ஞாயிறு, டிசம்பர் 22, 2013

தொலைந்து போன காதல்

  
  பருவம்: பிறந்தேன் வளரந்தேன் படித்தேன் என இருந்த எனக்கு காதலித்தேன் என்று சொல்ல கூடிய பருவம் ...
  இடம்: ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு  காலேஜ் இல் , பல மரங்கள் நடுவே உள்ள ஒரு மரத்தடியில்...
  
  நான் அவளை முதல் முதல பார்க்கவே 20 வருஷம் ஆயிரிச்சு ஆமா அவளை எங்க காலேஜ் ல தான் பார்த்தேன் பார்த்தவுடன் தோன்றவில்லை இவ தான் இனிமேல் என் கூட வந்து காணாம போகப்போற என் Loverனு..பார்த்தவுடன் தோணியது ஒன்னு தான்.."நல்லா தான் இருக்கா...இன்னும் better ஆ இன்னொன்னு தேடலாம்ன்னு" வேற பெண்ணை பார்க்க கண்கள் ஓடியது...பல optionக்குள்ள இவளை வைத்து விட்டு..கூட்டத்துக்குள் சிக்கி காணாம போயிட்டா...அப்போ அப்போ பேச்சு.. அன்று ஒரு நாள்

   "HOD உன்னை கூப்பிட்டு இருக்காங்க,ஏதோ Bit வச்சு Semester எழுதுனதை கண்டுபிடிச்சிட்டாங்களாம்"
  "Wat நான் எப்போ bit வச்சு எழுதுனேன்??"... "Hello நீ வச்சு எழுதுனதை நான் பார்த்தேனே"
"நீ bit அடிச்சத தான் ஊரே பார்த்துச்சே"..."ஆமா நான் அடிச்சேன் மாட்டிக்கிட்டேன்,அதான் மங்காத்தா வைபவ் மாதிரி Approver ஆயிட்டேன்,உன்னை பத்தி போட்டு கொடுத்துட்டு தான் வரேன்" ..
  "சரி arrear exam ல மீட் பண்ணலாம்" என்று சொல்லி விட்டு விடை பெற்றேன்..
"பரதேசி நான் பயந்தே போயிட்டேன்...அவங்க ஏதோ notes கேட்டாங்க"    "is it so???..உன்னை கூப்பிட சொன்னாங்க அதான் இதுக்கா இருக்கோமோ நினைச்சு சொன்னேன்".

ஒரு மாலை வேலையில்..நடு ரோடு ல நின்னுக்கிட்டு இருந்தேன்...திடீர்னு அவளை பார்த்தேன்..
"நல்ல வேலை உன்னை பார்த்தேன்...ஒரு 100 ரூவா கொடுடி?...அவசரமா தேவைப்படுது"..
  "எதுக்குடா?..என்ன ஆச்சு? எதாவது பிரச்னையா கண்ணுல ஒரு பதட்டம் தெரியுது??"
   "இல்ல அது எல்லாம் நான் பார்த்துக்குறேன்..நீ கொடு.."
  நான் சொன்ன படபடப்பில்.. அவள் சற்று பயந்தே போனாள்...அவள் கைகள் என்ணதோ ஏதோ என்று தெரியாமல் நடுக்கத்துடன் கொடுத்தது..."நான் வேணும்னா கூட வரவா??" என்றால்..."இல்ல நீ எல்லாம் அங்க வர வேண்டாம்...I can manage"..என்று அவசர அவசரமாக சென்றேன்... எனக்கு உதவ வேண்டும் என்று எண்ணி ..என் பின்னால் அவள் தொடர்நது வந்தாள்... நான் அவளிடம் பணத்தை வாங்கிவிட்டு அவசரமாக சென்றேன்,பின்னால் அவள் வருவதை அறியாமல் . "டாஸ்மாக்" கண்டவுடன்,பார்க்குள் சென்றேன்.. 

  அன்று இரவு என் நம்பர்ஐ யாரிடம் வாங்கினால் என்று தெரியவில்லை...எப்பிடியோ வாங்கிவிட்டால்...அன்று இரவு முதல் முறை எனக்கு அழைத்தால்... "பிரியா" என்று கட்டியது...
  "Hello" என்றேன்.. "Hello" என்றால்.. "சொல்லு பிரியா என்ன ஆச்சு இப்போ கூப்பிட்டு இருக்க any problem??"...
  "Ho என் குரல் எல்லாம் நிணைவு இருக்கா..மப்புல மறந்து இருப்பேன்னு நினைச்சேன்".."Wat"...
  "ஆமா காசு வாங்கிட்டு டாஸ்மாக்கு தானே போனே"
  "WOW wat a brillancy..எப்படி கண்டுபிடிச்சே??"..."கெட்ட வார்த்தை பேசினது இல்லை..திட்ட வச்சுராத"..
  "You wanna Scold me?..dont do..Scold the Almighty/GOD" ..
 "எதுக்கு உன்னை பூமியில படைச்சதுக்காவா?"
  "இல்ல மேடம், Today climate எப்படி இருந்துச்சு தெரியுமா???...மழை வரமாதிரி இருந்துச்சு ... over temptation ஆ இருந்துச்சு ...Climate made me..wat to do...so control பண்ண முடியல""
  "ஆமா ல sorry டா...எனக்கு ஒரு peg ஊத்து வை..நான் இப்போ உங்க வீட்டுக்கு வரேன்?".."NOOO ladies தண்ணி அடிக்க கூடாது.. பெண்கள் நம் நாட்டின் கண்கள்" என்றேன்..அப்புறம் ஒரு நிமிட மௌனம் ...மௌனத்த்தை
உடைத்து "பிரியா உன்கிட்ட ஒரு விஷ்யம் சொல்லணும்" "சொல்லு டா" என்றால்... "really thanks...எனக்கு அந்த time கொஞ்ச நேரத்துக்கு கையும் ஓடல காலும் ஓடல .. நல்ல வேலை வெள்ளை தேவதை மாதிரி வந்த ..really thanks yar..."    "போதையில நல்ல உளறுறா...நான் நாளைக்கி பேசுறேன்" என்றால்... "சத்தியமா நான் தெளிவா தான் இருக்கேன் ..Anyways BYE" என்றேன் ..அப்பிடியே
 Cut
ஆனது Call

அடுத்த நாள் இரவு சொல்லி வைத்தார் போல அழைத்தாள் "டே என்ன Busy ஆ?" என்றால்..
   "இல்ல just nw had dinner ,நீ சாப்பிட்டியா??" என்றேன்..
   "Ya done...உன்கிட்ட ஒன்னு கேட்கனும்ன்னு நேத்தே நினைச்சேன்" என்றால்..
   "ஒன்னு என்ன ஓர் ஆயிரம் கூட கேளு... Yes Priya tell ME I AM Small GOOGLE u can get answer for everything"...
   "BUILD UPபோதும் ... ஒரு முக்கியமான matter" என்றால்..
   "YES I AM SERIOUS TALK ME " என்றேன்...
   "நேத்து நான் கூப்பிட்டவுடன் எப்படி நான் தான் கூப்பிட்டன்னு தெரியும்.???.."
   "என்ன பிரியா சொல்ற...உன் வாய்ஸ் ஆ நான் எப்புடி மறப்பேன்..Its in my heart..."...
    " Ho HO..உச்சி குளிர்ந்து போச்சு..,இப்போ உண்மையா சொல்லுறியா"
   "Actually உன் நம்பர் முன்னாடியே பசங்கக்கிட்ட இருந்து வாங்கிட்டேன்..." ...
   "இதுவரைக்கும்  ஒரு கால் இல்ல ...MSGஇல்ல ...எதுக்கு வாங்கின?? பூஜை பண்ணிக்கவா..."
"என்ன சின்னபுள்ளத்தனமான கேள்வி ... நீ என்ன்னோட தேவதை மாதிரி இருக்க So ஸ்டோர் பண்ணி வச்சேன் மனசுக்குள்ளயும் மொபைல்லயும்...Moreover பூஜை பன்னா என்ன தப்பு"
   "Wat...அப்படி நினச்சா மாதிரி தெரியலயே...Then why u never said me"..
   "First day பார்த்தபோதே... பல்ப் எரிஞ்சுச்சு... பிடிச்சு போச்சு...அப்புறம் நமக்கு செட் ஆகாது னு தெரியும்..
   So shift ஆயிட்டேன்".. "எங்க shift ஆனா...வேற யாரும் செட் பண்ணிட்டியா என்ன??" என்றால் என்னிடம் பதில் அறிய ஆர்வத்த்துடான்
   "வேற பொண்ணுக்கு தான்...but யாரும் தேவதை மாதிரி தெரியல..
   So நம்ம rangeக்கு ஸ்ரீதிவ்யாவோ நஸ்ரியா மாதிரியோ
பார்க்கவேண்டியது தான் "
   "ஸ்ரீதிவ்யா and நஸ்ரியா உன் range ஆ??"..."Ofcourse i am...அம்புட்டு Demand எனக்கு..."...
   "அம்புட்டு Demand a சார்'க்கு, சார்!! சார்!! முதல் வேளையா,உன் Facebook ல "Committed" னு மாத்த்திரியா..."... "Same logic Applies for u too"...

அன்று முதல் Facebook ல மட்டும் அல்ல எங்கள் life உம் Update ஆச்சு...
ஒரே கம்பனில வேலை, ஒரே மாதிரி வாழ்க்கைனு போன எங்க வாழ்க்கைல திருப்பம் வந்தது ...அதான் கல்யாணம்...வீட்டுல பேச  ஆரம்பிச்சாங்க...என்ன தான் விஞ்ஞானம் வாழந்தாலும்...லவ் என்றாலே எதிர்ப்பு தானே...அத்தை பொண்ணு மாமன் பொண்ணா தூக்கி பிரியாவ மணமேடையில் உட்கார வச்ச போது மனசு நிறைவாய் இருந்துச்சு

  "என்னப்பா...வாழ்க்கை முடிஞ்சாலும் முடியட்டும் என் காதல் முடியாதுன்னு சொல்ல தோணுதா??"  என கேட்டார் என் மாமா..
    "ஆமா மாமா ரொம்ப சந்தோசமா இருக்கேன்" ...என்றேன்..
    "இன்னும் எத்தன நாளைக்கு தான் "சந்தோசம்".." அன்பு" னு சொல்றே பார்ப்போம்.. அப்புறம் மணைவி செய்யும் torture ல...
    அப்புறம் ""தொலைந்து போன காதலை"" தேடி போலீஸ் station FIR கொடுப்ப" "Ho Hoo.. அப்படியா மாமா உங்க பொண்ணு கட்டி இருந்தாலும் அதே தானே?" என்றேன்.."அதே தான்...கல்யாணம் ஆனா பெரியவங்க சொன்ன பெருமாள் சொன்ன மாதிரி காதல் கல்யாணம் ஓ arranged marriage ஓ  ...கல்யாணம் பண்ணாலே பிரெச்சனை தான்"...

ரெண்டு வருடம் கழித்து
   
     பருவம்: காதலித்தேன் கரம் பிடித்தேன் கலயணம் செய்து விட்டேன் என்ற பருவம்    
     தருணம்: மாமா சொன்ன வார்த்தை("கல்யாணம் பண்ணாலே பிரெச்சனை தான்") உண்மை ஆனா     தருணம்    
     இடம்: ஏதோ ஒரு ஊரில் , ஏதோ ஒரு  apartment இல் , 2BHK இல் உள்ள ஏதோ ஒரு "B" இல்...

"டே....என்ன டா நினைச்சுட்டிக்கா?...நீ பெரிய இவனோ..." ..பொழிந்து கொண்டு இருந்தால் பிரியா....
    "இப்போ என்ன ஆச்சு Why Shouting"...என்றேன்...
    "நான் என்ன சொல்லி இருக்கேன்...இப்போ நீ என்ன பண்ணி இருக்க"...மீண்டும் தொடர்ந்தால் பிரியா
    "சத்தியமா ஒன்னு சொல்லட்டா ...கொஞ்சம் புரியுற மாதிரி திட்ரியா"...
    "ஆமா ஒண்ணுமே புரியாதே... இப்போ எதுக்கு தேவை இல்லாம செலவு பண்ணி "IPHONE 5S" வாங்கி தந்த"..
    "உனக்கு birthdayல"...என்றேன்
    "பெரிய புடலங்கா birthday...ஒவ்வொரு வருஷமும் வருது இப்படி ஒவ்வாரு வருஷமும் செலவு பண்ணிகிட்டே இருப்பியோ??"
என் மனதுக்குள் "யோவ் மாமா...இத தான் பிரேச்னைன்னு  சொன்னியா...வாஸ்தவம் தான் மாமா"...
    
  பின் குறிப்பு : 
மிக பெரிய பிரெச்ன்ணை: "என்னால இனிமேல் குடிக்க முடியல"...Whatever the climate is... :(
     "ஏன்னா என் Loverகிட்ட சத்தியம் பண்ணி இருக்கேன் இனிமேல் நான் குடிக்க மாட்டேன்னு" ;)
    
     Moral&Inspired from நாடோடிகள் Dialogue :"நீங்க வாழந்து காட்டுறேங்களே ஒரு வாழ்க்கை... அதில தான் தெரியும்"     - Applicable for All type of Marriage
காதல் அழிவதில்லை- TR
Luv u -SP