செவ்வாய், ஜூன் 22, 2021

கலங்காதிரு என் மனமே

கண்ணே கண்மணியே
காலை கண் விழிப்பேன்
கலங்காதிரு கண்னே,
காலை கண் முழிக்க மறந்துவிட்டால்,
மருகாதே,
மறவாதே,
நி கண் தூங்கும் ஒவ்வொரு வேளையிலும்,
மறவாமல் நான் வருவேன்,
பேசாத கதை எல்லாம் சொல்லி போவேன்,
நனையாத நிலத்தை நனைக்கும் மழை போல,  
மின்னல்கள் தாக்கினாலும்,
இடிகள் இடித்தாலும், 
உறங்காத உன் மனதை உறங்க வைப்பேண்டி,
இது சத்தியமடி,
இது நி என்னுள் இருக்கும் என் மேல் சத்தியமடி.

கண் விழித்திடத் தான் ஆசை,
உன் கை கோர்த்து நடந்திடத் தான் ஆசை
ஆசைப்படவதை எல்லாம் செய்திடத் தான் ஆசை,
ஆசை மகனை பார்த்துவிடத் தான் ஆசை,
உன் முன்னே,
உன் கண்முன்னே,
மன்னை விட்டுபோய்விடத் தான் ஆசை,
நி மரித்து
நான் வாழவாழ்நாள் ஒன்று வேண்டாம்,
அந்த நாழிகை ஒன்றும் வேண்டாம்.

எமா,
பக்கத்தில் படுக்கையில் இருப்பவள் என்னவள் தான்,
நான் அவளுக்குள் இருப்பதால் அவளிடம் செல்லாதே,
அது நான் அல்ல,
என்னுள் அவள் இருப்பதால்,
நான் யார் என்று குழம்பி போகாதே,
நான் எங்கே என்று தேடி தொலையாதே,
நி பூவா தலையா போட்டு அள்ளி செல்லாதே
பூ அவள் , விட்டு விடு,
போய் அவளிடம் சொல்லி விடு,
நி அழைத்து போவது,
என் உடல் மட்டும் தான்,
மணம் என்றும் போல் சுற்றி திரியும் ,
அவளிடம் மட்டும் தான்.

என்னவளே போய் வருகிறேன்,
போய் பேயாக வருகிறேன்,
நி என்னுடன் 100 வருடம் வாழ வேண்டி,
வரம் கொடுக்காமல் போன,
கடவுளாக மட்டும் வர மாட்டேன்,
கண்ணீர் கடலில் நீந்த வைக்க மாட்டேன்,
காற்றில் கோலம் உன்னை வரைய விட மாட்டேன்,
கால போக்கில் காற்றில் கரைய மாட்டேன்,
நீருக்குள் உப்பாய் கரைந்து விடுவேன்,
உனக்குள் கலந்து விட்டதால்,
கலங்காதிரு என் மனமே.

-SP

கருத்துகள் இல்லை: