வெள்ளி, ஏப்ரல் 01, 2011

இனி தனியன் அல்ல நான்

காட்சி dos :

மாப்பிள்ளையாக மாறும் படலம்

ஒரு நாள் என் வீட்டுற்கு கால் வர..அதை எடுத்தவன் நான்,,,அம்மாவிடம் பேசுவதற்காக யாரோ ஒரு பெண்மணி பேச ...அந்த கால்ஐ அம்மாவிடம் கொடுத்து விட்டு கிளம்பினேன்...இப்படியே ஒரு வாரம் சென்றது, ஒரு நாள் எனக்கு ஒரு sms வந்தது அப்பா செல்லில் இருந்து "come hme @ 5 pm...we are going to c a gal for ur marriage"...வீட்டுக்கு வந்தவுடன்.."சீக்கிரம் கிளம்பு நேரத்துக்குள் போகணும் என்றால் அம்மா . Full hand shirt...scent(Axe effect ) ...belt...watch..Bracelet...chain எல்லாம் அணிந்து விட்டு போனேன் "Jos alukas model"போல

காட்சி tres :

பெண் பார்க்கும் படலம்

எத்தனை பேர் பஜ்ஜி சொஜ்ஜி சாப்படுறாங்க...atleast ஒருத்தனாவது வெளிப்படையா இருக்கானா? ..வந்தவுடனே நான் இன்னார் ..இன்னார் கம்பெனியலே வேலை பார்க்குறேன் இவ்வளவு சம்பளம் தான் பேசுறாங்க..Actually எல்லாரும் நான் நல்லவன் ஆக காட்டிகிறாங்க ..i dont need good guy at the midst of good guy..i need a good guy who is in the midst of bad guys.." என்று அலுத்து கொண்டால் heroine

நானும் அவளும் சரியாக 40 நிமிடம் தனியாக பேசிகொண்டோம் ...வெளிப்படையாக "தண்ணி அடிக்க chance கிடைச்சது இல்லை,so iam not a drinker"...என்று சொல்லிய ஒரு வெளிபடையான வாக்கியம் தான் அவள் சட்டு என்று சம்மதம் சொன்னால்..அவள் சொன்ன சம்மதம் தான் எனக்கு அவளிடம் "Ok" சொல்ல வைத்தது ..நான் இயல்பாக வெளிபடையாக இருப்பதை தான் அவள் விரும்பினால்.. நானும் அதை தான் விரும்பினேன்

காட்சி cuatro:

all arranged marriage is a love marriage படலம்... so hail love

நம்பர் வாங்கி கொண்டு...அவளுக்கு முதலில் அனுப்பிய SMS என் ஞாபகத்தில் "reached d hotel safely...so cool" ...அவள் எனக்கு அனுப்பிய முதல்SMS "appadiya?..Just thought nw 2 sms... Wen is d train?"...ட்ரெயின் நேரத்துக்கு அடுத்தSMS..ஸ்டேஷன்க்கு கிளும்புறோம் என்றும்...ஸ்டேஷன்இல் நிக்கிறேன் என்றும்..ட்ரெயின் வரல என்றும்...ட்ரெயின் எடுக்கtime ஆகும் என்றும்...lower berth அம்மாக்கு கிடைச்சாச்சு என்றும்..i miss uஎன்றும்..just tinking of uஎன்றும்...goodnightஎன்றும்..பல SMSகள் சென்றன

பல பெண்களை பெண் பார்க்கும் படலத்தில் பார்த்தேன்...ஏனோ இவளை எனக்கு பிடித்து போக...என்னால் இன்றும் சொல்ல முடியவில்லை...இவளை எனக்கு ஏன் பிடித்து இருக்கு என்று...நான் சும்மா பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட 631 rs டிக்கெட் எடுத்து பெங்களூர் செல்கிறேன் என்று நினைத்தேன்...but i have spent a worth என்று நினைத்து கொண்டு...அடுத்தநாள் முதல் daily அதே asusual காதல் புராணம் as the whole world loved... but SMSக்காக காத்திருப்பது ,SMSக்குபதில் சொல்வது,SMSஉரூவாக்குவது ..ஒவ்வொரு நிகழ்வுகளும்..அத்தனை காதலுடன் and அத்தனை யோசனைக்கு பிறகு செய்யப்படும் செயல் ..its like fresher creating an resume

காட்சி cinco:

Difference of opinion படலம்

Emailid வாங்கி கொண்டு விடிய விடிய பேசிகொண்டோம் ..பின்னர் ஆபீஸ்ல கூட chatwindow இல்லாமல் gmail inbox இருப்பதில்லை...பிறந்த கதை,வளர்ந்த கதை,தெரிந்த கதை,அன்றைய கதை, ஜப்பான் சுனாமி கதை, கிரிக்கெட் கதை எல்லாம் பேசிக்கொண்டே இருப்போம்..

ஏன் டா Emailid வாங்கினோம் என்றானது generalஆக விருப்பம் @ வெறுப்புக்களை கேட்டு கொண்டு இருந்த அந்த ஒர் chatஇல்

Hero: Fav actor??

Heroine: VIjay

Hero: :-(

Heroine; yen ma :-/

Hero; i hate vijayy x-(

Heroine: ajith fana ? #:-s

Hero: ofcourse,,,,நான் விஜய் படமே பார்த்தது இல்லை

Heroine: கண்டிப்பா நீங்க மாறனும் ..நம்ம கல்யாணம் ஆனவுடன் முதல் படம் விஜய் படம் தான் பார்க்கணும் :x

Hero: gotta work ..mess u later

என் chat sorry என்று வந்து இருக்க வேண்டும். கஷ்டப்படுத்த வேண்டாம் என்றே...gotta work என்றேன்

சினிமா தானே போகட்டும் என்றேன்..சினிமாவை பற்றி கேட்கும் போது...non veg வேண்டாம்" என்ற போது...non veg தானே போகட்டும் என்றேன்..உணவை பற்றி கேட்கும் போது..போகட்டும் போகட்டும் என்று சொல்லிய நான்...அத்தனை விசயங்களும் எதிர்மறையாக இருக்க...difference of opinion பல வர...அவசரப்பட்டு ஒத்துக்கிட்டுமோ என்று உள்மனது அவ்வபோது கேள்வி கேட்கும்..ஆனால் வீட்டில் நிச்சயதார்தத்துக்கு நாள் fix ஆயிருச்சு என்று என்னிடம் செய்தியை சொல்லும் போது.."All is fair in love and war" என்ற எண்ணமே தலை தூக்கியது

மனதுக்குள் ஒரு பயம் ...கல்யாணத்துக்கு பிறகு சண்டை தான் வாழ்கை ஆகுமோ ?...இல்லை வேலாயுதம் படத்துல விஜய் intro sceneல விசில் அடிப்பேனோ?...என் தலை பேட்டியில் “உங்கள் தீவிர fans எல்லாம் இப்போ விஜய் பக்கம் போறாங்களோ? " என்று கேட்க போகும் கேள்விக்கு ..."me and vijay are friends now...but ஒரு நடிகனை ரசிப்பதும் ரசிக்காம விடுறதும் அவங்க இஷ்டம்.i have my own army..இதுக்கு மேல நான் சத்தியமா பேஸ்மாட்டேன், நான் சத்தியமா சொல்றேன் சத்தியமா பேஸமாட்டேன்" என்று பேட்டி அழிப்பனோ

காட்சி seis:

நிச்சயதார்தம் படலம்

இரு வீட்டாரின் முதல் சுற்று உறவினர்கள் கூடி கொள்ள..முதலில் heroine ஹிந்திகார பொண்ணாக வர,பின்னர் நான் இங்கிலீஷ்காரதுறையாக வர...hindi gal weds english boy கல்யாண நாள்ஐ ஒரு mondayஇல் வைக்க..reception sundayஇல் வைத்தாக வேண்டும் என்று மாப்பிள்ளையாக நான் கட்டளை போட்டதற்கு ஏற்ப...கல்யாண பத்திரிகை வாசிக்கப்பட்டது

காட்சி siete:

Issue படலம்

Issue 1: எவ்வளவு செய்றாங்க?

வந்தவர்கள் சாப்பிடும் வேலையில்..."பொண்ணு வீட்டுகாரங்க எவ்வளவு செய்றாங்கனு சொல்லவே இல்லை?“..மாப்பிள்ளை கேட்க வேண்டாம்னு சொல்லிடார்ல“...இந்த காலத்துல யாரும் கேட்கிறதுல்லை அதற்காக இவங்க கொடுக்காம இருப்பாங்களோ?...அவளுக்கு அடுத்து தங்கச்சி இருக்கா இவளுக்கு செஞ்ச மாதிரி அவளுக்கும் செயனும்ல“..."பொண்ணு தான் S/w கம்பெனில வேலை பார்க்குதுல அப்பறம் என்னத்துக்கு?

Issue 2: Geographical location

"இவன் சொந்த ஊரு திருச்சி...பொண்ணுக்கு சேலம் ..ஆனா இப்போ பொண்ணு பெங்களூர்ல இருக்கு ..இவன் சென்னைல இருக்கான்...எனக்கு தெரிஞ்சவரை இவன் தான் பெங்களூர் போறேன்னு ஆபீஸ்ல கேட்டுஇருக்கான்..”இப்பவே அவ பேச்சை கேட்கிறான்..பொண்ணு சென்னை வந்தா என்ன?...பெரிய கலெக்டர் வேலை ? “,,,நாம எல்லாம் வீட்டை மட்டும் பார்க்கலா?...வேலை கிடைச்சா கிடைக்கி கிடைகாட்டி போகுது “

Issue 3: Color complexion

"பொண்ணு கலருக்கு மாப்பிளை எடுப்பாவே இல்லையே .".நீ வேற அந்த கோட் போட்டத்துனாலே தான் மாப்பிள்ளை மாதிரி இருந்துச்சு இல்லாட்டி...நம்ம தங்கதுக்கு முன்னாடி எல்லாம் ... "மாப்பிளை சொல்ல போன பித்தளை தான்...atleast வெள்ளி மாதிரியாவது பார்த்து இருக்கலாம்..அதற்க்குள இவ அவசரப்பட்டுடா...பொண்ணு மேல நம்பிக்கை வச்சு பெங்களூர் அனுப்பி இருக்கனும்..ஒரு கன்னடக்காரனை காதலிச்ச்ருவானு பயம்...அதனால தான் அவசரப்பட்டு கல்யாணம் பண்றா

காட்சி ocho:

யார் எக்கேடு போன என்ன படலம்..

வீட்டில் இந்த issue எல்லாம் பேசிக்கொண்டே இருக்க.. கல்யாணம் நடக்குமோ என்ற அளவுக்கு issue list ஆக... நானும் அவளும் smsகல் அனுப்பி கொண்டு இருந்தோம் ..“கல்யாணம் நடகம்மா போச்சு “barista cAPPUcCINOஎன்று நான் சொல்ல..."no cAPPUcCINO வேண்டாம்..Mousse cake தான்"..என்று அவள் சொல்ல..கல்யாணம் நடந்தால் நல்ல மனைவி கிடைப்பால் நடக்காமல் போனால் நல்ல தோழியாய் இருப்பால் என்ற நினைப்பில் அவளை orkutலும் facebookலும் தோழியாக மாற்றிவிட்டு... "relationship status" update செய்வதை விட்டுவிட்டேன் ...

காட்சி nueve:

அவள்(ன்) அப்படி ஒன்றும் அழகு இல்லை படலம்

"அவன் அப்படி ஒன்றும் அழகு இல்லை" என்று பாடும் அளவுக்கு தோன்றி இருக்கலாம் என்று அவளிடம் கேட்டதற்கு "நான் அழகான பையனை தான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சா...வெள்ளைக்காரன் தான் கல்யாணம் பண்ணனும் ..கன்னடகாரனே காதலிச்ச்ருவேன்னு தான் இப்போ கல்யாணம் பண்றாங்க... வீட்ல கன்னடக்காரனே ஒத்துக்கமாட்டாங்க, வெள்ளைக்காரனே ஒத்துக்குவாங்களா?...பொண்ணுங்க life இப்படி தான் ..அழகான பொண்ணுங்க வேணும்னு நீங்க நினைக்கிற மாதிரி நாங்க நினைக்க முடியாது... .பொண்ணுங்க life நினச்ச மாதிரி எதுவுமே நடக்காது..இதுல கல்யாணம் எல்லாம் நினைச்சா ரொம்ப ஓவர் அப்புறம் கல்யாணமே நடக்காது" .."உன்கிட்ட ஒரு உண்மையா சொல்லட்டா..Stop the feelings ...நீ அழகா இருக்கேன்னு யார் சொன்ன?...சத்தியமா நீ இல்ல...நீ தேவை இல்லாம sentiment dialogues எல்லாம் பேசாதே .."

காட்சி diez:

Rmkv யும் நானும் படலம்

தொட்டு தொடரும் பட்டு சாம்ராஜயத்தில் முகர்த்தபட்டு எடுக்க..கூடவே இனாமாக பட்டு வேட்டி தருவாங்காலா என்று விசாரிக்க “கிளிபச்சை வேண்டாம் ..இலை பச்சையிலே புடவை போடுங்க என்று கூட்டமே சொல்ல.. நான் முகுர்த்த பட்டு வேட்டி எடுக்க சென்று வாங்கி வந்த நேரம் .,RMKS sales man இலை பச்சையிலே Saree போட்டு கொண்டு இருக்க..கடைசியாக என்னிடம் கேட்டார்கள் எல்லாரும் முடிவு செய்த கிளிபச்சைSaree யை ..நான் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்ததால்..வாங்கி வந்தோம் இலைபச்சைSareeயை

காட்சி once:

எனக்கு முன் அவளா படலம்

காவலன் பட விமர்சனத்தை என்னிடம் பேசிக்கொண்டு இருந்தால்,,கேட்க பிடிக்கவில்லை என்ற போதும்..அவள் பேசுவதை ரசிக்க பிடித்து இருந்தது ..சட்டுன்று எங்கள் topic காதல்க்குள் செல்ல..என்னிடம் கேட்டால் "எத்தனை love failures??"..."உண்மைய சொல்லவா? பொய் சொல்லவா? என்றேன் ...உண்மை கொஞ்சம் பொய்யுடன்“என்றால்..அவளது பதில் பிடித்திருந்தது...ஆதலால் உண்மையை மட்டும் சொன்னேன் அவள் உண்மையை கூட பொய்யாக என்ன கூடும் என்ற நினைப்பில்..."I am not a hero among girls.. actually நான் எந்த பொன்னையும் தங்கச்சியா நினைக்கமாட்டேன்..நான் என் காதலை, என் காதலியா நினச்சா பொண்ணுகிட்ட கூட சொல்லமாட்டேன்...autograph hero போல காலம் தவறாம காதல் வந்துச்சு...ஆனா சூப்பரான விஷயம் எந்த காதலையும் சொல்லவே இல்லை...Actually நான் தாடி வளர்க்க ஆசைபட்டவன் ...யுவனின் காதல் தோல்வி பாடல்களை ரசிச்சு கேட்கணும்னு நினைச்சவேன் அதனால் தான் சொல்லல"

"அட பாவி சொல்ல தைரியம் இல்லாததை கூட எவ்வளவு positiveஆ சொல்றே ...why டா நீ சொல்லலா?...அதற்கும் reason வச்சிருப்ப but சொல்லாதது கூட எனக்கு நல்லது தான்... but என்கிட்டயாவது சொல்லுடா" ..."அதுல்லாம் சொல்லும் போது தான் சொல்லணும்..actualla பார்த்தா உன்கிட்ட சொல்லனும்னு தோனல but சொன்னால் தான் காதலா ,சொன்ன எதோ 194 7 love story மாதிரி இருக்கும்... so for us its no need "

காட்சி doce:

Bachelor party படலம்

நண்பர்கள் எல்லாரும் கல்யாணத்துக்கு வருவார்களா தெரியாது ஆனால் எல்லாரும் & invitation வைக்காத்தவனும் வர..அன்று இரவு குடித்தனம் போகும் என்னை குடிகுள்ளும் அழைத்து செல்ல நண்பி கேட்டபோது ..வேண்டாம் என்றே சொன்னேன்..ஏன் “வேண்டாம் என்று சொன்னேன் என்று தெரியவில்லை...இவ்வளவு நாள் வாய்ப்பு கிடைக்காமல் குடிக்காமல் இருந்தேன்..இன்று வாய்ப்பு இருந்தும் ,இன்று குடித்தால் தப்பு இல்லை என்ற "Rules" தெரிந்தும் .. வேண்டாம் என்றேன் ..இவ்வளவு நாள் ஒரு வேகத்தில் பெண்பார்க்கும படலத்தில் "Ok" சொல்லிவிட்டேனோ என்று நினைத்து கொண்டே இருந்தேன்...இன்று உணர்ந்தேன் அவள் என்னுள் இறங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது என்ற உண்மையை ...

(அவளை மனதார காதலிக்க ஆரம்பித்தேன் படலம் உள்அடக்கம்)

காட்சி trece:

சோதனை கால படலம்

சட்டு என்று எதிர்பாராத விதமாக வேலை போக... resumeகளை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு திருச்சிக்கு தெரிவிக்க அதே செய்தி சேலம் வரை செல்ல அதற்குள் செய்தியை பெங்களூர்க்கு நானே தெரிவித்தேன்..நான் திக்கி திக்கி failஆன அந்த விசயத்தை அம்மாவிற்கு தெரிவித்த 4ஆம் வகுப்பு நாட்களுக்கு சென்றேன்...அவள் சொன்னால் "டேய் இதற்கு போய் feel பண்ணிக்கிட்டு சாதாரண விஷயம் டா என்ற போது உணர்தேன், இது சாதாரண விஷயம் அல்ல..ஆனால் சாதாரணம் ஆக்கியவளிடம் கேட்டேன் “எப்படி உன்னால் மட்டும் இப்படி easyஆ எடுக்க முடியுது ?.. "Nothing is complicated..unless we think more"

வீட்டில் நிச்சயம் பண்ண கல்யாணம் நிக்க வேண்டாம் ,சொன்ன தேதியில் நடக்கட்டும் என்று பெண்வீட்டாரே சொல்ல...வேலை சென்ற விசயத்தை வெளியே சொல்லாமல்...நண்பர்களுக்கு தனிinvitation ..சொந்தத்துக்கு தனி பத்திரிக்கை என்று அடித்து அதை ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கதவையும் தட்டிதட்டி கூடுத்தோம் “மாப்பிள்ளை கல்யாணத்துக்கு இத்தனை நாள் leave போடாதிங்க..பின்னாடி பிரச்சனை ஆயிரும்“ என்று சொல்ல "No problem எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை“..என்ற பதிலை சொல்லிவிட்டே போனேன் அவள் கொடுத்த தன்னம்பிக்கையில்

காட்சி catroce:

என்னை அறிந்த படலம்

Sunday Evening

மீண்டும் சொந்தங்கள் பஸ் பிடித்து , ட்ரெயின் பிடித்து கார் வைத்து வந்தார்கள் இந்த இருவரின் கல்யானதுக்க்காக ...இப்படி கஷ்டப்பட்டு வர வேண்டுமா? என்று ஒருவர் கூட நினைக்கவில்லை...எனக்கு எந்த முகமும் தெரியவில்லை என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் தெரிந்து இருக்க ..இவங்க யாருன்னு தெரியல..இவங்க வீட்ல தான் முதலில் குடிஇருந்தோம்" என்று சொல்ல..இது எனக்கு வந்த கூட்டமே இல்லை...என் பெயரால் எல்லாரும் சந்தித்து கொள்ள...எல்லாரும் அன்பை வெளிபடுத்த ...புதிய சண்டை ஆரம்பித்து கொள்ள வந்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது..எனக்கு தெரிந்த முகங்களை தேடினேன் யாரும் இல்லை.. என் நண்பர்களை தேடினேன் ..

என் college கடைசி நாளில் என் autographbook எல்லாரும் எழுதிய வாக்கியம் "அந்நியா...உன் கல்யாணத்துக்கு invitation நீ கொடுகம்மா போன கூட நாங்க வருவோம்.. உன் wife கிட்ட உன்னை பற்றி உண்மைய சொல்லி...அன்னிக்கே divorce notice வர வைக்கிறேன்டா" என்றார்கள் ..."கண்டிப்பா உங்க wifeஐ பார்க்கணும் அந்த பாவம் செய்தவளை "என்றார்கள் ராஜதானி எக்ஸ்பிரஸ்இல் டெல்லி முதல் சென்னை வரை பயணித்த ரயில் சிநேகதிகள் ..முன்னால் ஆபீஸ் நண்பர்கள் இருவர் "gotta work man...happy married lifee"...என்று sms வர ...யாரும் வரவில்லை என்று தெரிந்தது ...sundayல கூட வேலை போல என்ற எண்ணம் ஏனோ வரவில்லை எனக்கு..

இவர்கள் யாரேனும் சொன்ன வாக்கியத்தை காப்பாற்றுவார்கள் என்று நினைத்தேன் யாரும் இல்லை என்றவுடன் , நான் இவர்களை கெட்டவர்கள் என சொல்லபோவதற்குள்...நான் தான் கெட்டவனாக இருந்திருக்கிறேன் என தெரிந்து கொண்டேன் ..அவள் நண்பர்கள் படைசூழ ..எல்லா போட்டோவிலும் ஒரு சோழகாட்டு பொம்மை போலவே நின்றேன் ...முடிந்தது அந்த இரவு ..என்னை யார்என்று அறிய வைத்த இரவு

காட்சி quince:

இனி நான் என்பது நான் அல்ல படலம்

MONDAY MORNING

கல்யாணம்..இந்த ஒரு தருணம் தான் என்னை 27வருடம் காக்கவைத்தது..இனி வாழ்வில் இவள் தான் என் துணை ..இவள் தான் என் வாழ்கை .இனி இவள் தான் நான்..என்ற என் என்னத்தை ஊர் அறிய உலகம் அறிய அறிவித்தேன்...10:12 am திங்கக்கிழமை அன்று, கல்யாணத்தில்உப்பு சரியில்லை,காரம் சரியில்லை..ஏன்? நானே சரியில்லை என்று மக்கள் இன்றும் பேசி கொள்ள. அவளுக்கு தெரிந்து இருக்கிறது சாப்பாட்டில் உப்பு சரிஅல்ல,காரம் சரிஅல்ல என்று..நான் சரியல்ல என்ற எண்ணம் ஏனோ பல பேர் சொல்லியும் அவள் காதுக்கு எட்டவே இல்லை.. ஒரு நொடியில் ஒருவனை எப்படி கணக்கு போடுகிறார்கள் என்ற வித்தை தெரியவில்லை..நான் அவளை “ok" செய்து விட்டு காதலிக்க ஆரம்பித்ததே பல மாதங்களுக்கு பிறகு தான்...இவர்கள் எதோ ஜோசியர் போல சொல்லி கொள்ள...யார் பேச்சையும் யாரும் உண்மையாக கேட்கவில்லை ஆனால் எல்லாரும் விடாமல் யாரை பற்றியோ பேசிக்கொண்டே இருந்தார்கள் ...கல்யானத்திற்கு வந்து விட்டு 4 கெட்ட விசயத்தை சொல்லாமல் போனால் காசு செலவழித்து வந்த அவர்களுக்கு என்ன சிறப்பு...செலவு செய்து தப்பாய் பேசுவதை கேட்காமல் போனால் நமக்கு என்ன சிறப்பு...அந்த விழாவுக்கு என்ன சிறப்பு

காட்சி dieciséis:

வேலாயுதமும் நானும் படலம்

ரெண்டே வாரத்தில் வேலாயுதம் ரிலீஸ் ஆக ...விஜய் ரசிகர்மன்றதலைவி கல்யாணம் செய்து விட்ட நினைப்பு வந்தது அவள் கையில் இரண்டு ticket இருந்தவுடன் ..non veg சாப்பிட வேண்டாம் என்ற கொள்கையுடவர்கள் egg சாப்பிடுவது போல...படத்தை பார்க்கவேண்டாம் ஒலிநாடா கேட்டால் தப்பு இல்லை என தலை பேசுவேன் என்பது போல ..படத்தை பார்க்கவில்லை கடைசி வரை...பேச வாய்ப்பு இருந்தும்dts இசையால் பேசாமல் இருக்கும் தருணம் ,பேச வாய்ப்பு இருந்தும் பேசிக்கொள்ளும் தருணத்தை விட இன்பம் ஆனது ..பக்கத்தில் இவள்...எதிரில் என் வில்லன் யாரை கடைசி வரை பார்த்தேன் என சொல்ல வேண்டுமா ? நாளை என் பொண்ணு daddy which movie u saw first with mum?" என்ற கேள்விக்கு "வேலாயுதம்" என்று சொல்வேன்...என் பொண்ணுக்கு தெரியும் நான் தீவிர தலfan என்று ஆனால் நான் முதலில் பார்த்த படம் என் மனைவிக்கு பிடித்த படம் என்றவுடன் என் காதலை போல அவளும் உருக உருக காதலிக்கட்டும்

காட்சி diecisiete to Last Climax Scene :

மெகா சீரியல் படலம்

காட்சிகள் இன்னும் உண்டு @ நிறைய சொல்லவேண்டும் @ நிறைய கத்து கொண்டேன் “தனியாக நின்றாலும் அவள் நினைவுடனே நில்..“வேகமாக நடக்காதே.. அவளுடன் போகும் போது...மற்ற பெண்ணை பற்றி மனைவியுடம் புகழாதே..”ஊடல் பாதி காதல் பாதி என்று வாழ்ந்து விடு ..ஆண் சொல்வதை பெண் கேட்க வேண்டாம் “...மனைவி சொல் மந்திரம் இல்லை...தந்திரமும் இல்லை...உன் முன்னால் காதலியின் பெயரை உன் பெண் குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று அடம் பிடிக்காதே...சேமித்து வைத்ததை செலவழித்து மீண்டும் சேமிக்க துடித்து சேர்த்து வைத்து செத்து போகும் வரை காதலித்து வாழ்... நிறைய விசயத்தை சொல்லாமல் நிறுத்துகிறேன்.

Moral:

For eloping lovers...Dont miss dis much intersting scenes in ur life

All bachelors who have not got ur love

Strictly this moral is for who @ age 27

Attend all marriage and get ur marriage soon and Send me ur invitation wen i am @ 27

Moralக்கும் இவ்வளவு நேரம் படிச்ச கதைக்கும் சம்பந்தம் இல்லையா?,,Sorry forgot to add காட்சி uno(FYI "UNO"...dis text is not text..its "1" in Spanish ) Ref:http://www.spanish-talk.co.uk/spanish-vocabulary/spanish-numbers/1-20/)

காட்சி uno :

தம்பி கல்யாணத்தில் அண்ணன் படலம்

பெரியம்மா பையன் @ எனது தம்பி கல்யாணத்துக்கு கிளம்ப வேணும் என்று கட்டளையிட்டால் என் ஊரில் இருந்து வந்த என் தாய் மறுப்பு எதுவும் பேசாமல் @ பிடிக்காமல் கிளம்பினேன்... அப்பா 8மணிக்கு மண்டப்பத்தில் இருப்பேன் என்று சொல்லிவிட்டார்...

i hate relatives..ஞாபகமே இல்லாதவர்கள் "எப்படி இருக்க ஞாபகம் இல்லையா? நான் தான் உன் அத்தை“ என்பால் அத்தைக்கு பெண் இருந்தால் அடுத்த முறை ஞாபகம் இருக்கும் இல்லையென்றால் அடுத்த முறையும் இதே கேள்வி தான்..receptionல் வாங்கி வந்த காமாட்சி விளக்கை கையில் வைத்து queueவில் நகர்ந்தேன்..அம்மா பிஸியாக யாரோ ஒரு சிவப்பு சேலை கட்டிய பெண்மணியிடம் பேச..அவள் மஞ்சள் சேலை கட்டிய பெண்மணியை அழைத்து வர.. எனக்கு அவர்கள யார் என்று தெரியவில்லை ,,நீண்ட Queueவை நான் தலைமை ஏற்க ஆஜர் ஆனார் அப்பா & அம்மா Photoக்கு,..மணமகனுக்கு@ தும்பிக்கு "happy married life" என்று சொன்னேன்...அவன் “உங்களுக்கு எப்போ?....கல்யாணத்துக்கு வருவேன் ஆனா சாப்பிட மாட்டேன் SO கவலையில்லாமல் கல்யாணம் பண்ணுங்க“ என்றான் என்னிடம்...அவன் மனைவியுடம் “இவர் தான் அந்த கஞ்ச அண்ணன்..சொல்லிருகேன்லஎன்றான்...அவள் என்னை வெட்கப்பட வைக்கவே சிரித்தால்.. அம்மா & அப்பாவின் சென்னை பயணம் ரெண்டு வாரம் ஏதோ ஒரு காரணத்துக்காக நீடித்தது...

பின்குறிப்பு : மஞ்சள் சேலை கட்டிய பெண்மணி "என் இன்ணாள் மாமியார்"," சிவப்பு சேலை கட்டிய பெண்மணி “என் வீட்டையும் அவள் வீட்டையும் இணைத்த நல்லவள் “

நன்றி :

என்னை அழைத்த,invitation கொடுத்த ,invitation கொடுக்காத ,என்னை மதித்த ,என்னை மதிக்காத அத்தனை நல்லவர்களுக்கும்

ஒன்று அல்ல இரண்டுஅல்ல 86% கல்யாணத்தை attend செய்தSPக்கும், SP யின் அனுபவத்துக்கும்

By SP