வெள்ளி, ஜூலை 30, 2010

விப்ரோ பஸ்சில் நான்

பழமொழி ஒன்று.."காலையில் பள்ளிக்கு போகும் போது சோகம் மாலையில் சந்தோசம் "அந்த பழமொழி எங்களுக்கும் பொருந்தும் காலையில் சோகம் என்று இல்லை இந்த வேலையே இந்த மனிதுழிக்குள் முடிக்க வேண்டிய கட்டயம்..அந்த எண்ணம் காலை முதல் வேலையே செய்து முடிக்கும் வரை தொடரும்...மாலை நேரம் சந்தோஷ பயணம் தான்.ஆனால் இன்று என் விப்ரோ பஸ்சில் பயணிக்கும் இந்த மாழை நேரம் எனக்கு மட்டும் சோகத்தை தந்தது ..சந்தோசதத்துடன் பயணிக்க வேண்டிய என் பயணம் சோகத்துடன் பயணிக்க காரணம் ..வேலை பளு அல்ல தனிமை அனுபவம் .. என் விப்ரோவில் சேர்ந்து 2 வருடம் ஆனது ..என் அடுத்த கம்பனிக்கு resume அனுப்பி கொண்டே இருப்பவன் நான் .இந்த இரண்டு வருட காலம்...எனக்கு அனுபவத்தை தரவில்லை ஆனால்.நல்ல நண்பர்களை எனக்கு தந்தது .

எப்பொழுதும் எங்கள் குழுவில் 2 ஆண்கள் இரு பெண்கள்.இந்த நால்வரும் எதோ எதோ காரணம் சொல்லி கொண்டு இன்று கோவா சென்றனர்.இன்று friday அவர்களுக்கு விடுமுறை நாளை கம்பெனி விடுமுறை.sunday உலகுக்கே விடுமுறை .இந்த காரணத்துக்கு தான் அவர்கள் கோவா சென்றனர்.நான் வரும் புதன் கிழமை ஆவணி 3 ஆம் நாள்.. என் ஒன்னு விட்ட அக்காவோட சித்தியோட பேரனுக்கு காது குத்தும் விழாவிற்கு செல்கிறேன்..இந்த நெருங்கிய சொந்தத்தின் விழாவை சிற்பிக்க வேண்டும்மாம் :)நான் போகவில்லை என்றால் அங்கே எந்த நிகழ்ச்சியும் நின்று விடாது ,,நான் சென்றதால் எந்த புது நிகழ்ச்சியும் நடக்க போவது இல்லை ..கும்பலில் கோவிந்தா போடவே போகிறேன்.. பந்தம் விட்டு விட கூடதே என்ற ஒரே நல் எண்ணத்தில் தான் நான் என் கோவா பயணத்துக்கு பலமுறை என் நண்பர்கள் மன்றாடி கேட்ட பின்பும் வேண்டாம் என்றேன் ..சொந்தங்கள் ஒரு காரணம் சொன்னால் அதில் இருக்கும் நொட்டைகளை கண்டு பிடிப்பவர்கள்,நண்பர்கள் நம் வார்த்தையை மட்டும் நம்புவர்கள்.

இந்த மாழை பொழது நண்பர்கள் சூழ இல்லாத பயணம் நான் முதல் முதலாக விப்ரோவிற்கு சென்று விட்டு வந்த நேரம் போல இருந்தது அந்த நொடியில் கூட என் செல் பேசியில் முதல் அனுபவம் பற்றியும் விப்ரோவில் உள்ள பெண்கள் பற்றியும்.. நுனி நாக்கில் தப்பு தப்பாய் ஸ்டைல் என்ற போர்வையில்
பேசிகொண்ட மதுரை பெண்ணை பற்றியும்..கொஞ்சம் கிண்டலாக பேசி கொண்டு இருந்தேன்..அந்த நண்பனை இன்று அழைக்க.. என் செல் அவன் நம்பரை தாங்கி கொண்டே தான் இன்றும் இருக்கிறது...அவனிடம் பேச இது உகந்த நேரம் அல்ல என்று நானே முடிவு செய்து அமைதி ஆனேன்...என் விப்ரோவில் எனது முச்சு காற்று சுற்ற விட்ட அன்று முதல் என் நட்பு வட்டம் விப்ரோவில் ஒன்று முன்று ஆனது முன்று 5 ஆனது ...ஆனால் வெளி நண்பர்கள் பழைய கம்பெனி நண்பர்கள் ஐந்து 3 ஆனது ..முன்று ஒன்று ஆனது ... அந்த ஒன்றுக்கும் பிறந்தநாள் என்றால் நான் அழைப்பேன்
அக்காவிற்கு கல்யணம் என்றால் அவன் அழைப்பான் ..so அந்த ஒன்று ..கல்யான விருந்தில் உப்பு புளி எல்லாம் சரியாக இருந்த பின்பும் .. முதலில் உப்பு வைப்பார்களே அது போல ...பெயருக்கு இருக்கிறான் அந்த ஒற்றை நண்பன்.என் கல்லுரி நண்பர்களை பற்றி கிசு கிசு பேசி கொள்ள அவன் இருக்கிறான் "அவனை நம்பி அவ்வளவு காசு போட்டு அவனா எப்படி டா அமெரிக்க அழைத்து போனாங்க ...On site போறவன கொஞ்சம் கூட எடை போட மாட்டங்களா" என்று முதல் "அவனுக்கு கல்யாணமா ? பாவம் டா அவன் பொண்டாட்டி ..இந்த கஞ்ச பிசுநாரி கட்டிகிட்டு அவ எப்படி வாழ போற " வரை பேசி கொள்ள ஒருவன்.எல்லாருக்கும் இது போல ஒருவன் இருப்பான்...இவனுக்கு இந்த வாழ்கையா என்ற பொறாமையும் ...நமக்கு ஏன் இந்த வாழ்க்கை என்ற எண்ணமும் நம் பேச்சில் கலந்தே வெளி படும்.இன்று என்னுடைய இந்த மாழை பயணம் மிகவும் கடுப்பை ஏற்றி கொண்டு இருந்தது. என் கல்லுரி ஒற்றை நண்பனுக்கு அழைக்கலாம் என்றால் அவனுக்கு பிறந்த நாள் இல்லையே என்ற போது தான் ...என் ஞாபகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் காணமல் போகும் இன்னொரு கல்லூரி நண்பனின் பிறந்த நாள் ரெண்டு நாள் முன்னால் வந்து சென்றது ...அவன் பிறந்த நாளை 10 நாள் முன்பே orkut enaku அறிவித்தாலும் .. பிறந்த நாள் அன்று நான் அழைக்கவில்லை ...அவனிடம் வாழ்த்துகளை தெரிவிக்கலாம் என்று அழைத்தேன் பேசினேன் ... அவன் எல்லோர் பிறந்த நாள் அன்றும் தொலைபேசியில் அழைப்பது உண்டு எந்த ஒரு reminderம் இன்றி .. ஆனால் அவன் பிறந்த நாள் வாழ்த்துக்காக சிநிங்கிய அவன் செல் இரு முறை தான் என்ற கோபத்தில் "நி wish பண்ண கூட நேரம் இல்லையோ?? என்ற கேள்வி தான் வைத்தானே தவிர "வைடா phoneai" என்று சொல்லவில்லை .அவனிடம் பல முறை அடங்கியும் .. சில முறை அடக்கியும் பேசி விட்டு வைத்தேன்.

பின்னர் என் cellil வந்த forward மெசேஜ் கல்...icici bank il இருந்து வந்த "your bank acccount balance is less than the limit.Please avoid this type of transaction in future" போன்ற மெசேஜ் கல்... Advertisement மெசேஜகளை delete செய்து கொண்டு இருந்தேன் .நேரத்தை வீண் அடிக்கவே இந்த வேலை நான் செய்கிறேன் ஆனால் என்ன செய்ய இன்னும் பயணம் அரை மணி நேரம் செல்லும் போல ,நேரம் இல்லாமல் இருக்கும் மக்களில் நானும் ஒருவன் ,ஆனால் எப்பொழுதும் நேரம் இல்லை என்ற வாக்கியம் இல்லை ,நேரம் அவ்வபோது எப்படி செல்ல என்று தெரியாமல் தான் முழித்து கொண்டு இருக்கிறது என்னிடம் இந்த தருணத்தை போல.எங்கள் பஸ்சில் காதல் புறாக்கள் தனியாக உட்கார ..இன்னும் சிலர் வருங்கலத்தில் தான் அந்த காதல் புறா போல வாழ பேசி கொண்டு இருக்க ..
இன்னும் சிலர் timepass காதலியிடம் பேசி கொண்டு இருக்க ...இன்னும் சிலர் நண்பர்கள் என்ற போர்வையில் பேசி கொள்ள ..இன்னும் சிலர் எங்கள் குழு போல பேசிக்கொள்ள ...இன்னும் சிலர் எதோ எதோ போர்வையில் வாழ்ந்து கொண்டு இருக்க .. எனக்கு எந்த குழுவிடமும் ..எந்த போர்வைகுள்ளும்
செல்ல ஆசை இல்லை .என் குழுவிற்கு missedcal கொடுத்தால் போதும் ..உடனே confrenece கால் போட்டு பேசி கொள்ளலாம் ...அவர்கள் அந்த நொடியில் ரசிப்பதை என் பேச்சு அவர்களக்கு என் பிரிவின் ஏக்கத்தை தந்து விட கூடதே என்ற எண்ணத்தில் என்ன செய்யலாம் என்று இருந்தேன் ...என்ன பண்ணலாம் என்று யோசித்தே அரை மணி நேரம் முடிந்து விட்டது .என் காதலியை அழைக்கலாமா என்ற போது.

ஒரு புதுமொழி உண்டு ..."ஒரு heroisim கூட செய்யாமல் ஆணுக்கு பென்னும் இல்லை.. ஒரு hero இல்லாமல் பென்னும் இல்லை" 10 மாதத்திற்குள் பிறந்து .. படிப்பு என்னும் போட்டி உலகில் முன்னணியில் இருக்க துடித்து ...கடைசியில் இல்லாமல் முடித்து விட்டு...வேலை ஒன்று சேர்ந்த பின்பு ...என்ன வாழ்க்கை வாழ்ந்தாய் என்று நினைக்கும் போது...ஒரு பெண் என்னை கடந்து சென்றால் ..அவள் tabelக்கு.அவள் Cabinக்குள் நுழைய நான் முன்னேறிய போது என் பொறுப்பும் கூடி விட்டது .என் பொறுப்பினால் தான், " அவள், என்னிடம் நண்பன் ஆனாள்" .அவள் Cabinக்குள் நான் செல்லாமல் இருந்தால் " எனக்கு, அவள் தோழி ஆகி இருப்பாள்". சென்றதால் , இன்று அவளுக்கு நான் நண்பன் ,எனக்கு அதற்கும் மேல் . அவளை எனக்கு பிடித்து இருக்க காரணம் ... hmmm... காரணம் இல்லாமல் கூட இருக்கலாம் ..அவளை எனக்கு பிடித்து இருக்கிறது அது போதும் .அவளுக்கு நான் பிடித்து போக ஒரே காரணம் ..hmmm நான் பொறுப்பான இடத்தில இருக்கிறேன்.நான் பண்பு ஆனவனா? நல்லவனா? என்பது எல்லாம் அவளுக்கு தேவை இல்லை. அவள் விரும்புவது என் வேலையே இந்த நம்பிக்கை இல்லா காதலியிடம் என்ன பேச .Balance சேமித்து வைத்தால் எனக்கு நல்லது ..கால் செய்தால் airtelku மட்டுமே நல்லது .என் சுயநல நல்லதை மனதில் வைத்து .நேரம் வீணாக போனால் கூட போகட்டும் அவளுக்கு கால் செய்ய மனம் இல்லை என்று அவள் மீது எனக்கு நம்பிக்கை வருகிறதோ அன்று நேரம் என்ன.. வாழ்க்கை வீணாக போனால் கூட பரவா இல்லை. அது வரை நான் கல் நெஞ்சக்காரன் தான்.என் காதலை மட்டும் எண்ணினால் போதும் நேரம் சென்றதே தெரியவில்லை,என் நிறுத்தம் வந்தது... என் விப்ரோ பஸ் டிரைவரை கண்டு "குட் நைட் " என்றேன் ...அவர் "குட நைட் சாப்" என்பார் எங்களுக்குள் இது தினமும் உண்டு ... அதிகமாய் அவரும் பேசியது இல்லை.. நானும் அதற்கு அடுத்த வார்த்தையை பேசியது இல்லை.

என் பஸ் பயணம் முடிந்தது,இறங்கி நடந்து சென்று கொண்டு இருந்தேன் என் விட்டிற்கு காதல் என்றால் என்ன ...நம்மை நமக்கே தெரியாமல் இருக்க செய்வது அதை மொத்தம் உணர்தேன். என் ஒரு மணி நேர பயணத்தின்,முதல் பாதி கடக்க முடியாமல் திணறியது ..மறு பாதி காதல் என்ற பெயராலே கடந்து சென்றது .நாளை விடுமறை என்ற மாபெரும் சந்தோசத்தை என் பஸ் பயணம் என் தனிமை பயணத்தால் நாளையும் கடுப்பாக மாற கூடும் என்ற என்னத்தை துவியுது . பைக்கில் சென்ற என் போல ஒரு இளைஞர் சட்டு என்று எதோ ஒரு காரணத்தால் என் கண் முன்னே கிழே விழுந்தார் பெரிதாக அடி ஏதும் இல்லை. என் போன்ற நட பயணிகள் ஓடி சென்று எழுப்பி விட்டு ...அவன் துடிப்பது தமிழில் என்றவுடன் .."தம்பி பார்த்து வர கூடாது ...அப்படி என்ன அவசரம் " என்று சொல்லி அவனை அனுப்பினர்" இந்த it கம்பெனில வேலை பார்க்குற பசங்க வண்டி வாங்குறாங்க ஆனா எந்த பொறுப்பும் இல்லாம இருகாங்க "....ஒரு நொடியில் தவறி விழுந்த அவனை பற்றி சொல்லி கொண்டே போனார்கள்,ஆனால் அவர்கள் சொன்ன ஒரு வார்த்தை தான் என்னை நிம்மதி பெரு முச்சு விட செய்தது ..."ஒரு நொடி கூட கவனம் சிதறாமல் வண்டி ஒட்ட வேண்டும் " என்று ஒருவன் சொன்னவுடன்..சட்டு என்று எனக்கு என் ஞாபகம் தான் வந்தது .நான் பயணித்து கடந்து சென்ற 3600 நொடியில் எத்தனை ஞாபகங்கள் ,Silk board முதல் banasawadi வரை. என் பள்ளி நண்பன் முதல் காதலி வரை பயணித்த நொடிகள்..சோகம் ஆனதா சந்தோசம் ஆனதா என்பது எனக்கு தெரியாது ...ஆனால் பத்திரமானது..ஆனால் பைக்கில் செல்வதே தினமும் புது அனுபவம் தான் ..ஒவ்வொரு நொடியும் இனிமை தான் ..லிப்ட் கொடுப்பது...பெட்ரோல் இல்லாமல் வண்டிய தள்ளி கொண்டே போவது .. மழையில் நனைந்து கொண்டே வண்டி ஒட்டுவது...பஸ் Stopil நிற்கும் பெண் முன்னால் முன் wheelai தூக்குவது...போலீசில் மாட்டிகொள்ளாமல் ஒட்டி செல்வது ...பைக் பயணம் அழகானது தான் ஆனால் தவறினால்.எல்லா செயலுக்கு negative உண்டு ... ஆனால் எல்லா செயலுக்கும் posiitive உண்டு ...so Be safe with positive

Moral: பைக் ஓட்டுங்க ஒட்டாமல் இருங்க... I am not going to say wat to choose but ஞாபகத்தை அலைய விடும் என் போன்ற நல்லவர்களக்கு மட்டும் பைக் மோகம் வேண்டாம் :) :)

நன்றி Sorry .. சொல்லாதே நண்பனிடம் காதலியிடம் உறவுகளிடம்.
அமெரிக்க கலாச்சாரம் என்னை ஆட்கொண்டதால் சொல்கிறேன்...

நன்றி :

என்னை பல முறை தான் பைக்கில் ஓசியில் பயணிக்க வைத்த முருகேஷ்க்கு
முருகேஷ் பைக்கில் இருந்து கீழ ஒரு நொடியில் தனக்கே தெரியாமல் தவறி விழுந்த சீமோனுக்கு
விப்ரோவை ஞாபகப்படுதியா naukri.comக்கு
எங்கே அழைத்தாலும் வராமல் போன என்னை மிதிக்காமல் மதிக்கும் அணைத்து கல்லுரி நண்பர்களுக்கு
சிவாஜி நகர் to kr puram 300 E பஸ்க்கு
VTV பாடல் ஆசரியர் தாமரைக்கு
Pulsar 180 DTSi advertisementக்கு
Wen is my next story going to release என்று கேட்ட டெல்லிக்கு ..

சாரி..

மேற்கூறிய பெயர்களை @ செயல்களை @ சொல்லை அனுமதி இன்றி onlineil வெளியிட்டதற்கு

மன்னித்து விடுங்கள் :

தப்பு தப்பாய் spelling mistake உடன் எழுதிய என்னை ...
துய தமிழை ஆங்கிலத்துடன் இணைத்ததற்கு..
இந்த கதையை படித்த உங்கள் நேரத்துக்கு நான் சொல்ல்வது ...

மீண்டும் சந்திப்போமா...

---->SP