ஞாயிறு, டிசம்பர் 12, 2010

SPயுடன் நான்

வீடு ஆபீஸ் அவ்வபோது நண்பணிடம் பேச்சு எப்பொழுதும் தாயிடம் ஒரு உரையாடல் தம்பிக்கு சின்னதாய் அறிவுரை அப்பாவின் SB account ல் பணம் சேமிப்பு
இது தான் எனக்கு தெரிந்த வாழ்க்கை .எனக்கு பிடித்த நடிகர் ரஜினி அவர் படத்தை தவிர வேர் எந்த சுள்ளான் படத்தையும் திருட்டு டிவிடியில் கூட பார்ப்பது இல்லை. காலை அலாரம் வைக்காமலே எழுந்து, சொல்லி வைத்தார் போல அறை மணிநேரம் ஜாகிங் பின்னர், அறை மணிநேரம் சிகை அலங்காரம் , அறை மணிநேரம் பாபா மெஸ்ஸில் நம்ம ஊரு இட்லி, ஒரு வடை, அறை மணிநேரம் பயணம் ஆபீஸ்க்கு அங்கே ஏதோ அறை மனதாக வேலை, அறை வயிறு சாப்பாடு , 6 மணிக்கு என் பயணம் ஆரம்பம் வீட்டுக்கு ...எல்லா செயல்களும் எதிர்மாறாக ..ஆனால் அதே அறை மணிநேர பயணம் ..ஒரு சின்ன மாற்றம் 10 நிமிட நடை .. One Day வழிகளால் இந்த பயணம் கூடுதல் இலவசம் ..மொத்த மும்பையும் இடமே இல்லாமல் தத்தளிக்க என் தெரு வழி மட்டும் நிசப்பதம் ஆக காணபடும் ..எதோ காரணம் 7 மணிக்கே அந்த தெரு வேறுசோடி காணப்படும்.

எந்திரன் படம் வெளியானது ..அனைவரும் ரஜினி படத்தை பார்க்க முடியும் ஆனால் எல்லாரும் ரஜினிஆக முடியாது என்று நிருபித்தார் தலைவர் 200கோடியில்...முதல் நாள்
பார்க்கும் வெறியன் அல்ல ..பார்க்காமல் சேமிக்கும் கஞ்சன் அல்ல ...So 10வது நாள் நான் இரவு காட்சி முடித்துவிட்டு வந்துகொண்டு இருந்தேன் என் தெரு வழியாக.. மணி 1:00 am monday காலை என்னை வழிமறித்தார் ஒரு போலீஸ் ...நான் மர்ம மனிதன்.. இல்லை Psycho.. இல்லை திருடன் என்று கூட நினைத்து இருப்பர் போல ...பட டிக்கெட்டை தியேட்டர் வாசலிலேயே கிழித்து விட்டேன் ... கேள்வி ஒன்றும் கேட்காமல் .."aaj rath sath baje daravi station avo " (இன்று இரவு 7 மணிக்கு தாராவி ஸ்டேஷன்க்கு வந்துரு) என்றார் “Why’ என்றேன் ... எனக்கு ஹிந்தி புரியும் பேச அவ்வளவாக தெரியாது ..."Sab kal batayaga" (எல்லாம் நாளை சொல்வாங்க) என்றார் ...எதற்காக இருக்கும் என்று எனக்குள் மணகுழப்பம்

தனியாக நடந்தது ... அதுவும் இரவு 1 மணிக்கு நடந்தது குற்றமா ... இல்லை போன வாரம் சண்டை ஒன்றை சமதானம் செய்து வைத்த நண்பன் மீண்டும் சண்டை இட்டு
பிரச்சனை ஆனதா ...இல்லை காதல் புறாக்களை போன மாசம் என் சொந்த செலவில் அனுப்பி விட்டதை பற்றியா என்ற பல கேள்விகள் என்னுள் ...சராசரி மனிதனை மட்டும் இந்த உலகம் பாடாய்படுத்து ஏன் என்று தெரியவில்லை ...
இதை யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும் ..தலையும் புரியாமல் காலும் தெரியாமல் என்ன சொல்லி ஆறுதல் பெற என்று யோசித்தே அந்த இரவு முடிந்தது ...Monday
காலை அதே அரை நாள் வாழ்க்கை என்னை ஒவ்வாரு நொடியும் என் சிறு வயது முதல் நேற்றுவரை நான் செய்த ஒவ்வாரு தவறுகளை ஞாபகபடுத்த என் இன்றைய
வேலையும் தவறாய் போனது ...

மணி 7 ...நான் தாராவி போலீஸ் ஸ்டேஷன் முன்னால் ..உள்ளே சென்றேன் இது வரை எங்கள் பரம்பரையில் போலீஸ் வாசல்படி மித்ததே இல்லை ...பரம்பரை மரபுகளை உடைத்து எறிந்தவன் ஆனேன் ..சினிமாவில் வரும் ஸ்டேஷன்க்கும் நிஜத்துக்கும் நிறைய வித்தயசங்கள் ..இன்னும் கேவலமாக காட்சி அளிக்க ..யாரை பார்க்க எதை பற்றி பேச என்று தெரியவில்லை ... கொஞ்சநேரம் திருடன்
போலவே முழித்தேன் ..நல்லவன் இப்படி தான் கெட்டவன் ஆக மாறுகிறேன் போல ... அங்கே ஒருத்தர் என்னை அழைத்தார் ...நான் சென்றேன் நின்றேன் ..."Tu Bandra railways station ka pass rahethe na?"(நி பந்திரா ஸ்டேஷன் பக்கத்தில் இருப்பவன் தானே?)..."yes ji" என்றேன் ...என் பதிலை பார்த்துவிட்டு ..."tumara desi kya hai?"(உன் சொந்த ஊரு என்ன?)..."my father and mother at chenai" என்றேன் .."tu madarasi?" (நீ மதராசியா?)என்றார் "nahi சென்னை "(இல்லை சென்னை)என்றேன் .... "Madras Chennai ka difference kya hai"(மெட்ராஸ்க்கும் சென்னைக்கும் என்ன வித்தாயசம்) என்று கிண்டல் அடித்து கொண்டே சொன்னார் ..."Why called me sir" என்றேன் "Sab saBB bolega wait karo"(எல்லாம் உயர் அதிகாரி சொல்வார்) என்றார் ..அங்கே காத்துகொண்டே இருந்தேன் ..பல போலீஸ் உள்ளேயும் வெளியவும் போக ..யார் அந்த உயர்அதிகாரி என்று தெரியாமல் முழிக்க ...மணி 10

SP உள்ளே நுழைந்தார் களைப்பாக ...வந்தவுடன் அழைத்தார் காண்ஸ்டேபில் ஒருத்தரை ..அவர் வெளியே உடனே வந்தார் ...10 நிமிடத்தில் டி சென்றது உள்ளே ...பின்னர்
மீண்டும் காண்ஸ்டேபில் அழைக்க ...10 நிமிடத்தில் என்னை பற்றி பேசி இருப்பர் போல "bulo vo madarasi"(கூப்பிடு அந்த மதராசி) ... என்னை மதராசி என்றே அழைத்தனர் ..உள்ளே சென்றேன் ..அதே கேள்வி .."tumara desi kya hai"(உன் சொந்த ஊரு என்ன?)
இம்முறை SPயிடம் இருந்து.. "my father and mother at chenai"..என்றேன் "Madarasi bolona chahiya na phir kya bolanga hum sab.."(மதராசி என்று சொல்லாமல் வேற எப்படி
கூப்டுவாங்க) என்றார் SP எனக்கு சட்டு என்று கோபம் "Sir apka nam".."Mera nam Rajesh hai quoon koi problem hai?"(என் பெயர் ராஜேஷ் உனக்கு எதாவது பிரச்னையா)..."me apko ramesh nahi bolna chahiya na "(நான் உங்களை ரமேஷ் என்று சொல்ல கூடாது தானே ?) .."haan"(ஆமா) .."aisa me chennai hoon madarasi nahi"(அப்படி தான் நான் சென்னை ,, மதராசி இல்லை )என்றேன் ...அவர் சட்டு என்று "ஹோ நல்ல விளக்கம் டா இரூ உன்னை கவனிக்கிற விதத்துல கவனிக்குறேன் " என்றார் ..அப்பொழது தான் புரிந்தது அவரும் தமிழ் என்று ..."சார் தமிழா ? எதுக்கு சார் கூப்பிட்டு இருக்கீங்க ஒண்ணுமே புரியல " என்றேன் சட்டு என்று தோழனை
சந்தித்ததை போல அவர் அதை பொற்படத்தாமல் "ஹிந்தி தெரியுமா " என்றார் .."தெரியாது" என்றேன் .."எத்தனை   வருஷம் ஆச்சு  நி  இங்கு  வந்து "..."சார் 2 வருஷம் ஆச்சு ..என்  first போஸ்டிங்கே மும்பை தான் ".."2 வருசமா  இருக்க  ...ஹிந்தி  கத்துக்கமா  ஏன்  டா ..?." " இங்கிலீஷ்  போதும்  சார்  எங்க  வேணும்னா  வாழலாம்"..."நான் VIT Passout ...but வந்த  ரெண்டே மாசத்துல கத்துகிட்டேன் ."Be a roman in rome" என்றார் நான்  சந்தித்தது  "பல(ழ)  மொழி  கற்ற  வித்தகன் " என்று நினைத்தேன் ...

மீண்டும் என் மனசுக்குள் இருக்கும் அதை கேள்வியை தான் தொடுத்தேன் .."எதுக்கு சார் கூப்பிட்டிங்க " என்ற போது ...இப்பொழுது பொற்படத்தாமல் .."உன் வீடு எங்கே...உன் ஆபீஸ் எங்கே என்றார் "....பக்கத்தில் writer உட்கார்ந்து எழுதி கொண்டு இருந்தார் நான் சொல்வதை அனைத்தும் ...அவருக்கும் தமிழும் தெரிந்து இருக்கிறது ..ஒரு போலீஸ்க்கு எத்தனை மொழிகள் தெரிந்து இருக்கறது ...என்று நினைத்து கொண்டே " என் வீடு இங்க பந்திரா ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கு, வாடகை வீடுல தனியா தான் இருக்கேன் என் ஆபீஸ் "THANE" ..bus la than போறேன் வரேன் ..9 மணிக்கு போனா 7 மணிக்கு வீட்டுக்கு வந்த்ருவேன்" " எங்க புவா " என்றார் " வீட்டுக்கு போற வழியில பந்திரா ஸ்டேஷன் பக்கத்தில் பாபா மெஸ்ஸில் தான் சாப்பாடு” என்றேன் ..."சரி போனவாரம் புதன்கிழமை ஆபீஸ்க்கு போனியா".."போனேன் சார் "...என்றேன் .எதை பற்றி பேசுகிறேன் என்று புரியாமல் .."சரி அன்னிக்கி Night என்ன நடந்துச்சு” என்றார் .."அன்னிக்கி ஒண்ணுமே நடக்கல" என்றேன் ...."உண்மைய மட்டும் சொல்லு ..தெரிஞ்சத சொல்லு" ..."சார் எனக்கு ஒண்ணுமே புரியல சார் " என்ற போது சட்டு என்று என் செல்துடித்தது.."அவர் எடு ஆனா Attend பண்னாதே” என்றார் எடுத்தேன் "அம்மா cel" என்றது .. சரி இங்கயே பேசு என்றார் ..."டேய் எப்படி இருக்க போன் பண்ணுவேலா என்ன ஆச்சு என்றால்"...இன்று திங்ககிழமை என்றே மறந்துவிட்டேன் "இல்லை மா மறந்துட்டேன்.அம்மா நான் அப்பறம் பேசுறேன் ."என்றேன் ..."அப்படி எங்கடா இருக்க.".."இல்லை மா ஆபீஸ் மீட்டிங்ல இருக்கேன் வீட்டுக்கு போனவுடன் கூப்பிடறேன். “என்னது மீட்டிங்கா? ராத்திரி 11 மணிக்கு மீட்டிங்கா?.."ஆமா மா"..." டேய் ஒரூ முக்கியமான விஷயம் பேசணும் ...நீ நாளைக்கு evening கால் பண்ணு” என்றால். "சரி சரி " என்று cut செய்தேன்

"டேய் போலீஸ் ஸ்டேஷன்லே வச்சே ...அதுவும் ஒரு SP முன்னாடியே பொய் பேசுறா ..நீ எவ்வளவு கேடியா இருப்ப".."சார் நன் என்ன பண்ணுவேன் சார் .."3000 km தள்ளி இருக்குற அம்மா கிட்ட போலீஸ் ஸ்டேஷன் இருக்கேன் நான் சொன்னா என்ன நினைபாங்க சார் ..எதுக்கு போனா டா ?அவங்க கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன் சார் ..இங்க இருக்குற எனக்கே காரணம் தெரியல ...அதான் சார் வேறவழி இல்லாமல் சொல்லிட்டேன்"..."இப்போ உனக்கு காரணம் தான தெரியனும் .."உங்க பந்திரா ஏரியலா ராஜாஜி தெருலா ஒரு வீட்டுல 300 பவுன் திருட்டு போய்இருச்சு.. அது தான் கேஸ் ..இப்போ புரிஞ்சதா சரி இப்போ சொல்லு " ..."சார் யாரோ ஒரு வீட்டுல 300 பவுன் திருட்டு போச்சு என்னை பிடிச்சு கேட்ட எனக்கு என்ன சார் தெரியும் "...."அப்போ நாங்க விசாரிக்க வேண்டம்னு சொல்றியா”.."சார் உங்க கடமை நீங்க பண்ணனும் சார்.. என்ன கேட்டா ? நான் ஒரு அப்பாவி சார் ..நீங்க சொல்றே அந்த ஏரியா பக்கம் போவேன் ஆனா நீங்க சொல்றே அந்த தெருக்கெல்லாம் நான் போறது இல்லை சார் " என்றேன் ...சட்டு என்று அவர் டென்ஷன் ஆனவர் .."பொய், திரும்ப திரும்ப பொய் சொல்றே ..வீனா என்னை ஏன்டா உன்னை சந்தேக பட வைக்கிற ." "சார் சத்தியமா சொல்றேன்” என்றபோது ...அவர் "hamara admiko bulovo"(நம்ம ஆள கூப்பிடு)...என்றவுடன் வந்தார் எனக்கு தெரிந்த முகம் .. அவர் தான் என் சாப்ட்டு செலவு போக மிச்சத்தை தினமும் வாங்கி கொள்ளும் பிச்சைக்காரர் ...இவரிடம் தர்மம் செய்ய தொடங்கி ஒரு வாரம் தான் ஆனது ..."தர்மம் செஞ்சால் புண்ணியம்” என்பார்கள் ..இவருக்கு கொடுத்த குற்றம் தான் என்னை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் அழைத்து வர. அவரிடம் SP "Is admi ko voh rat deka na"(இவனை அந்த இரவு பார்த்தாயா?) என்றார் ..அந்த பிச்சைக்காரர் தலை மட்டும் ஆட்ட ...நான் சட்டு என்று "அப்போ அந்த பிச்சைக்காரரே விசாரிக்கலாம்லா "என்று பதட்டத்தில் மனதில் இருந்ததை சொன்ன போது ...டெலிபோன் ரிங் அடிக்க அவர் எடுத்தார் பேசினார் வைத்தார் "Baj gaya sala "(தப்பித்தான்டா) என்றவாறு ..அனைவரையும் அழைத்து போனார் ...என்னை மட்டும் இருக்க சொல்லி விட்டு...மணி 11:30....

மணி 1:00 AM என்னை போலீஸ் வர சொல்லி கரெக்ட்டா ஆக 24 ஆவது மணி நேரம் ..துக்கம் கண்ணை கட்டியது எங்க துங்கனாலும் துங்கலாம் ..போலீஸ் ஸ்டேஷன்ல் ஒரு நாள் கூட துங்க கூடாது என்ற வைராக்கியம் என் துக்கத்தை தள்ளி போட்டது
உள்ளே வந்தார் SP.."isse andar dalo endrar"(இவனை உள்ளே போடு)... ஒரு திருடன் மாட்டிகிட்டான் ...இன்னும் எத்தனை திருடன் வெளியில் உலவி கொண்டு இருக்கிறாக்கள் என்னையும் சேர்த்து என்று நினைத்து கொண்டு இருந்தேன் .."bulo vo madarasi ko "(மதராசி கூப்பிடு) என்றார்.. இந்த டென்ஷன்லீயும் என்னை ஞாபகம் வைத்து இருந்தார் ...இந்த டென்ஷன்லீயும் அதே பெயரில் தான் அழைத்தார் என்ற கோபம் கூட ....உள்ளே சென்றவுடன் .."நி போகலாம் என்றார் ".."சார் " என்றேன் ஆச்சரியத்துடன் "அந்த திருடன பிடிச்சுடோம் என்றார் சாரி உன்னை தேவை இல்லாமல்...but என்ன செய்ய எங்க கடமையை நாங்க செய்ய வேண்டியது இருக்குல .." என்றார் "அது எல்லாம் ஒரு பிரெச்சனை இல்லை சார் சராசரி மனிதனனுக்கு தான் சார் பல பிரெச்சனை என்றேன் "..." என்ன? என்ன புரியல" என்றார் .."தப்பா நினைக்கல நா..ஒன்னு சொல்லட்டா சார் " என்றேன் ... "சும்மா சொல்லு ..போலீஸ் எப்பொழுதும் எதிரி இல்லை பொதுமக்களுக்கு" "இவன் 300 pown திருடிட்டான் arrest பண்ணிருக்கிங்களே.."300" pown அவர் நேர்மையா தான் சேர்த்து இருப்பர்னு நீங்க சொல்லுறிங்களா "..."90% இருக்காது "..."அப்போ அவரை ஏன் சார் விசாரிக்கல"...என்றவுடன் அவர் சிரித்து விட்டு .."matharasi jyada sach math bolna" (மதராசி உண்மை அதிகம் பேசாதே) என்றார் ...

காலை 7 மணிக்கு அழைத்தேன் என் தாயிடம் .."டேய் இப்பவா நேரம் ...இப்போ தான் தண்ணி வரும்னு தெரியாதா..சரி டேய் நி கனவுல ...எங்கயோ போய் வெட்டியா மாட்டிக்கிற மாதிரி கணவு கண்டேன் ...பார்த்து பத்திரமா இரு " என்றால் என் தாய்...

இப்பொழுதும்  என்  பெயரை "மதராசி " என்றே  வைத்து  இருக்கிறார்  அவர் செல்பேசியின்  contacts லிஸ்டில் ...ரஜினி  படம்  மட்டும்  அல்ல  எல்லா  படத்துக்கும்  முதல்  நாள்  டிக்கெட்  எனக்கு  கிடைத்து  விடுகிறது ஓசியில்  :) சில  நாள்  அவருடனே  பார்த்து  இருக்கிறேன் ...அவர்  எனக்கு  ஒரு  நல்ல "நண்பன் டா "

MORAL:
பொறுப்பான இந்தியன் என்றால் போலீஸ் ஸ்டேஷன்க்கு செல்ல வேண்டும்
ஸ்டேஷன்க்குள் சென்றவன் எல்லாம் கெட்டவன் அல்ல..
போலீஸ்(SP) உங்கள் நண்பன் என்று தெரிந்து கொள்ள வேண்டும்
போலீஸ் மதிக்க பட வேண்டியவர்கள் ..கதைகளில் சினிமாவில் கேலி பொருள் அல்ல...





-SP