திங்கள், நவம்பர் 23, 2009

தழுவல்


புதிதாய் சொல்ல வேண்டும் என்ற நினைப்பால்
பல காலம் ஓடிவிட்டது
புதிய பாதையில் சாதனைகள் படைக்கும் விஞ்ஞானி போல
யாரும் சொல்லாத ஒன்றை சொல்லிட வேண்டும்
என்ற நினைப்பால் காலம் நகர்கிறது
சொல்லாத ஒன்றை சொல்லிட வேண்டும் எனில்
என் முன்னோர்களுக்கு உதயம் ஆகாத எண்ணங்கள்
எனக்கு உதயம் ஆகி உதவ வேண்டும்
இசையின் சுற்றளவு ஏழு ஸ்வரம் போல
கருத்துகளின் அளவும் கணக்கிட முடியும்
கருத்துகள் தனிஉடமை அல்ல ...சார்பு உணர்ச்சி தான்

அவன் சொன்னதை யாரோ ஒருவன் மாற்றி இயல்பாய் கூறுகிறான்
கம்பன் சொன்னதை கண்ணதாசன் சொன்னான்
கண்ணதாசன் சொன்னதை வைரமுத்து சொன்னான்
வைரமுத்து சொன்னதை என் அண்ணன் சொன்னான்
என் அண்ணன் சொல்வதை நான் சொல்கிறேன்

காப்பியம் நாட்டம் இருப்பவன் என் கிறுக்கலை உதறி தள்ளுவான்
நான் காவிய தலைவன் இல்லை என்பதால்
என் ரசிகனுக்கு நான் தலைவன்
நான் கிறுக்கல் நாட்டின் தலைவன் என்பதால்

நாம் படைப்பதால் இறைவன் என்றான் ஒருவன்...
உண்மை தான் ..
இறைவனும் ஒன்றை பார்த்து ஒன்றை படைக்கிறான்
இறைவன் படைப்புகளை தழுவும் போது
இந்த படைப்புகள் தழுவி இருப்பதில் என்ன பிழை