வியாழன், ஏப்ரல் 29, 2010

சப்ப மேட்டர்

S.பிரமு (18/01/2010)

எங்கள் குடும்பம் விகரம்மன் படத்தை போல தான் ....ஆனால் அவர் படத்தின் முடிவில் சுகமாய் முடியும் .. என் முடிவு சுகமாய் முடியலாம் இல்லை சுகம் இல்லாமல் முடியலாம் எவர் கண்டா ஆனால் இன்று சுகம் இல்லாமல் தான் போகிறது என்னால் பல பேருக்கு...கதையின் தொடக்கமே சோகத்தில் முழ்கி sentiment என்ற உங்கள் weakness ஆல் பெயர் வாங்கும் வெறியன் நான் அல்ல ..ஆதலால் முதலில் சுகம் ஆனவர்களை சொல்கிறேன்.. என் அண்ணன் அண்ணாuniversity இல் ஒரு arrear கூட இல்லாமல் degree  முடிப்பவன் முட்டாள்என்றால் அவன் முட்டாள் தான்..eee  இல் படித்து IT  இல் வேலை பார்ப்பவன் பாக்கியசாலி என்றால் அவன் பாக்கியசாலி தான் . .  என்னுடன் compare பண்ணும் போது அவன் புத்திசாலி ஆகிறான் ...முதல் இடத்தை அவன் தக்க வைத்து கொள்ள பல முறை நான் தோற்று இருக்கிறேன் ..என் தோல்விக்கு
காரணம் கேட்பவனுக்கு நான் சொல்லும் சாக்கு போக்கில் இதுவும் ஒன்று ,,,என் தாய்..கடவளும் தாயும் ஒன்று ...எல்லா புகழும் ஒருவனக்கே ..என்று பாடிய AR RAHMAN  ..கூறிய ஒருவன் தாய் ஆக கூட இருக்கலாம் ...எல்லா அம்மாவை போல தான் பாசத்தை தவிர வேர் ஒன்றும் அறியாதவள் ...என் தாய் என் மீது பாசம் வைப்பதாலே .சிலருக்கு பிடிக்காது ..சிலர் யார் என்று உகிக்க முடியாத நண்பர்களே.. இந்த கதையின் நாயகன்.. என் தந்தை தான்...தவமாய் தவமிருந்து தந்தை போல..வாரணம் ஆயிரம் தந்தை போல..நண்பனாக இருந்திருக்க கூடும் ...நான் சேரனை போல...சூர்யாவை போல இருந்திருதால்...நான் போக்கிரி விஜய் போல தானே சுற்றி திரிந்தேன் அதனால் தான் ..என் தந்தை சூர்யா வம்சம் தந்தை போல என்னை சுட்டு கொண்டு இருப்பார் ஒரே வார்த்தையில்... லாயக்கு இல்லாதவன் என்று...

நங்கள் வசிக்கும் நகரத்தின் பெயரை கூறாமல் இருப்பேனா ..சென்னை யில் ... 6.13th street annna nagar west ... கதவை யார் தட்டினாலும் நான்  தான் திறப்பேன் ..அப்படி பிஸி ஆனவன் நான் ... என் குடும்பத்தில் நான் சிறிதேனும் சாதிப்பேன் என்ற நம்பிக்கை என்று எல்லாம் வைத்தால் என் குடும்பம் தான் உலகின் மிக பேராசை பிடித்தவர்கள் ஆக மாறலாம் ...சிறுதேனும் நிலைப்பேனா இந்த வேகமாக சுழலும் மனதர்கிளின் நடுவில் என்ற பயம் தான் அவர்களுக்கு .. நான் தையிரமானவன் ..நான் துடிக்கும் இளைஞன் ..நான் பாயும் புலி என்று punch dialogue சொல்லவில்லை .. நான் சாதாரணம் ஆனவன் தான்.

இன்று என் தந்தை என்னை பார்த்த நொடியில் மணி 7.43 am என்று காட்டியது ..தந்தை walking  சென்று வந்த நேரம் ..நான் முழித்து கொண்டு பேப்பரில்
விரைவில் வெளியாக போகும் என் தலையின் படமான அசல் advertisment கூர்மையாக
பார்த்து கொண்டு இருந்தேன் ..வந்த என் தந்தை பேசாமல் குளிக்க சென்றார் ... என்  அண்ணனுக்கு nite shift முடிந்து வீட்டின் caling பெல் ஐ அடித்தான் ..நான் சென்று  திறந்தேன்..வந்தான் சென்றான்.. அவன் படுக்கை அறைக்கு ...என் அண்ணன் 26 வயது ...எங்கள் பூர்விகம் .. விருதுநகர் என் அண்ணன் ராசி துலாம் ..சம்பளம் 20000 இந்த  விவரம் எல்லாம் எனக்கும் தெரியாது அவனுக்கு வீட்டு ல் பெண் பார்க்கும் படலம் நடக்கும்   வரை ...அவனுக்கு முடிந்தவுடன் எனக்கும் விரைவில் திருமண பேச்சு தொடங்கிவிடும் .. என் காதலி பெயர் "அஞ்சலி " வை எப்படி வீட்டுல் தெரிவிப்பேன் என்று மன குழப்பம் தொடங்கி நாள் இன்று முதல் '123' வதுநாள் ...என் அண்ணன் அறிவு வளர்தனே தவிர  காதலை துளி கூட வளர்க்கவில்லை .. நல்லவன் ஆக வளர்ந்தான் ..நல்லவனை போல  இருக்கிறான்.. அதான் எனக்கு Problem... முத்தவன் அழகாக வழி காட்டினால் தான்  எனக்கு உதவியாய் இருக்கும் ...என்ன செய்ய எல்லா problem என்னால் ஆரம்பிக்க படுவதால் என்னை "ஆரம்ப நாயகன் " என்று கூட அழைக்கலாம் .. நான் தான் தொடங்கி  வைக்க கட்டாயம் ... அப்பா குளித்து விட்டு பக்தியில் நீராடி விட்டு ...வந்தார் Morning at 8il times now channel பார்க்க .....நானும் பார்பேன் ..பொம்ம படம் மட்டும்
அல்ல ..அந்த news reader என் anjali போல தான் இருப்பாள் ..காதலிக்கும் போது
கல் கூட காதலியின் முகமாக மாறிட கூடும் ..உண்மை தான்.. காலையிலே காதல்
மயகத்தில் நான் முள்கிட... உள்ளூர் செய்திகள் முடிந்தவுடன் ...உலக செய்தி தொடங்கும்  முன் இடையில் உள்ள இடைவெளியில் என்னை அழைத்த என் தந்தை 'டேய் நீ நுங்கம்பாக்கம் railway station பக்கத்தில் உள்ள SBI bankku போய் rs 1000 deposit பன்னிரு என்றார் ...acc name:கிருஷ்ணன், என் அண்ணன் கல்யாணத்துக்காக செலவு இது ...என் அண்ணனின் பெயரை அந்த பட்டியல் இட்டு பின் பெண் இருப்பவர் எங்கள் கதவை தட்ட வாய்ப் புகள் ஏற்றி வைக்கும் இடம் ... bank comiision கிடையாது என் என்றால் அவர் Account um sbithan...11 இலக்க என்னை ஞாபகத்தில் வைத்தால் போதும் அந்த acc name ...என் அஞ்சலியின் தந்தை பெயர் .பேசிகிட்டே இருக்கும் போது current cutஆனது .. chargeil  இருந்த செல்லை உருகி 11 இலக்க என்னை டயல் செய்தேன் ...அமெரிக்க call போல...பின்னர் cut செய்தேன் ... ஞாபகத்தில் நான் வைக்கும் வேலை மிச்சம்... தந்தை எனக்கு comission என்று இல்லை பயண செலவு 10 ரூபாய் தந்தார்...

என் வேலை தொடங்கியது ... annnagar west  bus stop சிற் பல 
குமரிகள் குவியும் இடம் .. இங்கே தான் முதலில் அஞ்சலி யை சந்திதேன் ...அந்த  நினைவுகளோடு அவளுக்கு cal செய்தேன் ...அவள் செல்பேசி switchedoff..சந்தோஷமான விஷயம் ..இனி அவள் தான் எனக்கு  call செய்வாள் ..missedcall alerts வைத்து இருக்கிறாள் ... cut செய்த போது "battery low " என்று காட்டியது ... நான் பேருந்துக்கு காத்து  கொண்டு இருந்த நேரம் "9:45"...பல பெண்கள் காலேசுக்கு சென்றனர் ..சிற் பலர் போக விருப்பம் இல்லாதது போல BUSSTOP ஐ நோக்கி வந்தனர்... என் பேருந்து வர வில்லை காத்து கொண்டு இருந்தேன் ... என் பேருந்து என்றால் ...சென்னையில் வசிக்கும் சகலமான நண்பர்களுக்கு தெரியும் அண்ணாநகர் to நுங்கம்பாக்கம் rly ஸ்டேஷன் பக்கம் தான் ...சில பஸ் தான் route வேற ...பல பஸ்க்கு இது தான் ரூட் .. எனக்கு 
மட்டும் பேருந்து வர வில்லை என்றது எல்லாம் பொய் ...நான் எதிர்பார்த்தது என் மன நிற பேருந்து அது தான் வெள்ளை நிற பேருந்து ...AC பஸ் ,deluxe பஸ்.. என பல வண்ணங்களும் ரகத்திலும் இருந்தாலும் ...என் வருமானத்துக்கு ஏற்ற தரமான soap போல...என் தந்தை தந்த ரூபாய்க்கு ஏற்ற பஸ் வெள்ளை board... 27h ஆவடி to அண்ணா சதுக்கம் என்ற பஸ் வர அதில் ஏறி கொண்டேன் ... பல பேர்களில் ஒருவனாய்.. பயணிக்க கூட்டம் அதிகம் தான் ..எல்லாம் officeku செல்லும் கூட்டம் .. வந்தார் நாளைய superstar @ conductor 10 ரூபாய் நீட்ட..."5 ருபாய் " கேட்டார் பதிலுக்கு "ticket 3 ருபாய் தானே"  என்றேன் .. அவர் "5 ரூவாய் தான்" ... என்றார் ..வேர் வழி இல்லை ..சில்லறை இல்லை என்றேன் .ticket பின்னல் 5 ரூவாய் என்று எழுதி ticket கிழித்து தந்தார் .. தம் போச்சே என்ற வருத்ததில் இருந்தேன் ... போக 3 ருபாய் வர 3 ருபாய் மீதி இருக்கும் 4 ரூபாயில் தான் என் புகை செலவு செய்ய கணக்கு போட்டேன் ...வரும் போது நடந்து வந்தால் தான் என்னால் தம் போட முடியும் ...நடந்தே வந்து விட மன துணிச்சல் ஜாஸ்தி தான் எனக்கு ...சென்னை ஊட்டியை போல இருந்தால் நடக்கலாம் ..சென்னை தன் வெப்பத்தின் காட்டத்தை அல்லவா காட்டுது.. future plan ஐ பயனத்தாலே போட்டேன் ..Cigarate smoking is bad when u walk in sun...என் நிறுத்தம் வரும் போது கண்டக்டர் இடம் ஒரு இளைஞர் ...அவர் டிக்கெட் காட்டி கொண்டு ..சில்லறை என்றார் .. நானும் 
காமிக்க ...அவர் எல்லாரையும் திட்டி தீர்த்தார்.".சில்லறை எடுத்து வர
தெரியாதா" .. அவர் டிக்கெட் ஐ வாங்கி கொண்டார் ..சட்டை பையில் கையை விட்டு
..தன் எழுதுகோலை எடுத்தார் இருந்த 5 ரூவாய் அடித்து விட்டு .என் கையில் 10 ரூவாய் தந்தார் ..

அந்த சக இளைஞன் இடம் கண்டக்டர் சொன்னது "இவனிடம் வாங்கி கொள்"  என்றார் ...ஒற்றனாக ஏறினேன் . .ரெட்டையன் போல இறங்கினோம் ...என்னுடன் நடப்பவன் என் காதலி என்றால் சென்னை வெயிலும் ஊட்டி குளிரும் ஒன்று தான் ... நடப்பவன் யாரோ ஒருவன் ... கூடவே வந்தான் .. கடையில் பொருள் வாங்கி காசு
குடுத்தாலே சில்லறை சரியாக கூடு என்பான் ..ஓசியில் சில்லறை யார் கூடுப்பான் ... பார்க்க அந்த மனிதர் decent என்றாலும் ...5 ரூபைக்காக பின்னாலே வருகிறானே என்றதால் .. எனக்குள் ஒரு சந்தோசம் என்னை போல் நாட்டில் பல பேர்கள் பண புழக்கம் இல்லாமல் இருகாங்க போல ..என்று எண்ணத்தில் ..என்ன செய்வது என்று முழித்தேன் ...எனக்கு நேரம் கடத்துவதில் இன்பம் என்ற போதும் ..மணி 10.05...அவர் ஆபீஸ்க்கு நேரம் ஆனது போல ..சற்று என்று என் கையில் இருந்த பத்து ரூபாயை என் அனுமதி இன்றி பிடுங்கி ஒரு சூடாக வடை businees செய்யும் முதலாளி இடம் கொடுத்தான் சில்லறை பெற்றான் ..சிலருக்கு சில விஷயங்கள் நடக்காது ...பெண்களுக்கு மட்டும் அல்ல ..அதிர்ஷ்டம்
உள்ளவனுக்கும் உதவ ஆள் வண்டி கட்டி கொண்டு வர தான் செய்கிறார்கள் ..என்னிடம் 5 ருபாய் கொடுத்து..."வரேன் boss" என்றான் ...நான் தலை ஆட்டி கொண்டேன் ... என்ன என்னால் செய்ய முடியாத "சப்ப மேட்டர் ஐ "அவன் செப்புடன் செய்துவிட்டான் என்ற வருத்தம்@EGo தான் ...

நுங்கம்பாக்கம் SBI சற்று கூட்டமாக தான் இருந்தது ...நான் பணம் போடும்
நாள் தான் இப்படி இருக்கும் என்று நினைத்தேன் .."கூட்டம் இவ்வளவு இருக்குதுன்னு தெரியுது ல ..இன்னொரு branch ஆரம்பிக்க வேண்டியது தானே ..நாட்டில் வேலை திண்டாட்டம் கொஞ்சம் குறைய chance இருக்குல "என்று ,..பேசி கொண்டு சென்றான் finance minister பா.சிதம்பரம் போலஒருவன் ..சரி என்று உள்ளே சென்றேன் ...Centralised ac தான் ...18degree என்றது பல மக்களின் முச்சு காற்று சூடாக இருந்தது ..உழைத்த காசை பத்திரமாக சேமிக்க வேண்டும் என்ற பயத்தில் ...so temprature 28 pola
இருந்தது .. உள்ளே சென்ற நேரம் ...அஞ்சலி missed call alert a பார்த்து விட்டு எனக்கு cal செய்தால் ..அவளுக்கு அது tea time..9 ku சென்றால் 10.30 tea...12..ku சாப்பாடு ...3 ku tea..4 or 5 அவள் packup time...கொடுத்து வைத்தவள் .. நான் கேட்டால் கூட கொடுப்பது இல்லை இரு வேலை tea..."" சாரி da...இன்னிக்கி 8 மணிக்கே office வர சொல்லிட்டாங்க..எதோ general bodymeeting...ஆமா நீ எங்க இருக்க ..ஒரே சத்தமாக இருக்கு ...பொறுப்பு வந்து interview பக்கம் போய்ட்டிய.... நான் சொல்லி கேட்கமாட்ட ..இப்போ யாரு சொல்லி போன ..யாருடா அவ ..எனக்கு போட்டியா? "" ..என்று நிறுத்தாமல் பொழிந்தால் ...அவள் பேச்சில் அன்பு இருக்கிறது என்று நான் சொல்வேன் ..அவள் பேச்சில் நக்கல்  இருக்கிறது என்று நீ சொல்லுகிறாய் ..அவள் பேச்சில் சந்தேகம் இருக்கிறது என்று அவன் சொல்கிறான் ...பார்வைகள் பலவிதம் ..நான் sbiku வந்தேன் என்றேன்.. "helo bankla கால் பேச கூடாது என்று தெரியாதா" .... என்றான் ஒரு நல்லவன் என் அண்ணன் அல்ல .....so AC ilஅவள் பேசி கொள்வது போல நான் பேசி கொண்டு இருந்த சுகம் ...cut ஆனது ..காதலிடம் பேச ac எதற்கு ..மொட்டைமாடி வெயில் கூட சுகம் தான் ...என்றதால் வெளியில் இருந்து தொடர்ந்தேன் ... "" என்ன விஷயம் sbila
அங்க ...any loan ? சும்மா கூடு க்கரங்கலா ..?.."" இது நக்கலாகத்தான் ஊருக்கும் படும் எனக்கும் பட்டதால்..நக்கலா என்றேன் ..இது கோபத்தில் வரும் நக்கலா இல்லை ...அன்பில் வரும் நக்கலா என்ற டயலாக் ..அவள் சொல்வதற்குள் என் cell in வாழ்வு கடைசி நொடியில் இருந்தால் information beep ஒழிக்க ...சரி அப்புறம் பேசுறேன் ..என்றேன் ...அவளும் புரிந்து கொண்டு .."ok da..charge போட்டுடு கூப் படு"  என்றால் ... காதலி என்று நான் சொல்லி கொள்ள இந்த புரிதல் தான் காரணம்...

மீண்டும் ac...cell switch off ஆகும் முன் ac number ஐ chellan இல் எழுதி விட ஓடி சென்று chellan எடுத்தேன் ...dialled நம்பர் இல் அனிதா விற்கு முன் அந்த அமெரிக்க i mean 11 digit நம்பர் ஐ எடுத்தேன் ...ipod recharge செய்ய மறந்தவர்கள் உண்டு என்றால் ..phone batery current இருந்தும் charge செய்ய மறந்தவர்கள் உண்டு என்றால் ..பாங்கில் பேனா கொண்டு போகதவனும் இருப்பான் ...என்னை போல பல பேரை sbi கண்டதால் தான் என்னவோ ...பேனா ஒன்றை கயறில் கட்டி வைத்து இருக்கிறது SBI ... அதுக்கு என் போன்ற பல பேர் சண்டை இட்டு கொண்டு இருக்க ,,, நான் ஒரு நடுத்தர வயதுடைய பெண்ணிடம் ..."பேனா என்றேன் "..கொடுத்து விட்டால் ..சிக்கல் இல்லாமல் ...phone இல் இருந்து நம்பர் ஐ chelanil புகுத்தி விட்டு எல்லா detailsum எழுதி கொண்டேன் ...திரும்ப கொடுக்கும் போது ...அவள் சொன்னால் "பேனாவை கொண்டு வர மறகாத்திங்க அடுத்த தடவ " என்றால் ...சரி என்று தலை ஆட்டி விட்டு வரிசையில் நின்றேன் .. என்னால் வேற என்ன செய்யா முடியும் ..Queue இல் நின்று கொண்டு இருந்தேன் ...10 per queue...  ஒரு கையில் chellan... மறு கையில் பணம் ..மனதில் எப்ப தான் முன்னாடி இருக்கிற ஆள் சிக்கிரம் விலகி அந்த இடத்தில நிற்கலாம் என்று .... அந்த 8 பேருக்கும் இருந்தது ... எல்லாரும் சென்று இருக்க ..என் பின்னால் 10 பேர் ... counter இல் கொடுத்தேன் .."sb account deposit இந்த color chellan இல்லை...அது yellow color என்றான் ..போய் அதில் fill பண்ணிட்டு வாங்க என்றான்" ...படித்தவர்களுக்கும் இதை எல்லாம் சொல்ல வேண்டிய கட்டாயத்தால் வருத்தம் கொண்டான் உழியர் ...மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் மணி 11.. நான் 10.30 வந்த நேரம் முதல் 11 வரை வீண் தான்..

மீண்டும் பேனா ...அந்த பெண் சென்று விட்டால் ..இம் முறை யாரிடம் வினவலாம் என்ற போது ... அந்த public usage பேனா நான் யாரிடமும் உதவி கேட்க வேண்டாம் என்றது போல தனியாக இருந்தது ..நான் அதை நெருங்குவதற்குள் ..4 நண்பர்களில் ஒருவன் எடுத்து விட்டு ..fil செய்து கொண்டு இருந்தான் dd யை ...நான் அவர்கள் பின்னால்
நின்று கொண்டு இருந்தேன் அது navy application போல ..  4 நண்பர்களில் ஒருவன் fill  செய்ய...இன்னொருவன் கையில் இன்று வந்த hindu paper..நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் கொஞ்சம் துக்கள் தான் என்பது நிருபணம் ஆனது ..அந்த dd அனுப்ப ending date 28 feb 2010 என்ற போதும் ... இன்றே வந்து விட்டார்கள் ..முதலில் வந்தவனுக்கு முன் உரிமை கொடுக்க அது என்ன கோவில் திருவிழாவா அல்ல சரவணா பவன் அ ...என்று நினைத்து கொண்டேன் ...இப்படி டிடிகல் பல எடுத்து தோற்று விட்டு தான் உதவாக்கரை ஆகி இருக்கிறேன் ...அவர்கள் முடித்து 5 chelan ஐ என்னிடம் காண்பித்து இது ok தானே என்றனர் ..நான் எதோ inspection officer போல .."fine superb " என்றவாறு
பேனாவை வாங்கி கொண்டேன் ...4 பேருக்கு எதுக்கு 5 டி டி என்ற சந்தேகத்துடன் .. இம் முறை yelow color chellanil fil செய்து கொண்டு வரிசையில் நின்றேன் ..இம் முறை போன தடவை விட கூட்டம் கம்மி தான் மணி 11.30 ...5 பேர்.. 2nd position இல் நின்று கொண்டவனுடம் அந்த நால்வர்கள் சேர்ந்து கொள்ள ..இப்பொழது புரிந்தது எதற்காக 5 dd...ஒருவன் வரிசயில் நிற்க ..மற்ற நால்வரும் .வேலையே பங்கு போட... time consumption அவர்களுக்கு ....எனக்கு ..? ,,, அவர்கள் வேலை முடிந்தவுடன் ..வரிசை சற்று வேகமாய் சென்றது .. நான் counter il கொடுத்த போது ... savings account நம்பர் ஐ எனக்காக வாசித்து காமித்தான் for checking purpose.. computer il search கொடுத்தால் chelanil இருக்கும் பெயரும் computer சொல்லும் பெயரும் ஒன்னு என்றால் பணம் போட போகிறான் ,...அவனுக்கு checking time கம்மியாக இருக்க ..நம்பர் ஐ என்னிடம் வாசித்து காமித்தான் ... நான் celfone a எடுத்து ..பார்த்து கொண்டும் கேட்டு கொண்டும் இருந்தேன் .. சில நம்பர் ஐ repeat செய்ய சொன்னேன் .. "sir அடுத்த முறை நம்பர்ஐ paperil கொண்டு வாங்க "என்றான் .. ok sir..என்றேன் ... அவன் என்னிடம் இருந்த 1000 ரூவாய் வாங்கி விட்டு அந்த broker accountil போட்டு விட்டான்.. thank you sir என்றேன் ..
அவன் அடுத்த chelanai வாங்கவே மும்ரமாய் இருந்தான் ... இது போன்ற வீண்
செலவை நான் வைக்க மாட்டேன் என் வீ ட்டுக்கு ...நான் யோசித்து கொண்டு இருந்தேன் அடுத்து என்ன செய்ய என்று ,,,தம் அடிக்க எது சிறந்த இடம் என்று நீயா நானா போல யோசித்து கொண்டு இருந்தேன் ,,, வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டீ கடையில் அடித்தால் mentofresh போட வேண்டும் ..இங்கயே அடித்தால் mentofresh வாங்கும் காசு மிச்சம் ...
என்று அருகில் இருந்த டீ கடையில் தம் அடித்தேன் ..sir டீ வேணுமா என்றான் அந்த கடையில் வேலை பார்க்கும் பையன்..வேண்டாம் என்றவாறு ...தம் அடித்து கொண்டே bigfm இல் ..."காற்றை நிறுத்தி கேள் " என்ற அசல் பாடல் கேட்க .. பிச்சைக்கார பெண்மணி என்னிடம் "அய்யா"  என்றால் ..நானும் நீயும் ஓர் நிலைமை தான் ...என்ற உண்மையா சொல்ல நினைத்தாலும்..முடியவில்லை ..நான் அவளை கண்டு கொள்ளாததை போல 8 திசையிலும் சுற்றினேன் ..சற்று என்று செல் எடுத்து காதில் வைக்க ..switch off tone ஒழிக்க ..." அசிங்க பட்டான் ஆட்டோ காரன்."..என்ற dialogue என்ன காதுகளில் கேட்டது ..அயோயோ அப்பாக்கு fone போட்டு பேசவில்லை என்ற ஞாபகம் . .நொடிக்கு 1 பைசா என்ற schemai அநியாயமாய் தூங்கி கொண்டு இருக்க ...அருகாமையில் இருந்த boothil ஒரு ரூவாய் முலம் அப்பாவின் செல்லுக்கு அழைத்தேன் ..."ஹரிவராசனம் விஸ்வருபனம் " என்ற hello tune ஒழிக்க ... பக்தி அப்பாக்கு கால் செய்தேன் ..அந்த full பாட்டு இரு முறை ஓடி "நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தற்சமயம் பிஸி ஆக
இருக்கிறார் "என்ற வாசகம் வந்தது ..மீண்டும் கால் செய்தேன் இம்முறை எடுத்து ஹலோ யாரு ..என்றார் .."பா நான் தான்" என்றேன் .."நீயா "என்றார் ..வேற யாராயோய் எதிர் பார்த்திருக்க கூடும்..சரி என்ன விஷயம்?பணத்தை போட்டுட்டிய? என்றார் .. ஆம்மாம் பா ..போட்டுடேன் ... சரி செல்போன் எங்கே ..வீட்டுல வச்சுட்டு வந்திட்டிய என்றார் ...இல்லை பா charge இல்லை என்றேன்.." அதானே பார்த்தேன் நீ அது இல்லாம இருக்க மாட்டிய.. "அப்பா எனக்கு lecture கொடுப்பது நான் use பண்ற foneku பிடிக்கவில்லை போல ..கட் செய்ய போகிறது என்ற பீப் soundai எழுப்ப ..சரி பா நான்
வைக்கிறேன் என்றேன் ....சரி அப்படியே கையோட அந்த brokerku  போன் போட்டு பணம் போட்டுடேன் சொல்லிருடா...நம்பர் ஞாபகம் இருக்குல என்றார்ஆம்மாம் பா ...next ஒரு ரூவாய் சேமிக்க cut செய்தேன் ..இனி என் சிறு சேமிப்பு ருவை ...கால் செய்தேன் .....இம் முறை நார்மல் tone தான் ..என் அண்ணன் கல்யணம் முடிவதற்குள் அவர் helo tune வைக்கும் அளவற்கு பணம் புரளும் என்ற யுகம் எனக்கு இருக்கறது இன்னும் எத்தன முறை அவருக்கு 1000 ரூவாய் போட போகிறேன் தெரியவில்லை ..கால் கட் ஆகும் முன் எடுத்து யாரு என்றார் ..."சார் நான் தா சென்னை அண்ணாநகர் ல இருக்குற உங்க frnd ராஜா சேகர் ஓட பையன் பேசுறேன்" ... oh ரெண்டாவது பையனா..எப்படி இருக்கீங்க என்றான் ...நான் அறிமுகம் செய்யவில்லை நான் இளையவன் என்று ...ஆனால் அவர் புரிந்து கொண்டார் பிஸி ஆனவன் நான் இல்லை என்று ...என்ன பணம் போட்டாச்சா ...ஆமா சார் ...என்றேன் ..ok பா ..beep சவுண்ட் கேட்க அவர் மேலும் தொடர்ந்தார் "போன தடவை நீங்க icici bankஅண்ணாநகர் branchil இருந்து போட்டது" ..என்றார் ,,,ஆமா என்று சொல்லியவாறு பையில் இருந்த அடுத்த ஒரு ரூவாய் போட்டு விட்டேன் ...இது தான் என்னிடம் இருந்த கடைசி ஒரு ரூவாய் ...அது இல்லை தம்பி processing charge nu சொல்லி 30 எடுத்துட்டான் என்றார் .. நானும் அப்படியா என்றேன் ... இந்த தடவ எந்த problem வராது நினக்கிறேன்...என்ன நுங்கம்பாக்கம் sbi to விருதுநகர் sbi தான் என்றேன் ...ஆம்மாம் பா ..சரி பா ...நான் check பண்ணிட்டு கால் பண்றேன் என்றார் ,.. ok என்று வைத்து விட்டேன் ... அவர் அந்த 30 ரூவாய் நங்கள் தர வேண்டும் என்பதற்காக சொல்கிறார் என்பது புரிந்து கொண்டேன் ... இம்முறை நடந்தே வீட்டுக்கு வந்தேன் மணி 1 ... வந்த களைப்பில் charge போட மறந்து விட்டேன் ... அப்படியே சாப்பட்டு படுத்து விட்டேன் .வீட்டில் evening வந்த தந்தை திட்டி கொண்டார் ...உதவ கரை என்று ..அவருக்கு காலையில் நடந்தது சப்ப மேட்டர்...நான் எதோ செய்து விட்டேன் என்று பெருமையாக சொன்னால் .."சப்ப mater டா ..இதை "தினேஷ் "கூட பன்னுவன்டா" ...தினேஷ் என்பவர் என் பெரியம்மா வின் பேரன் ... அவன் இப்பொழது தான் 4 படிக்கிறான் ... so சொல்வதை எல்லாம் வாங்கி கொள்பவன் நான் ...