வெள்ளி, ஜூன் 02, 2023

மரித்தல்லும் !! மரித்தல் நிமித்தமும்!!

ஒர் கற்பனை,


பிறந்த எவரும் மரிப்பர் ,  

என் மரண செய்தி வந்தால் ,

அதுவும், புதன் அதுவுமாய் வருமாயின்,

புதனிலா இறப்பேன் என பழிப்பான்,  என் அலுவக தோழன்,

சொத்து பிரச்சனை இனி தொல்லை இல்லை
என்பான் தமயன்,

கிண்டல் செய்ய ஆள் இல்லை,
என நிம்மதி பெறுமுச்சு விடுவாள் அக்கா, 

பழித்து கொண்டே வருவான் , மாமன் ,
UKல் இருந்து, ticket செலவால் அக்காவுடன்,

யாரிடம் ATM கார்ட் கேட்க, 
தவிப்பாள் காதல் மணைவி,

நான் செய்த பாவம் ,
பழி திர்தது என்பான் எதிரி,

நாத்திக பேச்சுக்கு இது தான் , 
கடவுளின்  தண்டனை என்பான் உற்றார், 

YouTube Live Streaming இல்லையா 
என்பான் உறவினர்,

சிறு நாட்களில் மறந்துவிடுவான் மகன்,

ராஜா இல்லாத , இந்த பட்டத்து இளவரசிக்கு
என்ன லாபம் இனி??, என திட்டுவாள்  மகள்,

பெண்  சாபம் பொல்லாது,
நீதி  வென்றது  என்பாள் என் EX,
RIP Status போட்டு முடித்து விடுவார்கள் கானல் தோழர்கள்,

கூட்டம் பெரிதாய் இல்லை என Comment போடுவார்கள் 
Online Streamerகள்,

JIRA Update செய்யாமல் இறந்துவிட்டான் 
என்பான் manager, 

WhatsApp Group nameகள்  ஒரு நாளுக்காக மாற்றபடும்,
நேற்று வரை என்னை  பழித்த உலகம்,
நானும் ஒரு நாள் நல்லவன் ஆவேன்,
கடற்கரையில் எழுதிய பெயரை போல ,
நாட்கள் நகர நகர நான் மறந்து போவேன் 
என் தந்தையை யாவரும் மறந்த்து  போல ,

மரணத்தை விட,  சடங்ககுளும் 
மரியாதை நிமித்தங்களும் ,
சங்கடமாய் போவதால், 
நான் இன்னொரு வருடம்... 
வாழ வேண்டி கொள்க... என் செல்லங்களா… 
வாழ்ந்தாலும் ,வாழ்ந்து விடுவேன்...
ஏணியா  இருக்கு ஏறி  செல்ல.


- இவன் 
- SP
Born on : 02/06 :)
Wanted death on : 02/06  :)
But , Still Living, hence posted  ON : 02/06 :) 


திங்கள், மே 02, 2022

சுயநலவாதி நான்

 வாகை நி சுடிய போது,

வாழ்க்கை பயனத்தில் நி ஏறிய போது,

தட்டி தாவி நி வாடிய போது,

துளி துளியாய் கண்ணிர் நி சிந்திய போது,

தூர பயணம் நி சென்ற போது ,

காலை பொழுது நி கலங்கிய போது,

மாலை பொழுதில் நி சிரித்த போது,

நாளைய நாளை நி எதிர்பார்த்த போது,

நேற்றைய நாளை நி எரித்த போது,

சிரிப்புக்குள் நி சிறை சென்ற போது,

கவலைகள் கானதூரம் நி அனுப்பிய போது,

கோபத்தை நி தூங்க வைத்த போது,

வாதத்தில் நி வென்ற போது,

கண்ணாடி முன் நி பெருமை பட்ட போது,

நில்லாமல் நி வேலைய செய்த போது,

பிழை இல்லாமல் நி வாழ்ந்த போது,

நி உண்மையா இருந்த போது,

எழுதாத கவி, 

இன்று எழுதியது ஏன் ?

என் வழக்கம் போல்

உன் நினைவுகள் தாக்கி

முன் நகராமல்

நின்றதால் மட்டுமே .

சொல்லாமலேயே விட்டு விடலாம்

சுயநலவாதி நான் அப்படி இருப்பேனா ??


====
SP
===

செவ்வாய், டிசம்பர் 28, 2021

Sundayயில் சண்டை

சண்ட போட்டோம்... 
சண்டே அதுவுமா சண்ட போட்டோம்!!! 
சண்டே அதுவுமா... ஏன் சண்ட என்பார்கள்? 
சண்டேயில் சண்ட குற்றமா ? இல்ல 
சண்ட குற்றமா ? இல்ல
சண்டேயே குற்றமா? 
புரியல தானா... 

சண்டேயில் பேசி 
சண்டையில் ஆரம்ப்பிதால் சண்டே குற்றமா??? 
இல்ல
சண்டையில் ஆரம்பித்து 
சண்டேயே முடிவதால் சண்டேயை குற்றமா???

 நாளுக்கு ஒர் சண்டே, என்று இருக்க, 
 ஆளுக்கு ஒர் சண்ட, போட்டு வெறுக்க,
 சண்டய சாமளிக்க முடியாமல், 
 சண்டையில் சாமதானம் எட்டாமல், 

சண்டேயும் சண்டையும் 
சுகமாக முடிய வேண்டி, 
சண்டேயில் நாலு பேரே வர சொல்லி, 
அந்த சண்டேயில் , சண்டய விளிக்க, 
சண்டே அன்று , 
சண்டய ஏன் போட்டோம்?? 
என்று விவரிக்க, 
ஆள் ஆளாக்கு சண்டய பெருசாக்கி,
சண்டேயே நான் மட்டும் வெறுக்காமல் 
சண்டேயும் சண்டயும் அவர்களும் வெறுத்து, 

சண்டயே ஊருக்கே 
விளக்கினது தான் மிச்சம், 
வீண் சண்டையால்,
வீண் சண்டே ஆனது  தான் மிச்ச்ம். 

மோசமான சண்டய தீர்க்க முடியாமல், 
மிச்சமான சண்டேயே 
அவர்கள் வாழ செல்ல, 
மொத்தமாக சண்டே வினாகி நிற்க.. 
சண்டேயும் சண்டையும் முடிந்தது. 
எவ்வாறு என்று எண்ணாதே.. 

மண்டே வந்தது  
மண்டை பிழைத்தது. 
        - (PS: கண்டிப்பா Part 2 க்கு lead :) )

சண்டைக்கு ஏது சண்டே? மண்டே? 
சண்டைக்கு, சண்ட போட தான் தெரியும். 
சண்டே முடிய , மண்டேயால் தான் முடியும், 
சண்ட முடிய, மண்டையால் தான் முடியும். 
அது தெரிந்தும் , 
சண்ட போட்டோம், 
சண்டே அதுவுமா சண்ட போட்டோம்!!!.

in SPira tion :: 
cITIZEN mOVIE "i lIKE U" sONG , 
"KADHALUKU ETHU SUNDAY MONDAY"

====  
SP
==== 

செவ்வாய், ஜூன் 22, 2021

கலங்காதிரு என் மனமே

கண்ணே கண்மணியே
காலை கண் விழிப்பேன்
கலங்காதிரு கண்னே,
காலை கண் முழிக்க மறந்துவிட்டால்,
மருகாதே,
மறவாதே,
நி கண் தூங்கும் ஒவ்வொரு வேளையிலும்,
மறவாமல் நான் வருவேன்,
பேசாத கதை எல்லாம் சொல்லி போவேன்,
நனையாத நிலத்தை நனைக்கும் மழை போல,  
மின்னல்கள் தாக்கினாலும்,
இடிகள் இடித்தாலும், 
உறங்காத உன் மனதை உறங்க வைப்பேண்டி,
இது சத்தியமடி,
இது நி என்னுள் இருக்கும் என் மேல் சத்தியமடி.

கண் விழித்திடத் தான் ஆசை,
உன் கை கோர்த்து நடந்திடத் தான் ஆசை
ஆசைப்படவதை எல்லாம் செய்திடத் தான் ஆசை,
ஆசை மகனை பார்த்துவிடத் தான் ஆசை,
உன் முன்னே,
உன் கண்முன்னே,
மன்னை விட்டுபோய்விடத் தான் ஆசை,
நி மரித்து
நான் வாழவாழ்நாள் ஒன்று வேண்டாம்,
அந்த நாழிகை ஒன்றும் வேண்டாம்.

எமா,
பக்கத்தில் படுக்கையில் இருப்பவள் என்னவள் தான்,
நான் அவளுக்குள் இருப்பதால் அவளிடம் செல்லாதே,
அது நான் அல்ல,
என்னுள் அவள் இருப்பதால்,
நான் யார் என்று குழம்பி போகாதே,
நான் எங்கே என்று தேடி தொலையாதே,
நி பூவா தலையா போட்டு அள்ளி செல்லாதே
பூ அவள் , விட்டு விடு,
போய் அவளிடம் சொல்லி விடு,
நி அழைத்து போவது,
என் உடல் மட்டும் தான்,
மணம் என்றும் போல் சுற்றி திரியும் ,
அவளிடம் மட்டும் தான்.

என்னவளே போய் வருகிறேன்,
போய் பேயாக வருகிறேன்,
நி என்னுடன் 100 வருடம் வாழ வேண்டி,
வரம் கொடுக்காமல் போன,
கடவுளாக மட்டும் வர மாட்டேன்,
கண்ணீர் கடலில் நீந்த வைக்க மாட்டேன்,
காற்றில் கோலம் உன்னை வரைய விட மாட்டேன்,
கால போக்கில் காற்றில் கரைய மாட்டேன்,
நீருக்குள் உப்பாய் கரைந்து விடுவேன்,
உனக்குள் கலந்து விட்டதால்,
கலங்காதிரு என் மனமே.

-SP

விவேக் கம் ப்லீஸ்


“குப்பை தொட்டியில் கட்டு சட்னியுடன் இட்லி வீச” 
வேண்டும் என்று மனிதாபிமானம் கற்ப்பித்தவனே,
“Don’t worry be happy”என்று பாடம் கற்ப்பித்தவனே,
“Awaas anjing”யிடம் உசாரா இருக்க சொன்னவனே ,
“உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா” 
என்று மரம் நட்டவனே,
எங்களுக்கு “கோபம் வந்தால் தமிழ் வரும்” என்று தெரிந்தவனே,
“லெமுரியா கண்டத்தில், எங்கள் ,
குடும்ப பாங்கான பெண்களை தேட” சொன்னவனே,
என் விட்டில் Bore போட்டால் US காரன்
 வர கூடும்  என்று சொன்னவனே,
“Take DIVERSION” மூலம் திருப்பதி போனவனே,
“ஒரு எலும்பச்சிம் பழம் மூலம் லாரி” ஒடுமா என்று சொன்னவனே,
“சென்னை போடா வென்னை”
 சொல்லகூடும் என்று சொன்னவனே,

“Retire ஆன பிறகு எதற்கு watch” என்று உன்மையே சொன்னவேனே,
“Passport size photo விற்கு shorts போட்டு”
கூட போகலாம் என்று Trend இருக்க  சொன்னவனே,
ஜாதி இல்லை என சொல்லிவிட்டு, 
"கோனார் NOTES" எதற்கு என்று கேட்டவனே,
Gym போனாலும் காது வளராது என்று உன்மை சொன்னவனே,
Mind voice என்று நினைத்து நாம் உலர கூடும் என்று சொன்னவனே,
“எண்ட State கேரளா ஆனோ” 
என்று தமிழனுக்கு
கேரளா பெண்கள் பிடிக்கும் என்று உன்மை சொன்னவனே,
“எப்பிடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” என்று 
பழைய photo பார்த்து நம்மலை நாமே சொன்ன வைத்தவேனே,
“இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்” 
சொல்லியதால் தானா இன்று உனக்கு பால் ஆனதா ,
“பட்டையா போட்டாயா ? நாமத்தை ? போட்டாயா ” 
யாரும் உன்னை காப்பற்றவில்லேயே.

#RIPVivek
#SP

வெள்ளி, ஏப்ரல் 16, 2021

காரணம் ஆயிரம்

 


கேளாத ஒரு செய்தி ஒன்றை கேட்டேன்,

விளங்காத ஒரு பாடல் பாடியே,

நம்பாத ஒரு கதையை சொன்னான்,

நம்பினால் தான் ஊரு சொந்தம் என்றான்,

பின் நம்பி, 

ஒரு நாள் விம்பி,

விரும்பி வெளி நடப்பும் செய்தேன்,

இருந்த போது என்ன நடந்ததோ,

இல்லை என்று சொன்ன போதும் அதே.


அவன் அற்புதம்  ஒன்றை நிகழ்த்தினான்,

நான் தீ குளிக்கும் நாளில்,

மழை கொட்டி தீர்க்க,

என் உயிர் அவனிடம் போய்,

மழையால் திரும்ப, என் உயிர் என்னிடத்தில் ,

மழையால் மயிரிலையில், என் உயிர் என்னிடத்தில் .

மயிரிலையில்அர்த்தமும் புரிந்தது,

இந்த மழை, லீலை மழை அல்ல,

இந்த மழை, காற்று அழுத்தத்தால் வந்த மழை,

காற்றுக்கு மன அழுத்தம் தரும் சமூகத்தில்,

எனக்கு வராமல் இருக்குமா ?

காற்று என் வசம் வாசம் வீசாமல் போனது , 

கவனமாய் , இலவசமாய், இன்னொருவனுக்கு.


அவசர உதவி செய்வான் என்பான்,

ஆபத்தில் அழைத்தேன்,

ஆயாசமா வந்தான்,

வருவதற்குள் , 

நான் ஆகிவிட்டேன், சாமியாக.


படித்து பார்த்து ,முன்ஜென்ம பாவம் என்றான்  ,

யோசித்துப் பார்த்தால், என் கர்மா என்பான்,

கருமத்திற்கு என்ன பெயர், 

என் கிரகம், என் நரகம் என்றான்,

காரணம் எதுவோ, 

என் நரகத்தால், இன்று எனக்கு சொர்க்கம், 


இருப்பவன் இருப்பான், 

இயலாதவனை இருப்பதாய் சொல்லி,

காப்பான் என்பான்.

காத்துவாக்குல காத்துவிட்டால் லீலை என்பான்,

இல்லையெனில்,

இதற்கு பெயர் திருவிளையாடல் என்பான்,

நம்பவில்லை என்றால்,

முன்னோர் செய்த குற்றம், என் பாவம் என்பான்,


என் பாவத்தில் விளைந்த வைரங்களே,

என் வரும்காலமே, 

நினைவில் வை, 

தோல்விக்கு  காரணம் ஆயிரம்,

உன் வெற்றிக்கு நான் தான் காரணம்

நம்பவில்லையா ,

உன் சாமி பட்டியலில் நானும் ஒருவன்.



-இவன்  

SP

 



திங்கள், பிப்ரவரி 22, 2021

கிழமையில் ஞாயிறு வரம்


பள்ளிக்கு அரை நாள் கூட போக வேண்டாம்
என்ற நினைப்பிலேயே தூக்கம் வருவதினால் அல்ல...
ஏனோ அன்று மட்டும் சனியனே எந்த்திரி 
என்ற வாசகம் கேளாமல் எந்திரிபதால் அல்ல...
அன்று மட்டும் என் தந்தையை முழு நாள் 
முழுவதும் வீட்டிலயே பார்ப்பதினால் மட்டும் அல்ல...
கிழமையில் ஞாயிறு  வரம்.

பல் பிரஷ் தேயும் வரை தேய்த்து..
ரொம்ப நேரம் குளித்து..
காலையில் டிவி ரிமோட் சண்டை இல்லாமல்..
சினிமா பார்ப்பதினால் மட்டும் அல்ல..
கிழமையில் ஞாயிறு  வரம்.

அன்று என் கையில் ருவாய் பத்து வரும்
10 அடி தூரத்தில் என் வாத்தியாரின் கடை 
என் வேலை 4 முட்டை வாங்க...
சில்லறைக்காக பப்புல் கம் வருவதினால் அல்ல..
கிழமையில் ஞாயிறு வரம்.

அம்மா அன்று மட்டும் சமையல் அறையிலே இருப்பதினால் அல்ல.. 
பிரியாணி எல்லாம் வராது
வெறும் சாதம் தான் வரும் 
நான் வாங்கிய முட்டை... 
முட்டை குழம்பாய் உருமாறி வீடே 
உன்ன போவதினால் அல்ல....
கிழமையில் ஞாயிறு  வரம்

மணி 1 :30 
இந்த மணியில் 
சாதம் தட்டில் இருக்கும் 
பக்கத்தில் நீர் இருக்கும்
முட்டை குழம்பு சாதத்தில் இருக்கும்
அம்மா அப்பா தங்கை எதிரில் இருப்பர் இருந்தும் அன்று...
என் மணம் தட்டில் வைக்க வேண்டிய 
ஐட்டத்தை Hot boxஐ துறந்து 
அப்பா பரிமாறும் நொடிக்குத் தான்.

பாவம் கோழிக்குத் தான்...
அந்த நாள் வரம் அல்ல சாபம்.

 -SP