்கான்னு"  கிளம்பி போயிட்டார் ...அப்பிடியே அக்கா அத்தான் ரோஹிணின்னு எல்லாரும் போயிட்டாங்க ...நான் குளிச்சு சாப்பாடு சாப்பிட்டு தூங்கஆரம்பிச்சேன் நிம்மதியான தூக்கம்..மாலை 7:30 க்கு எழுந்தேன் @US லா இப்போ மணி 6.

அம்மா மட்டும் பார்க்கல ...BUT அம்மா நான் வந்தது தெரிஞ்சு சூடா இட்லி செஞ்சுட்டு இருந்தாங்க ,,,"டேய் எப்படி இருக்க ..SUPRISE பண்றது இன்னும் உன்னை விட்டு போகலையா ?....எத்தன நாள் லீவ் டா ???... துரும்பா இளைச்சிட்ட ..BURGER தின்னு என் பிள்ளை எப்படி இருக்கான் பாருங்க "

அன்று இரவு அப்பாவுடன் பேச ...:"எத்தன நாள் லீவ் டா.?? ரோஹிணிக்கு சின்னதா பர்த்டே பார்ட்டி பண்றோம்...அது வரை இருப்பே லா "...."இல்லேப்பா இங்கேயே வேலை பார்க்கலாம்ன்னு இருக்கேன்.."..."இங்க னா  என் கூட போஸ்ட் ஆபீஸ் லையா  இல்ல ஸ்கூல் டீச்சர் ?..".."கிண்டல் பண்ணாதீங்க பா ..இங்கனெ சென்னையலோ பெங்களூர் லே யோ "... "US புளிச்சு போச்சா ..உனக்கு இப்போ தான் பொண்ணு பார்க்கலாம்ன்னு பேசிட்டு இருக்கோம் ..நீ புதுசா லூசு தனமா பேசாத ..ஒழுங்கா போற வழியா பாரு " என்றார் கோபத்துடன்...இரவு துக்கம் வரல ...

அடுத்த நாள் இரவு  அம்மா 11 மணிக்கு என் அறைக்கு வந்தாள்.. "இங்க வேண்டாம் டா ...உங்க அப்பா பத்தி தெரியும்ல ... உனக்கு இங்க ஒத்து வரத்து ...பாரு வந்தவுடனே HEAT வெடிப்பா  இருக்கு ..நீ அங்கே போன பிறகு தான் பிறந்தவுடனே இருந்த கலர் திரும்ப வந்து இருக்கு "..அம்மாக்கு உள்ளுக்குள்ளஆசை தான்...அப்பா சொன்ன அட்வைஸ்@திட்டு இப்படி பேச வைக்கிறது என்று கண்டுபிடித்தேன்...எல்லாரும் என்னை இருக்க விடல...

அடுத்த நாள் இரவு ...அண்ணி தோச விட ...அம்மா ஹாலில் சீரியல் பார்க்க ...நான் தனியாக சாப்பிட்டு கொண்டு இருந்தேன் ..என் அப்பாவிற்கு அவர் மேனேஜர் அழைத்தார் ..."ஆமா சார் ,பையன் வீட்டில தான் இருக்கான் ... இந்த அவன் கிட்ட கொடுக்கிறேன் " என்று கொடுத்தார் அலைபேசியை ... அவர் என்ன சொல்லபோகிறார் .."அட்வைஸ்" ஆக  கூட இருக்கலாம்..அவர் ,"எப்போ தம்பி வந்திங்க ?... இல்ல தம்பி என் பையன் BE CSE முடிச்சுட்டு, USA தான் போகணும்ன்னு   சொல்றான் ...உங்க கம்பெனி RECOMMEND பண்ணுங்களேன் " என்றார் ... "இல்ல சார், நான் வேலையை விட்டுவிட்டு வந்துட்டேன் ,இருந்தாலும் TRY பண்றேன் ,RESUME அனுப்பி வைங்க" என்றவாறு கட்  செய்தேன்  அலைபேசியை , "இனிமேல் என் பேச்சுக்கு மரியாதை இல்லைன்னு நல்லா தெரியுது  ,அதனால் நான் உன்கிட்ட எதை பத்தியும் பேச போறது இல்லை" என்றவாறு  என் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே சென்றார்  .

எல்லா படத்திலும் வரும் சந்தானம் போல ...எல்லா இடத்துக்கும் வந்தவனை இந்தியாவிலேயே விட்டுட்டு US போயிட்டேன் ..நான் கிளம்பும் போது அழுததே அவனுக்காக தான் ...ரெண்டு வருஷம் கழிச்சு பேச போறேன் ...
பார்த்தவுடன் கட்டிபிடிப்பு கண்ணீர் எல்லாம் இல்லை ...புன்னகை தான் ...அவன் எங்கயோ கிளம்பிட்டு இருந்தான் ...அப்படியே car கூட்டிட்டு போனான் ...முழுசா பேச முடியல 1000 CALL அவனுக்கு ...கடுப்பில் CELL  பிடுங்கி  SWITCH OFF செய்தேன் ..."டேய் என்னடா பண்றே ...முக்கியமா DEALING பேசிட்டு இருக்கேன்லா" "பெரிய புடலங்கா dealing நாளைக்கு பாருடா ...ஒன்னும் ரோடுலா நின்றமாட்ட ..வந்துருக்கேன் கொஞ்சம் கூட மதிக்காம அப்படி செல் கேட்குதோ ?? " என்றேன் சற்று கோபமாக  ..பொறுமையாக கேட்டு சரமாரியாய் பொழிந்தான்  "நீ வந்துருக்கா சந்தோசம் தான் ...என்ன தற்காலிக சந்தோசம் ...நீ நாளைக்கு உன் வேலைய பார்த்துட்டு US  போயிருவ ..நான் வேலை பார்க்காம சுத்திட்டு இருந்தேனா நடு ரோடுலா வெட்டியா இருந்தோமே அந்த மாதிரி இப்போ தனியா நிக்கணும் ...முன்ன மாதிரி இல்ல இப்போ குழந்தை வேற இருக்கு " "டேய் காசு எல்லாம் ஒரு மேட்டர் ?" என்ன DOLLARS சம்பாதிக்கற திமிரா ?? "..."அப்படி எல்லாம் இல்ல டா "..."நீ மறந்துட்ட... நல்லா ஞாபக படுத்துறேன்...வேலை இல்லாம இருந்தோம் ...உங்க அப்பன் உன்னை US போக வச்சுட்டார் ...என்ன எங்க அப்பன் தண்ணி தெளிச்சு விட்டுட்டான் "..உனக்கு என்ன  எதுக்கு வந்துருக்க ரெஸ்ட் எடுக்க தானே எடுத்துட்டு போகபோற ..."  இன்னும் பேசினால் நண்பன் கூட இருக்கோமா இல்ல  ENEMY  பார்க்க வந்தேனா சந்தேகம்  எனக்கே வந்தரும் தோனுச்சு ...மேலும் அவரை DISTURB செய்ய வேண்டாம்ணு தோனுச்சு நடு வழியல இறங்கிட்டன் .. DISTURBANCE நான் யாருக்கும் இருக்க கூடாது என்று 

ரோஹிணி BIRTHDAY இன்னிக்கி

என்  அக்கா பொண்ணுக்கு ஏதாவது கொடுகன்னும்னு தோனுச்சு so அவளுக்கு பட்டு பாவாடை வாங்கி GIFT WRAP பன்ணி கொடுத்தேன் ...BIRTHDAY CAKE வெட்டி வந்தவங்குளுக்கு பிட்சா பர்கர்ன்னு நான் கொடுக்கும் போது எனக்கு ADAMS பிர்த்டே பார்ட்டி தான் நினைவுக்கு வந்துச்சு ..சரக்கு மட்டும் தான் இன்னும் இல்லை...விரைவில் இந்தியா முன்னேறும் என எனக்கு தோன்றியது ...ரோஹினிக்கு GIFT கொடுக்க .. அக்கா  "முதலா இதை பிரித்து பாருடி..எதாவது US ELECTRONIC ITEM இருக்கும் .."...பாவாடை   என்றதும் எல்லோர் முகத்திலும் சோகம் ...இவன் US போனவன் மாதிரியா இருக்கான் எதோ உசிலம்பட்டி போனவன் மாதிரி தந்து இருக்கான் என்று பேச்சு எல்லோரும் சொல்ல...அது அப்படியே ஓரமாய் போனது ...விழா முடிந்தவுடன் விட்டு சென்ற பொருளாய் இருந்தது தமிழ்நாட்டு உடை@என்  GIFT

கண்டிப்பா இவள பார்க்கணும்ன்னு தோணுது...திவ்யா என் பள்ளி தோழி ...இவ கிட்ட பேசினா கொஞ்சம் தெளிவு இருக்கும்ன்னு தோணுச்சு....பார்த்தவுடன் சந்தோசம் தான்...இன்னும் கல்யாணம் ஆகாமல் தான் இருந்தால் என அறிந்ததால் ..."பண்ணி எப்படி இருக்க"...நல்லா தான் டா இருக்கேன் ...நீ எப்படி இருக்க? என்றாள் ... 5 நிமிட மௌனம் நிம்மதியா இருந்தந்து ...ஏன் என்றாள் ... 
வந்ததுல இருந்து ஒருத்தனாவது எப்படி இருக்கன்னு கேட்ட அடுத்த கேள்வி எப்போ கிளம்புரன்னு கேட்காம இருக்காண ...அப்பா இருந்து தோழன் வரை ...திவ்யா கேட்காமல் இருந்தது பேர்ஆனந்தம் ...அம்மா எப்படி இருக்காங்க...அக்கா  குழந்த எப்படி இருக்கா? என்றாள் .. எப்படி தெரியும் என்றேன் முத்து தான் FACEBOOK பேசும் போது சொன்னான் ...அடி பாவி முத்து என்ன ஜப்பான்லாயா  இருக்கான் ...ரெண்டு தெரு தள்ளி தானே இருக்கான்...எங்க டா ஒரே வேலை...வெட்டி ஆஃபீஸர் அப்படி என செய்யிரீங்க...இல்லா டா லூசு  FB வந்தது  இருந்து touch போச்சு ... பிரீத்தியும் நானும் எவ்வளவு க்லோஸ்..அவ கல்யாணம் கூட போகல ..JUST FACEBOOKபோட்ட போட்டோ க்கு லைக் தான் கொடுத்தேன்... சேம  FEELING போச்சு....  "கூல்" என்றேன் வேற என்ன சொல்ல தெரியாமல் ......"ATLEAST உனக்காவது  வரணும்  எப்போ டா உனக்குகல்யாணம்...ALREADY ஆயிரிச்சா சீனாகாரியோட" என்றாள் ...எங்க எல்லாரும் சொல்றாங்க எனக்கு பிடிக்கல ONLY PROPOSAL இருக்கு... நீ எப்படி. என்றேன்... அடுத்த மாசம் வந்தா நீ என்னை ஆஸ்திரலியா தான் பார்த்து இருப்ப ...ஆஸ்திரலியா SETTLE ஆனவன் ..."OH VERY GOOD VERY GOOD"... கடைசியாக அவளும் கேட்டாள் எப்போ கிளம்புறன்னு..இதோ இப்போவே கிளம்புறேன் ...ஃபேஸ் புக் பார்ப்போம்ன்னு..சொல்லிட்டு விடை பெற்றேன்

இங்க இனிமேல் என்ன வேலைன்னு தோணுது ...இங்க யாருக்கும் என்ன பிடிக்கல ...ஒரு பயணம் பிரிவு தந்தாலும் ..மாற்றம் தந்துருச்சு...எல்லாரும் அவங்க வட்த்துக்குள்ள போயிட்டாங்க ..இனிமேல் இந்தியாக்கு வர பிடிக்கல....திவ்யா கிட்ட பேசின பிறகு தோணுச்சு பேசாம US திரும்ப போயிறலாம்னு.. உறவு எல்லாம் பொய் நட்பு தான் உலகம் இப்போ எனக்கு ...BUT  FACEBOOK லைக் COMMENTகுள்ள தான் இருக்கும் போது ...இதுக்கு எதுக்கு இங்க இருக்கணும்....பேசாம தள்ளி இருந்தே பாசத்தோடு லைக் கொடுப்போம்னு


கண் எல்லாம் கண்ணீர் எதனால ஒரு காரணமா....வந்தா அழுதுட்டு போக கூடாது ...கூட சேர்ந்து சாப்பிட கூட யோசிக்கிராங்க ...  எனக்கு பயமா இருக்கு ...சொந்த ஊருல யோசிச்சு யோசிச்சு பண்ண கூடாது ... நான் ஏதாவது சொல்லுறதுக்குள்ள அவங்கள முடிவு பண்ணிகிறாங்க  

வந்தாரை வாழவைக்கும் தமிழகம்..வந்த என்னை FLIGHTஇல்  கண்ணீருடன் உட்காரவைத்தது ...ஏர் ஹோஸ்டெஸ்ஸ் கேவலமாக பார்த்தால் ...ஆண் மகன் அழுகிறேன் என்று ...ஆண் என்ன ? பெண் என்ன? உணர்ச்சி ஒன்று தான்...யாரும் பொற் படுத்தாமல் வழிந்த நீரை துடைத்தேன் பக்கத்தில் இருந்த சின்ன பெண் ஏர் ஹோஸ்டெஸ்ஸ் அழைத்து தண்ணீர் கேட்டாள் ...வந்தவுடன்
 
எனக்கு தந்தால் ...UNCLE அழாதீங்க என்றாள் .. அவள் பாசத்தை மதிக்காம போவேனா ...பேச தொடங்கினேன் ..
இறங்கும் வரை பேசிட்டு இருந்தேன் கூட சேர்ந்து CHOTTA BHEEM பார்த்தேன் ..என்னுடன்அவள் தூங்கினாள் ...தந்தை மகள் போன்ற உணர்வு இருந்துச்சு... இறங்கும் தருணத்தில் தான் கேட்டேன்..உன் பெயர் என்ன என்று...கீர்த்தி னு சொன்னா ....உங்க வீடு எங்கனு... சேலம் என்றாள்...லீவ் க்கு அப்பா கூட இருக்க வாறேன். என்றாள்...  வீட்டு ADDRESS கொடுத்து UNCLE வீட்டுக்கு கண்டிப்பா வாங்க ஜாலீயா இருக்கலாம் என்று...

எனக்கு கூனி போனது என் முடிவை திருத்தினேன் இந்தியாக்கு  கண்டிப்பா வருவேன் 25வருடம் இருந்த வீட்டில கிடைக்காம போகட்டும் , 10 வருட நட்பு முழும கூட கிடைக்காம  போகட்டும் ஆனா 18 மணி நேர FLIGHT பயணத்தில் கீர்த்தி மாதிரி ஒரு பொண்ணு மூலமா கிடைச்ச அன்பு மத்த எல்லாத்தயும் மறக்கஅடிச்சுருச்சு .

Moral:
அன்பு எல்லாம் கொட்டி தான் இருக்கு,அள்ள தெருஞ்சா மாதிரி அள்ளுங்க....