திங்கள், பிப்ரவரி 14, 2011

மனுஷன் இருப்பாணா அமெரிக்காலே?

என் பெயர் " ", பெயரை சொன்னவுடன் தெரிந்து விடும் பிரபலம் இல்லை நான், என் சொந்தங்கள் மத்தியில்.இன்னார் பேரன் இன்னார் குடும்பம் என்று என்னை அறிமுகபடுத்திய காலம் எல்லாம் மலைஏறி போனது என் அண்ணன் என்று Us சென்றானோ அன்று முதல் "அமெரிக்க வீடு" என்றே அழைப்பார்கள்காவேரி இல்லம்என்ற பெயர் காலாவதி ஆனது. அவன் Sales Operative analyst ஆக இருக்கிறான்,உலகமே காதலி முதல் கடைதெரு வரை தேடும் Googleல்... இந்தியனை இந்தியன் ஏமாற்றும் நேரத்தில் கூட யாரிடமும் பணத்தை பறிகொடுக்காமல் சுயம்பு போல சென்றான் வென்றான் இன்று அவன் சம்பாதிக்கும் சம்பளம் ஒரு சினிமாவில் சிம்பு சம்பாதிப்பதை விட அதிகம் அவன் லட்சியம் எல்லா நடிகரைவிட அதிகம் சம்பாதிக்க தான் நிச்சயம் நிறைவேறும்...வீட்டின் கருப்பு புலி @ கருப்பு எலி நான் தான் இருப்பது இந்திய தேசத்தில் ஒரு கொள்கையுடன்எந்த வெளிநாடும் போவது இல்லைஇந்தியாவில் இருப்பவன் எல்லாம் ஏழை அல்ல..”Rich gets richer Poor gets poorer” ரஜனி சொன்னது போல தான் என் SB account சத்தம் இன்றி ஏற்றி கொள்பவன் நான் " நான் ஒரு முட்டாள் " என்று எனக்கு certificate கொடுத்தவள் என் காதலிஉன் அறிவுக்கு நீ US போன பட்டையா கிளப்பி இருப்ப ..நீ தான் இந்தியா சந்தியா சொல்லி waste பண்றே " என்பால்,என் காதலி என்பதால் தான் என்னவோ என்னை உச்சிகுளிர பொய் சொல்ல கூடும் ! நான் கெட்டு போனதற்கு காரணம் விஜயகாந்த் படத்தை பார்த்து தான் என்பதால்தே.மு.தி.விற்கு vote போடுவது இல்லை என்றே சொல்லி இருக்கிறாள் ...Sorry விஜயகாந்த்

என் தாய் மும்மரமாக எனக்கு பெண் பார்க்கும வேலையில் இறங்கி விட்ட நேரம் அது .எல்லா பெண்களுக்கும் கார்த்தி' பிடித்து இருப்பது போல ..எல்லா பெண்களுக்கும் அமெரிக்கா மாப்பிளை பிடித்து போக. அமெரிக்க மாப்பிளை சினிமாவில் தான் comedy piece,நிஜ வாழ்கையில் வில்லன்கள் தான் . ஒரு பெண் பார்க்கும படலத்தில் கேட்டால் என் "மனைவி" ( "சாரி ங்க" மட்டும் சொல்லாமல் இருந்தால் ) “நீங்க இப்போ இங்க இருக்கீங்க ...எப்பவுமே இங்க தான் இருப்பீங்களா ? “.."yes ,i am earning 6 digit salary ,so wats the problem" என்ற போது.."எனக்கு அமெரிக்கா மேல அப்படி ஒரு craze...so அமெரிக்காலேயே Settle ஆகுற பையனை தான் பார்க்க சொன்னேன்" So “சாரி ங்கஎன்று சொன்ன என் just miss மனைவி ...இப்படி ஒருமுறை அல்ல பலமுறை நடந்துவிட்டது ..இந்த விறக்தியில் தான் காதலை காதலித்தேன் ... மனசு பிடித்தால் தான் காதல்...Settle ஆனவணா என்று பார்த்த பிறகு தான் மனசு பிடித்து இருக்கிறதா என்று பார்ப்பது Arranged marriage. நான் நல்லவன் அனால் சில பிடிவாதங்கள்எந்த வெளிநாடும் போவது இல்லை" இந்த ஒரு காரணம் தான் என்னை இன்னும் BACHELOR ஆக இருக்க வைக்கிறது. நான் காதலில் விழுந்த காரணமும் இது தான் ...என் காதலி உண்மை தெரிந்த நன்நாள் ..அவளும் பெண் தானே..அவள் என்னை "முட்டாள்" என்றால் ...இரு நாள் ஊடல் ...பேச்சு இல்லை..SMS இல்லை பின்பு எல்லாம் சகஜம் ஆனது.. ஆனால் அவ்வபோது என்னைமுட்டாள்என்று சொல்லிகொண்டே இருக்கிறாள் ..அவளும் என்னிடம் கேட்டே இருக்கிறாள் ...”எத்தனை தடவ நான் உன்னை "முட்டாள்" சொல்றேன்....Atleast ஒரு தடவையாவது US போயிட்டு வர வேண்டியது தானே "... "Us ஒரு போதை பொருள் @ நாடு ...போனவன் எவனும் வந்தது இல்லை இந்தியாவிற்கு..வந்தால் அக்காவிற்கு கல்யாணம், I mean சொந்த அக்காவிற்கு கல்யாணம் என்றால் மட்டுமே ஒரு வாரம் leave போட்டு வருவான் ....போதை பொருளுக்கு அடிமை ஆனவன் மீள்வது கஷ்டம அந்த கஷ்டத்தை ஏன் வேண்டும் என்றே அனுபவிக்கவேண்டும் என்று வந்தவன் எவனும் இல்லை" என்று நான் பெரிய விளக்கம் கொடுத்த போது..."உன்னை எல்லாம் 10,000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுஎன்று சொல்லும் ஒவ்வொரு முறையும் எனக்குள் இருக்கும் கொள்கைவெறி கூடி சென்றே போகிறது

Usல் இருந்து ஒரு நாள் call... என் அண்ணன் Company யில் ரெண்டு வாரம் leave விட ..இந்தியாவை சுற்றி சுற்றி அலுத்து போனவன் அமெரிக்கா சென்றவன்,,,அமெரிக்காவின் Niagra falls முதல் ..Liberty statue வரை பார்த்து பார்த்து பழகிவிட்டது அவனுக்கு ..தனியாக பயணித்த அவன் கால்கள் ...அதே இடத்தை மனைவியுடனும் சுற்றி விட்டான் ..இம்முறை leaveல் தாயுடன் அதே இடத்தை சுற்றி பார்க்க அவனுக்கு ஆசை ... என்னிடம் அவன் சொல்லுவது "எத்தனை தடவ போனாலும் ஒவ்வொரு முறையும் புதுஅனுபவம் தான்என்பான். அந்த leave காரணத்தால் என் அம்மாவை வலுகட்டாயமாக சம்மதிக்க வைத்துவிட்டான்.. வலுகட்டாயமாக சம்மதம் ஏன் என்றால் ...நான் தனியாக இருப்பேன் என்ற குறை தான் ..."அவன் என்ன சின்ன பிள்ளையா" என்றே சொல்லி சொல்லி சம்மதிக்க வைத்து விட்டான் .அவனுக்கு தெரிந்து இருக்கிறது அம்மாவை மட்டும் அல்ல மொத்த இந்தியாவையும் கூபிட்டு சென்று விடலாம் என் ஒருவனை தவிர

அந்த phone call வந்த நாள் முதல் ..புரியாதபல terms என் வீட்டுக்குள்
“ Passport எடுத்தாச்சா?".."tatkal Passport வாங்கு".."visaக்கு documents எல்லாம் சரியா இருக்கா?" .."Visa interview date என்னிக்கி ?"...அம்மாவின் வயது 52 ..இந்த வயதிலும் interview...Pass ? Fail ? என்கிற பயம் ..."pass" என்றவுடன் ..sweet எடு கொண்டாட்டம் தான் .."Air india வேண்டாம் ...British airways தான் நல்ல இருக்கும் " என்று ஒரே பேச்சு ... நமக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் அது நமக்கு அன்னியமாகவும் தெரியும் கிண்டலாகவும் தெரியும்..."எதோ கைஏந்திபவன் நல்ல இருக்கும்...சரவணா பவன் நல்ல இருக்காதுஎன்றவாறு பேச்சுகள் நடக்க...எனக்கு அது அன்னியமாகவே பட்டது. என்ன நான் மூக்கு நுழைக்காமல் நான் இருந்தால் எல்லாம் செப்புடன் நடக்கும் என்ற நினைப்பு எனக்குள்ளே இருந்த போது அவர்கள்ளுக்குள் இருப்பது இயல்பு தானே!!!

மூக்கு நுழைக்காமல் நான் இருந்தால்...அம்மாவின் பயண தேதி confirm ஆனது .."Piza burger சாப்பிட ready ஆயாச்சா?" என்றவுடன் .."போடா என் மருமக எனக்கு சூடாஇட்லி தருவா டா...” என்றால் .."நினைப்பு தான் பொழப்பா கெடுக்கும்" என்றேன் .. நாம் வெளி ஊருக்கு சென்றால் யாரிடமும் சொல்ல வேண்டாம் ...ஆனால் வெளிநாட்டில் உள்ள ஒரு ஊருக்கு போகிறேன் என்பதை சொல்லாமல் போனால்...”US போய் இருக்கா ஒரு வார்த்தை கூட சொல்லலா ...அவ முன்ன மாதிரி இல்லைஎன்ற வார்த்தை பாரபட்சம் இன்றி வரும் ..சொந்தங்கள் எல்லாருக்கும் "நான் ஜெயிலுக்கு போறேன்.. நான் ஜெயிலுக்கு போறேன்என்று சொன்ன வடிவேல் போலநான் USக்கு போறேன்.. நான் USக்கு போறேன்என்றால்..அது மட்டும் அல்லாமல் அவர்கள் வீட்டின் நண்டு பொண்டு சிண்டு எல்லாருக்கும் US Choclate வாங்கி வர வேண்டும்...ஒரு வீட்டின் பிள்ளைக்கு சட்டை எடுத்தால் அத்தனை குழந்தைக்கும் எதிரொளிக்க வேண்டும் அதனால்உங்களுக்கு எதாவது வேணுமாஎன்று கேட்டும்...அதை மளிகைகடை லிஸ்டை போல எடுத்து அதை தான் முதலில் பெட்டியில் வைத்தால்...வடகத்தை நமக்கே மறந்து கொண்டு இருக்கும் போது...வடகம் வத்தல் சாம்பார்பொடி ரசபொடி..என அத்தனை பொடிகளும் pack செய்து ...பெட்டியின் 25 kiloகுள் நிரப்பி ...அம்மா 100% america கிளம்பும் citizen ஆக மாறினால்

அம்மாவின் பயனதேதியில்.."என்னை மறந்திராதமா." என்றவுடன்உன்னை மறக்க தான் நான் USக்கே நான் போறேன்என்றவாறு சிரித்து கொண்டே பறந்தால் .. 2 நாள் flight பயணம் ...மூத்த பையனை பார்த்த சந்தோசம் ..மருமகள் கையில் சுடசுட இட்லி சாபட்டுருப்பாள் ...அம்மாவிடம் பேசி நாட்கள் ஒரு வாரம் மேல்ஆனது ..அப்படி நங்கள் தினமும் இந்தியாவின் வளர்ச்சி பற்றி பேசுவது இல்லை.."இனிக்கி என்ன சாப்பாடு ? " தான் எங்கள் பேச்சு ..அதுவும் காணமல் போனதால் சின்னதாய் ஒரு ஏக்கம்..அமெரிக்க கால் போட்டு விட்டால் ... என் balance அன்றே முடிந்துவிடும் அதனால் booster pack airtelல் போட்ட பிறகு "Call us @ 3p/sec" என்ற schemeஉடன் கால் செய்தேன் அண்ணன் mobileக்கு. அண்ணன் mobileக்கு இது வரை missed call தான் போனது ..இன்று தான் முதல்முறையாக..dialed callல் ..ஆனால் என் mobile சரித்தரத்தை அண்ணன் மாற்ற விரும்பவில்லை ...அவன் cut செய்தான்..So missed call listலேயே இருக்க அவன் busy ஆக இருக்கிறான் என்று நான் நினைக்க

அவன் அழைத்தான் என்னை மறு நொடியில்.நான் ஊரிடம் அதிகம் பேசினாலும் அண்ணனிடம் அதிகம் பேசுவது இல்லை." தாயிடம் அதிகம் பேச மாட்டாள் ...தந்தையிடம் அதிகம் பேசுவாள் மகள். தந்தையிடம் அதிகம் பேசமாட்டான் ...தாயிடம் அதிகம் பேசுவான் மகன்". இந்த logic அண்ணன் தம்பிக்கும் ...அண்ணன் தங்கைக்கும் பொருந்தும்...ஆனால் என்ன ஒரு வார்த்தை பேசினாலும் அழுத்தமும் பாசமும் இருக்கும்..."நல்லா இருக்கியா ? " என்றவுடன் "நல்லா இருக்கேன்என்றான்...”சரி அம்மா இருக்காலா ?"என்றபோது ." jet lag லா ..அதான் துங்கரா ? என்றான்அப்படியா சரி" என்று அவன் செய்த call நான் cut செய்தேன் ..பின்னர் googleல் "define:jet lag" என்றால் என்ன என்று தேடினேன் ..இதை அண்ணனிடம் கேட்டுருக்கலாம் ..இது தான் அண்ணன் தம்பி வேற்றுமைகள் ..."body's sleep/wake caused by high-speed air travel through different time zones. “.... என்று அறிந்து விட்டு என் வேலை செய்ய தொடங்கி விட்டேன் ..அன்று இரவு என் தூக்கத்தின்நடுவில் கால் வந்தது...யாரோ ஒரு உருப்படாத நண்பன் பேசிகிறான் தண்ணி அடித்து விட்டு என்று நினைத்து கொண்டே cell எடுத்துபோது ."annan@us" என்று பெயர் தெரிவிக்க ... "துங்கிடியா ? “ என்றால் என் தாய் ...."இல்லைமா ..சாமி குமிட்டு இருக்கேன்..” என்று சொன்னவுடன்.."சரி சரி எப்படி இருக்க..பால்காரன் ஒழுங்கா பால் போடுறாணா வேலைக்காரி வர வேண்டாம் சொல்லிட்டியா ? என்று கேட்டபோது உடல் தான் அங்கே இருக்கிறது என்று அறிந்து விட்டேன்..நான் பதிலுக்குநீ இல்லைலா..எல்லாம் ஒழுங்கா நடக்குது என்ன உன் மருமக வேகாத ரொட்டிய வேக வச்சு தாரலா?” என்ற போது ..என் அண்ணிஉங்க அம்மாவிற்கு pizzaவை பழக்கிவிடல...திரும்ப வரும் போது விட்டை நீங்க pizza corner பக்கத்தில தான் பார்க்கணும் ".என் அம்மாசுடா இட்லி என்னடா? வடை பொங்கல்ன்னு சரவணா பவனே இருக்கு ...நல்லா சாப்படுறேன் ..நல்லா இருக்கேன்..உன் தொல்லை இல்லாமஎன்ற போது ..”அம்மா return ticket என்னிக்கி ?” என்றவுடன் " அதை உன் அண்ணன் கிட்டகிழிச்சு போட சொல்லி இருக்கேன்..”என்றால் அம்மா ..”usகாரன் எண்ணி ஆறே மாசத்துல உன்னை துரத்திருவான் ..” என்றவுடன் "அது ஒன்னும் பிரச்சனை இல்லை...அம்மாக்கு Permanent Visa வாங்கலாம்என்றான் என் அண்ணன்..”இப்போ எங்களுக்கு program இருக்கு ..நீ போய் துங்குஎன்றால் அம்மா,..அப்படியே cut ஆனது கால்

ஒரு மாதம் ஆனது வாரம் ஒரு முறை போன் வரும்...நமக்கு குற்றாலம்..அவர்களுக்கு நயாகரா ...நமக்கு திருவள்ளுவர் சிலை அவர்களுக்கு liberty statue.. நமக்கு lic14 மாடி .அவர்களுக்கு empire state என்று எல்லாம் நம்ம ஊரு விசயங்களே தான் அமெரிக்காவில் பார்க்க நம்ம ஊரில் இட்லி சாப்பிட்டதை பற்றி பேசினால் முட்டாள்... அமெரிக்காவில் இட்லி சாப்பிட்டதை பற்றி பேசினால் அது ஆச்சரியம்..நம்ம ஊருக்கும் நேரமும் நிறமும் தான் வித்தியாசம் ..அந்த ஊரில் தூக்கம் தூங்கினால் சொர்க்கமாக வரும் என்ற பிரம்மை நமக்கு..எட்டாத கனி பற்றி என்றும் கட்டுக்கு அடங்காத கனவு உலகம் தான் நமக்கு .. " நயாகராவை பார்த்தேன் picasaவில் fotos பாரு " என்று ஒரு வாரமும் "liberty statue பார்த்தேன் FLickrs fotos பாரு" என்று ஒரு வாரமும் ..ஒவ்வொரு வாரமும் ஆரவாரம் தான் என்னால் முடிந்தது "Comments" கொடுப்பது, மிக கேவலமாக "Comments" கொடுப்பது ...தினமும் suntv serialகளை usல் onlineல் பார்ப்பதும் ..தமிழ் படத்தை "Ram theater"ல் பார்த்தவர்கள் ... "Chicagoவிற்கு சென்று Harry potter 7 series 1st part பார்த்தேன்" என்றபோது ..."முதல் series முதல் கடைசி series வரை பார்த்தவனுக்கே புரியாது ,,நீ என்ன பொம்மை படம் பார்த்தியா?" என்றே சொன்னேன் வேற என்ன சொல்ல?... "டிக்கெட்டின் விலை என்னஎன்றேன்..அண்ணன் “120$" என்றவுடன் ..2nd classல் கற்ற multiplication table தான் ஞாபகத்தில் வர "120*50=6000" என்று மனசுக்குள் கணக்குபோட்டு ,,,அந்த பணத்தில் எத்தனை படம் பார்த்து இருப்பேன் என்றே கணக்கிட்டேன்..இந்த hyderabadல் PVRல் படம் பார்த்தால் 120 ரூவாய் (6000/120=50)..அதே என் சொந்த ஊரில் பார்த்தால் 20 ரூவாய் (120/20=6)..இந்த உண்மை புரிந்ததால் அமைதி ஆனேன்

ஒரு நாள் அண்ணனின் கால் வந்தது...அண்ணன் எனக்கு iphone வாங்க முற்பட்டபோது ..எனக்கு எதற்கு போன் ..”என் போன் "nokia 7210" தான் என் iphone என்று வேண்டாம் என்று சொல்லிய போது தான் ..என் காதலி தனக்கு ipod வேண்டும் என்று கேட்டது ஞாபகத்துக்கு வர..அண்ணனிடம் "ipod வாங்கிட்டு வா என் friendக்கு" என்றேன்...யாருக்கு ? எவருக்கு ? address என்ன ?,...எப்படி friend. ?..எப்படி பழக்கம் ? ..என்ற இந்த கேள்விகள் கேட்க வாய்ப்புகள் அதிகம் இருந்தும் எதுவும் கேட்காமல்... 16gb ? 32gb? என்றான்..எனக்கு என்ன சொல்ல தெரியாமல் பிடிச்சத வாங்கு என்றேன்.. மீண்டும் ஒரு கால் இம்முறை அண்ணி பேச.."உங்களுக்கு நல்லதா ஒரு tshirt பார்த்து இருக்கோம் வேணுமா” ..."tshirt போட்டு வருஷம்16 ஆச்சு ..so கண்டிப்பாக வேண்டாம்என்று சொல்ல...”முடிஞ்சா reebok shoe size 9 என் office colleague கேட்டார்" என்றேன்..."சரி ok" என்று கட் ஆனது கால் ..மீண்டும் ஒரு கால்...இம்முறை அம்மா பேச....”டேய் ..நம்ம flat oppositeகாரர் கிட்ட phone கூடு?”என்றால்."எதற்கு மா?”என்றேன்..”அவருக்கு எதாவது வேணுமாணு கேட்கணும்என்றால்வீனா செலவு பண்ணாதே .அவருக்கு எதற்கு ..?” என்றேன் ..சட்டு என்று அம்மா tension ஆகி .."வேணும்னா வேணும்ன்னு சொல்லு இல்லை வேண்டாம்ன்னு சொல்லு ..அது என்ன உன் friendக்கே கேட்குறே ?"..."இல்லை மா ...அவங்க அண்ணன் எல்லாரும் us இருக்காங்க அவங்ககிட்ட iphone & tshirt சொல்லி இருக்கேன்" என்று நக்கலாக சொல்ல .."உனக்கு இங்க இருந்து ஒரு மண்ணும் எடுத்துட்டு வர மாட்டேன்..," என்றால் "thanks மா இத இத தான் எதிர்பார்த்தேன்.” என்றேன்..

ஒரு நாள் அண்ணனின் கால் வந்தது... அம்முறை நான் என் காதலியிடம் பேசிட்டு இருந்தேன்....waiting வந்த கால்ஐ கண்டவுடன் ... என் காதலியிடம் "திரும்ப கூப்பிடறேன் துங்கிறதா" என்று சொல்லி ...என் அண்ணனுக்கு கால் செய்தேன்..அம்மா எடுத்து விட்டால் .."டேய் அப்படி யார்கிட்டடா பேசுற ,,,மணி என்ன? ..மணி 12 தானே என்றால் ..”இல்லை மாஎன்று இழுத்து ..:”சரி எதற்கு கூப்பிட்டஎன்றேன் .."நீ யார்கிட்ட பேசுணா ? உண்மையா சொல்லு " என்றால்..நான் "உன் மருமககிட்ட தான் பேசிட்டு இருந்தேன் “ ..."டேய் விளையாடாதடா" என்றால் ...இது தான் நல்ல நேரம் ..நம் காதலை அம்மாவிடம் தெரிவிக்க என்று ...”என் கதையின் முன் சுருக்கத்தை பேசி விட்டு..” டென்ஷன் ஆக இருந்த அம்மா ..எனக்கு எப்படி அவள் காதலி ஆனால் என்ற கதையும் ,,,எனக்கு காதலி கிடைத்த அதிசயத்தையும் சேர்த்து சொல்ல சிரித்தே போனார்கள் முவரும் ...என் அண்ணி சட்டு என்று ...சரி conference கால் போடு ..but நாங்க இருக்கோம்நு காட்ட கூடாது அப்போ தான் நானும் உன் அண்ணனும் உங்க அம்மாகிட்ட permission வாங்கி தருவோம் என்றவுடன் ..சரி அண்ணி “Deal ok “ என்று சொல்லி...அவர்கள் lineலேயே இருக்க ..என் காதலிக்கு conf call போட ,,,அவள் எடுத்துபேசியாச்சா என்றால் அதுக்குள்ளா?.., any probs?...." .." இல்லை" என்றேன் ....." உங்க அம்மா வர்றதுகுள்ள at-least ஒரு தடவையாவது ஒரிசால காளி கோவிலுக்கு போயிட்டு வரலாம் ...நாத்திகா எதாவது கமல் மாதிரி பேசின அடி இடி மாதிரி விழும்." என்று அவள் சொல்ல..சட்டு என்று அம்மா அண்ணி அண்ணன் முவரும் courseஆக .."என்னது அடி வாங்குரியா இப்பவே?” என்று கத்த ..அம்மா அண்ணி அண்ணன் முவரும் என் காதலியிடம் பேச ,...நான் அமைதி ஆனேன் ...கேட்டு கொண்டு மட்டும் இருந்தேன்...அவள் வெட்கப்பட்டு பேசாமல் நடிப்பதை போல் நடித்திகிட்டு இருந்தால் முதல் முறை என்பதால் ...என் அண்ணன் சட்டு என்று என் காதலியிடம் "உன் நம்பர் என்ன" என்றான்,..அவளும் சொல்ல...என் அண்ணன் என்னிடம் நீ cut செஞ்சுரு நாங்க பேசிக்கிறோம் என்று சொல்ல ..என்னால் மறுப்பு ஏதும் பேசமுடியாமல் என் காதலியை தனியாக விட்டுவிட்டு கட் செய்தேன்.

மணி 2am..கால் செய்தேன் இப்பொழுதும் waiting...மறுநாள் மதியம் 1.00 மணி ..என் காதலிக்கு பேசினேன் .."இப்போ தான் எனக்கு விடுஞ்சுது ...விடிய விடிய நாங்க எல்லாரும் பேசிகிட்டு இருந்தோம்..ur family cool family... நீ மட்டும் எப்படி டா இப்படி எதிர்மறையா... சரி இன்னிக்கி உங்க அண்ணி பேசுறாங்க so night கூப்பிடாத" என்றால் ...இப்படியே எனக்கு usல் வந்த கால் எண்ணிக்கைவிட அவளுக்கு வந்த கால்கள் தான் அதிகம்...நான் என் காதலியிடம் பேசிய கால்கள் விட usல் இருந்து அவளுக்கு வந்த கால்லின் எண்ணிக்கை தான் அதிகம்

அம்மாவின் 6 மாத காலம் முடிந்தது ...airportக்கு நானும் என் காதலியும் சென்றோம் பார்த்தவுடன் அம்மாவிற்கு பிடித்து போக..."இவன் நேரம் சரிஇல்லை..கல்யாணம் இவனுக்கு 27 வயுசல தான் So wait பண்ணுங்க for 3 years” என்றால் அம்மா ..எனக்கும் அவளுக்கும் எந்த கஷ்டமும் இல்லை... வீட்டுற்கு வந்தோம் அவளை Hostel இல் இறக்கி விட்டுவிட்டு ..அம்மா வீட்டுற்கு வந்து சோபாவில் உட்கார்ந்தால் ..."சரி அடுத்து எப்போ us" என்று கேட்டவுடன் ... "போடா ...என்ன தான் இருந்தாலும் நம்ம ஊரு போல வருமா...”மனுஷன் இருப்பாணா அமெரிக்காலே?” என்று சொன்னால்

ரெண்டு வாரம் சென்றது ..ஒரு நாள் ஒரு கால் வந்தது அம்மாவிற்கு அண்ணனிடம் இருந்து ..."Balllon festival மா சூப்பரா இருக்கும் நீ கிளம்பி வாஎன்றான் ..நான் வீட்டுக்கு 5pm வந்த நேரம் ...”டேய் ரெண்டு நாளுல usக்கு கிளம்புறேன்என்றால் என் தாய் ...”ஏன் மாஎன்றேன் .."எதோ ballon festivalஆம் .அதான் வர சொல்லி இருக்கான்என்றால் .. மனுஷன் இருப்பாணா அமெரிக்காலே?” என்று சொன்ன அம்மாவின் வாக்கியம் காலாவதி ஆனது

குறிப்பு :
Read n+1 time for the n+1 travel for அம்மாவின் பயணங்கள்

Moral:
வெளிநாடு ஒரு போதை பொருள் @ நாடு ......போதை பொருளுக்கு அடிமை ஆனவன் மீள்வது கஷ்டம


இந்த கதையின் title “மனுஷன் இருப்பாணா இந்தியாவாலே" என்று தான் வைத்து இருக்க வேண்டும் ..

SO மன்னித்து விடுங்கள் to all

Dedicated to sank 4 7/1/4 and மனுஷன் @ US and all முட்டாள்'s @ india